புதன், 18 நவம்பர், 2009

ஒரு பாடல்! ஒரு விளம்பரம்!ஒரு நிகழ்ச்சி!

அந்த அடை மழை நாளில் தொலைகாட்சி என் கைகளில் சிக்கிய வேளையில் சட்டென்று ஒரு சேனலில் என் பார்வை நின்றது.  ஈரம் படத்தின் பாடல் அது, நிஜ மழை தந்த கடுப்பையெல்லாம் அந்த பாடலில் படமாக்கப்ட்டிருந்த மழை மறக்க வைத்தது. பெரும்பாலும் நீங்கள் அந்த பாடலை பார்த்திருக்க கூடும் எனினும் இதோ என் மகிழ்ச்சிக்காகவும் உங்களுக்காக....



---------------------------------------------------------------------------------------
ஹிரித்திக் ரோசஹ்னக்கு என்ன வயது இருக்கும் என்று தெரியவில்லை! என்னமாய் ஆடுகிறார் மனிதர். அந்த  புதிய ரிலையன்ஸ் விளம்பரதைதான் சொல்கிறேன் . இசையும் ஒளிப்பதிவும் ச்சே!வாய்ப்பே இல்லை . நான் முதலில் இந்த விள்மபரத்தின் இசையை மட்டுமே கெட்டு கொண்டிருந்தேன் . இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அந்த எலிகளாக மாறும் விஷயங்கள் என்னவென்று புரிகிறதா ? (புரிந்தவர்கள் பின்ன்டூங்களில் சொல்லுங்கள்)ஹோட்ஸ் ஆப் ஹிரித்திக் .

----------------------------------------------------------------------------------
விஜய்  டிவியில் மாலை 6.30 க்கு நாங்கதான் சூப்பர் ஸ்டார்ஸ் என்று ஒரு சீரியல் ( என்று நினைக்கிறேன்), அதில் ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் ஒரு தந்தையின் மன நிலையையும், அதற்க்கு பிறகு அவரிடம் மாற்றத்தை உணரும் அந்த சிறுமியின் மன நிலையையும் மிக எதாதார்தமாக படமாக்கி இருந்தனர். அருமை, முடிந்தால் நீங்களும் (ஒரு நாள் மட்டும்) பாருங்கள்....
---------------------------------------------------------------------------------
ரொம்ப  நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன், வோட்  போடுங்கப்பா!


...............செ.சுந்தரராஜன்..............

செவ்வாய், 10 நவம்பர், 2009

வர்ட்டா! வர்ட்டா! வர்ட்டா!என் ஊரே வர்ட்டா!

             என் திண்டுக்கல் வாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த வேலை முடிந்ததால் மீண்டும் கும்பகோணத்திற்கே செல்கிறேன். நினைத்து பார்த்தால் திண்டுக்கல் என் வாழ்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை அளித்திருக்கிறது.  நான் வலைபதிவு உலகிற்க்குள் நுழைந்ததே இங்கு வந்த பிறகுதான்.என்னதான் ஊருக்கு செல்வதை நினைத்து மகிழ்ந்தாலும் இங்கு கிடைத்த நண்பர்கள் லெனின், ஆண்டோ, விஜயகுமார் (வழக்கறிஞர்) எல்லாரையும் (யப்பா! எல்லார் பேரையும் போட்டாச்சு) விட்டு செல்வதை நினைக்கையில் மனது கனத்து போகிறது.    
-----------------------------------------------------------------------------------------------
                  திண்டுக்கல்லில்  இருந்த வரையில் (இன்று வரை) அண்ணனின் வீட்டில் தங்கி இருந்ததால், அவரின் பெண் குழந்தை k.g - II படித்து கொண்டிருக்கிறாள். அவளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட நான் செல்வது வழக்கம், தினமும் ஏதாவது ஒரு விசயத்திற்காக   என்னிடம் சண்டையிடும் அவள், நான் ஊருக்கு செல்வது அறிந்ததாலோ என்னவோ இன்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். அவளின் புன்னகை என்னை இங்கே இருக்க சொல்கிறதா? அல்லது நான் ஊருக்கு போவதிற்காக மகிழ்ச்சியா? தெரியவில்லை. ஆனாலும் அவளின் புன்னகை..
பெரியவர்கள் புன்னகைக்கும் போது அழகாக தெரிகிறார்கள்.
குழ்ந்தைகள்  புன்னகைக்கும்  போது புன்னகை அழகாக இருக்கிறது...         

