வெள்ளி, 2 அக்டோபர், 2009

அழைப்பு மணி!


சாலையில் கை கோர்த்து செல்லும்
காதலர்களை முன் சென்று பார்க்கிறேன்!
நனறி கடவுளே!
இதில் பெண்ணவள் என்னவள் இல்லை!


தொலைபேசி அழைக்கும்போதும்
அழைப்புமணி ஒலிக்கும்போதும்
வந்திருப்பவர்களுக்காக மகிழாத மனது
வராத உன்னை எண்ணி வருந்துகிறது !


கைபேசி ஒலிக்கும்போது மனது
உன் பெயரை சொல்லும் - ஆனால்
திரை நண்பனின் பெயரை காட்டும்போது
மௌனமாகிறது என்
கைபேசியும்! உதடுகளும்



என்றேனும் நீ அழைப்பாய் என வாங்கிய
கைபேசியும் உன்னிடம் மட்டும் பேசுவது
என்றிருக்கும் என் மனதும் வீணாகிக் கொண்டிருக்கிறது!
அவை இறந்துபோகும் முன்

ஒருமுறையாவது
அழைப்பாயா?


-----செ. சுந்தரராஜன்

6 கருத்துகள்:

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

கவிதை அருமையாக உள்ளது!!!

அப்புறம் இந்த Word verification ஐ எடுதுடுங்க பாஸ்!!!

அப்போ தான் சுலபமாக கமெண்ட் இடமுடியும், இடுவார்கள்!!
( சின்ன தகவல் அவ்வளவு தான்)

கார்க்கிபவா சொன்னது…

முதல் முறை வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்

rajan சொன்னது…

நனறி!
கார்கி மற்றும் அனிமா!
தொடர்ந்து வாருங்கள்!

rajan சொன்னது…

//அப்புறம் இந்த Word verification ஐ எடுதுடுங்க பாஸ்!!!//

எப்படி எடுக்கிறது?
ஹி!ஹி ! நான் சின்ன பையன்!

விக்னேஷ்வரி சொன்னது…

நல்லாருக்குங்க கவிதை.

rajan சொன்னது…

நனறி விக்னேஷ்வரி!
தொடர்ந்து வாருங்கள்!