புதன், 30 ஜூன், 2010

நண்பனும், பதிவராகும் ஆசையும்....

                         நானெல்லாம் பதிவுலகில் நுழைந்ததே நண்பர்களிடம் படம் (scence ) காட்டுவதற்குத்தான், அதில் என்னை போல் ஒரு ஆர்வக்கோளாறு நண்பன் என் வலைப்பூவை மட்டுமே பார்த்துவிட்டு அவனும் வலைப்பூ தொடங்க ஆசை கொண்டான், அதற்க்கு என்னையே கற்று கொடுக்கும் குருவாக ஏற்றுகொள்வதாகவும் ஒப்புகொண்டான்.

                       ஒரு நல்ல குருவிற்கு அழகு நல்ல வழிகாட்டுதல்தானே? உடனே நான் அவனிடம் நீ என்னை மட்டும் படித்துவிட்டு பதிவுலகில் நுழைவதைவிட, என் குருமார்களையும்  படித்து தெளியவேண்டும் என்று கூறி பதிவுலகின் ஆதர்ச நாயகர்களான பரிசல். கார்கி, கேபிள், சரவணகுமரன்  போன்றோரை படிக்குமாறு கூறினேன். 

                      இரண்டொரு நாள் கழித்து வலைப்பூவை தொடங்கலாமா? என்று கேட்க , அவன் இன்னும் அவார்களை படித்து முடிக்கவில்லை என்றும் , இப்போது தனக்கு எழதும் ஆர்வத்தைவிட, படிக்கும் ஆர்வமே அதிகம் உள்ளது என்கிறான். நானும் அவனது படிக்கும் ஆர்வத்தை மெச்சிவிட்டு  அவனிடம் சொன்னேன் " மச்சி!நீ வந்துடேல்ல இனிமே கூவம் சுத்தமாய்டும் ".

                                   திங்கள், 21 ஜூன், 2010

நீ...

நீ
இருக்கும் நம்பிக்கையில்தான் 
அமாவசை அன்று நிலவு 
விடுப்பு எடுத்துகொள்கிறது!

நீ 
படிப்பாய் என்றுதான் 
வாரம் தவறாமல் 
வார இதழ்கள் வெளிவருகின்றன!

நீ
இடுவாய் என்றுதான் 
சுண்ணாம்புக்கல் கோலமாவாக 
உடைகிறது!

நீ 
தரும் மணமே 
போதுமென்றுதான் காகித பூ 
மணம் வீசுவதில்லை!

நீ  
காதலிப்பாய் என்றுதான் 
நானும் கூட 
காத்திருக்கிறேன்! 
 .....செ.சுந்தரராஜன்....

சனி, 12 ஜூன், 2010

யாரடி நீ?யாரடி நீ?

என் இருவிழிகளொன்றும் குருடில்லையே!

எங்கிருந்தாய் நீ?

நான் இதுவரை உன்னை கண்டதில்லையே!பேருந்தின்  ஜன்னலோரங்களில் அமர்ந்து

நான் தேடுவது உனைத்தான் என்று

உன்னை பார்க்கும்வரை நான் அறியவில்லையே!
உறவினர்களின்  திருமண புகைப்படங்களில்

தேடி! தேடி! நான் பார்த்த பெண்களில்

சத்தியமாக நீயில்லையே!கல்லூரி தோழிகளில் நீயிருக்க வாய்ப்பில்லை!

அவர்களின் தோழியாகவது இருந்திருப்பாயா?

என்று எனக்கு தெரியவில்லையே!இவைகளில் நீ இல்லாதது

என்னுடன் மணமேடையில் மணபெண்ணாக

இருக்க போவதற்குத்தான் என்பதில்

எனக்கொன்றும் மறுப்பில்லையே!
என் காதலியே!

எப்படியும் நீ ஆகிவிட வேண்டும்

என் மனைவியே!

இதில் உனக்கொன்றும் மறுப்பில்லையே?.........செ. சுந்தரராஜன்.......