இது அவள் இல்லை 
------------------------------------------------------------------------------------------------------    
 இனி தொடர்ந்து பதிவு எழுவது கொஞ்சம் கடினம்தான், முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ( ஏன்? நாங்க சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா?). நேரம் கிடைத்தால் உடனே வலைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.  எனவே அடுத்த பதிவுக்கு சிறிது நாள் ஆகலாம், உங்கள் பின்னூடகளுக்கு பதிலளிக்க நேரமானால் யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் (என்னமோ பின்னூட்டமா கொட்ற  மாதிரி).


மீண்டும் சந்திக்கலாம்



இது நான் தாங்க! 
--------செ.சுந்தரராஜன்--------


திங்கள், 9 நவம்பர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! ஸ்ரீ பெரும்புதூர்

             நான் சென்னையில் இருந்த அந்த ஆறு மாத காலத்தில் எனது வார இறுதி நாட்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர் ஆக்ரமித்து கொண்டது, எனது மற்றொரு அத்தை இங்குதான் உள்ளார். நான் ரசிக்கும் ஊர்களில்  இந்த ஊர்க்கென்று தனி இடமுண்டு. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் ஊரினை (ஊருக்கு வெளியிலதான், காஞ்சிபுரம் செல்லும் வழி) ஆக்ரமித்திருந்தாலும் அமைதியான ஒரு நகரம் (??).
ஸ்ரீ பெரும்புதூர்
             பொதுவாக பெரிய ஊர்தான் என்றாலும் நல்ல வளர்ச்சியடைந்த, எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு கிராமம் போன்றுதான் காட்சியளிக்கிறது. என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதற்குள் இந் நகரின் வளர்ச்சியை நினைத்தால்!!!!
 வரலாறு 

                     மேற்கண்ட படத்திலுள்ளது போல் விஷ்ணு பக்தர் ராமானுஜர் அவதரித்த இடம் என்பது மட்டுமே தெரியும், மற்றபடி தோற்றம் தெரியவில்லை. நிறைய திரைப்படங்களில் வருகிறது ராமானுஜர் கோவில் குளம், முக்கியமாக கே.எஸ்.ஆர் படங்களில்.     

சிறப்பம்சங்கள் 
                                     ஸ்ரீ பெரும்புதூர் என்றதும் நினைவுக்கு வருவது முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் என்பது சற்றே வருந்த கூடிய விஷயம்தான். எனினும் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நினைவிடத்தின் பராமரிப்பு அசர வைக்கிறது. நீங்கள் உள்ளே எங்கேனும் ஒரு சிறிய காகித துண்டினை கூட கண்டெடுக்க முடியாது.அவ்வளவு சுத்தம். (நான் கொண்டு குப்பை போட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால்,1. உள்ளே நுழைந்தவுடன் குப்பை போடும் ஆசை உங்களுக்கே போய்விடும்!
2.வெளியில் துப்பாகியுடன் இரண்டு பேர் உங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுவர்)..
 ராஜீவ் காந்தி நினைவிடம் சில புகைப்படங்கள்

 


                                      ஸ்ரீ பெரும்புதூரின் மற்ற சிறப்பம்சங்கள் என்றால் உலகளாவிய நிறுவனங்களின் கிளைகளும், ராமானுஜர் கோவிலும் தான்...
கோவில்கள்
                                      இங்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் ராமானுஜர் கோவில்தான் புகழ் பெற்றது. இக்கோவிலும் நிறைய திரைபடங்களில் வந்திருக்கிறது, நல்ல பெரிய கோவில். விஷ்ணு ஸ்தலம்...


   
  மக்கள்
                      இவ்வூரில் நிறைய பேர் தெலுங்கு பேசுபவர்கள், வீட்டை விட்டு வெளியே நிற்பவர்களை பார்ப்பது அபூர்வம்.யாருடனும் வீணாக பேசி பொழுதை கழிப்பதில்லை , ஆனால் அதற்காக எதாவது கேட்டால் கூட 5 நிமிடம் யோசித்து விட்டே பதில் சொல்கிறார்கள். கையில் நிறைய காசு வைத்திருந்தாலும் மேலும் எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனை உடையவர்கள்.
                  கொரிய தேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் கொரிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.(t.nagar bus stand லிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்களில் குறைந்தது 10 கொரிய நாட்டினர் இருப்பார்கள்).
பொருளாதாரம்
                              நிறைய திருமணமாகத வெளியூர்  இளைஞர்கள் இருப்பதால் பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். ஒரளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும் ஏழைகள் நிறைய உண்டு.


                                         நேரமிருந்தால் சென்னைவாசிகள்   கடற்கரைக்கும், city centre க்கும் போவதை விட  ஸ்ரீ பெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தையும், அதன் சுத்தத்தையும் அமைதியும் அனுபவித்து விட்டு வாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்.( அனேகமாக திண்டுக்கல்)
..............செ. சுந்தரராஜன்...........    









வெள்ளி, 6 நவம்பர், 2009

வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு!

"உன் கை விரல்கள் மெல்ல மெல்ல button அமுக்கி! உன் இனிமையான குரலில்..." 

சொல்லு  ரமேஷ்!

ம்! என்னடா பண்ணிட்டிருக்க?

office ல தான் இருக்கேன் சொல்லு

இல்ல சும்மாதான் போட்டேன், நல்லா இருக்கியா?

ம்! இருக்கேண்டா! எதாவது படம் பாத்தியா?

ஆமாண்டா! "கண்டேன் காதலை"பார்த்தேன், பரவால்ல பாக்கலாம்!
 
படம் இருக்கட்டும்! போற போக்க பாத்த தமன்னா படம் ஒன்னு வுடாம இவங்க்ய்ளே வாங்கிடுவாங்க போல

நீ ஒன்னு! இனிமே எல்லா படத்தையும் இவங்க வாங்கிடுவாங்க போல, வாங்கலனாலும்  நம்ம ஆளுங்க c.m ட்ட சொல்லி போராட்டம் பண்ணியாவது வாங்க வச்சிடுவாங்க போல இருக்குடா!

அது சரி! எல்லா படத்தையும் இவங்களே வாங்கின எப்படிடா விளம்பரம் பண்ணுவாங்க?

அவங்க அதுக்குனே  தனி channel கூட ஆரம்பிப்பாங்க! 

ங்கொய்யால! வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு! வைடா phone அ! office time ல disturb பண்ணிக்கிட்டு!

புதன், 4 நவம்பர், 2009

பிடித்தவர் & பிடிக்காதவர் - 10 (நோ! உள் குத்து)

  கார்கியே என்னை தொடர அழைக்குமளவுக்கு நான் நல்ல (பிரபல)  பதிவரா? எனக்கே சந்தேகம்தான். நானும் வலைப்பதிவு உலகிற்கு வந்த நாளிலிருந்து என்னை யாரும் இந்த மாதிரி அழைக்க மாட்டார்களா ? என ஏங்கியது உண்டு என்பதை நான் இங்கே சொல்ல மாட்டேன். any way நன்றி கார்கி.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

......................................................

பதிவுக்கு செல்லலாம்....
1.அரசியல் தலைவர் 
      பிடித்தவர் :ப. சிதம்பரம் 
      பிடிக்காதவர்: தொல். திருமாவளவன் 
2.எழுத்தாளர்  
     பிடித்தவர் : எஸ். ராமகிருஷ்ணன்
     பிடிக்காதவர்: ஜெயகாந்தன்
3.கவிஞர்
     பிடித்தவர் : தபு சங்கர்
     பிடிக்காதவர்: வைரமுத்து
4.இயக்குனர்  
      பிடித்தவர் : கௌதம்  வாசுதேவ்  மேனன்
      பிடிக்காதவர்: பாலா
5.நடிகர்
      பிடித்தவர் : கமல்
      பிடிக்காதவர்: ஸ்ரீ காந்த்
6.நடிகை
      பிடித்தவர் : பூனம் பஜ்வா
      பிடிக்காதவர்: ப்ரியாமணி
7. தொழிலதிபர்
      பிடித்தவர் : சக்தி மசாலா( பெயர் தெரியலைங்கோவ்) 
    பிடிக்காதவர்: நாட்டுல இந்த தொழிலதிபனுக தொல்லை தாங்க முடியலை. பூ விக்கிரவனிலிருந்து புண்ணாக்கு விக்கிறவன் வரைக்கும் எல்லாரும்  தொழிலதிபர்.
8 . பத்திரிகையாளர்
     பிடித்தவர் : ஆனந்த விகடன்
     பிடிக்காதவர்: குங்குமம்
9. பதிவர்
     பிடித்தவர் : பரிசல்காரன்
     பிடிக்காதவர்: சாரு நிவேதா 
10. நகைசுவை நடிகர்:
    பிடித்தவர் : சந்தானம்
    பிடிக்காதவர்: விவேக்

இதைத் தொடர நான் அழைப்பது:






திங்கள், 2 நவம்பர், 2009

நாலு...., ஐந்து....,ஆறு....


நான் பொதுவாக வெளியூர்க்கு செல்லும் நேரங்களில், இரவு நேரமென்றால் பேருந்திலோ, பகல் என்றால் ரயிலிலோ  முன்பதிவு செய்துதான்  செல்லுவேன். ஆனால் என்ன செய்ய?   (விதி வலியது) திண்டுகலிருந்து கும்பகோணத்திற்கு முன் பதிவு கேட்டாலே ஏற, இறங்க பார்கின்றனர். எனவே வேறு வழியில்லாமல் திருச்சி சென்று மாறி செல்லலாம் என்று திருச்சி வண்டியில் ஏறி இடம் பிடித்து விட்டேன். 

உள்ளே இருந்தவர்கள் எல்லாம் bar இலிருந்து நேரே வந்தவர்கள் போலும், நல்ல (!?!?!?!) வாசனை. விதியை நொந்தவாரே  தூங்கலாம் என்று கண் முடி சிறிது நேரத்தில் "புறப்படடா தம்பி புறப்படடா" என்று தாய் மீது சத்தியம் செய்த hero ஆரம்"பிக்க". (யார் அந்த hero என்று கேட்பவர்கள் முழுதாக படித்துவிட்டு கீழே வரவும்).


"புறப்படுபவர் சாலையில் ஓட்ட வேண்டிய குதிரையை  என் காதுக்குள் ஓட்ட ஆரம்பித்தார். எனக்கோ சரியான கடுப்பு மேலோங்க நான் அதே கடுப்புடன் conductor ஐ அழைத்து சத்தத்தை குறைக்க சொன்னேன். அதற்க்கு அவர் சொன்னார் 

"sound அ குறைச்சா driver தூங்கிடுவார் sir" என்றார்.

அப்புறமென்ன "தூங்கிடுவாரா?  ரொம்ப பயமுறுத்துராங்க்ய்களே என்னையே"   என்றவாரே முழித்திருந்து ஊர் போய் சேர்ந்தேன்.   
----------------------------------------------------------------------------

கூகிள் தேடு பொறியில் நம் வசதிக்காக அந்தந்த இந்திய மாநில மொழியில் தேடும் வசதி இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.


நானும் அதிக தமிழ் ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் தேடலாமென்று தமிழ்க்கு மாற்றி முதல் எழுத்தை தட்டச்சு செய்தவுடன் வந்த suggestion களை பார்த்தவுடன் அந்த முடிவை கை விட்டு விட்டேன். நமது மொழி இணையத்தில் எந்தளவுக்கு பயன்படுகிறது என்று நீங்களும் பாருங்களேன். 

முக்கியமான விஷயம் நீங்கள் இதை முயற்சிக்கும் போது உடன் யாரும் இல்லாத நேரத்தை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் நான் பட்ட சங்கடத்தை    நீங்களும் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------

 அந்த தாய் மீது சத்தியம் hero இவர்தான்.





























song bonus... (யான் பெற்ற இன்பம்) 


டிஸ்கி: அதென்னப்பா எல்லாரும் ஒன்.. டூ.. த்ரீ... அப்டின்னு தலைப்பு வைகிறீங்க. நான் கொஞ்சம் வித்தியாசமானவன்..