திங்கள், 31 ஆகஸ்ட், 2009

இன்றைய கார்டுன்


இந்த கார்டூனை பார்த்தவுடன் சிரிப்பு வந்தாலும் இது கொண்டிருக்கும் செய்தி மிகவும் serious matter. இனிமேலாவது யோசித்து வோட்டு போடுங்கள் நண்பர்களே!

நம்பர் பிளேட் குழப்பங்கள்!

நம்பர் பிளேட்டில் தங்கள் இஷ்ட தெய்வங்கள், அபிமான கட்சி சின்னங்கள், நியூமராலஜி, தொழில் விவரங்கள் உள்ளிட்டவைகளை கண்ணை பறிக்கும் வகையில் எழுதுவதை, ஆர்.டி.ஓ.,வும், போக்குவரத்து போலீசாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

விபத்தை ஏற்படுத்தி தப்புபவர்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நம்பர் பிளேட்கள் உயிர் நாடியாக உள்ளன. மோதும் வாகனத்தின் நம்பரை வைத்து எந்த வாகனம் மோதியது என அறிந்து, பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர முடியும். ஆனால், சிலர் தங்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில், பிடித்த ராசி எண் மட்டும் பெரிதாக எழுதி, மற்ற எண்களை சிறிதாக எழுதுகின்றனர்.சிலர் இஷ்ட தெய்வங்கள் படங்களை மட்டுமின்றி, மின்வாரியம், தலைமைச் செயலகம், பிரஸ், போலீஸ், டாக்டர், வக்கீல் என்று பணிபுரியும் அலுவலகம் மற்றும் துறையின் பெயரை எழுதுகின்றனர். சிலர் காதலியின் பெயர்களையும், வினோத ஸ்டிக்கர்களையும் ஒட்டுகின்றனர்.

சிலர், நம்பரை டிராகுலா போன்று பலவித ஸ்டைலிலும், சாய்வாகவும், ஒளியை பிரதிபலிக்கும் வகையிலும்(ரிப்ளக்ட்) எழுதி நம்பரை கண்டுபிடிக்க முடியாமல் செய்து விடுகின்றனர். ஒரு சில தமிழ் ஆர்வலர்கள்(?) தமிழ் எழுத்துக்களை எண்களாக எழுதிக் கொள்கின்றனர்.பொதுவாக வாகனங்களின் நம்பர் பிளேட்டில், அனைத்து எண்ணையும் எப்படி எழுத வேண்டும், என்ன கலரில் எழுத வேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ளன. ஆனால் யாரும் இந்த விதிகளை கடைபிடிப்பதாக தெரியவில்லை.அதற்காகத்தான் மத்திய அரசு நம்பர் பிளேட்டில் நம்பரை மூன்று "இன்ச்'சுக்கு மிகாமலும் தடித்ததாகவும் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

நம்பர் பிளேட்டில் கண்டபடி எழுதுபவர்களுக்கு, மோட்டார் வாகனச் சட்டம் 177ன்படி அபராதம் விதிக்க இடம் உள்ளது.பணம் உள்ளவர்கள் தங்கள் ராசி எண்ணைக் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். பணம் கொடுத்து பேன்சி நம்பர் வாங்க முடியாதவர்கள் தங்கள் இஷ்டம்போல் வாகனத்தில் எழுதிக் கொள்கின்றனர். ஒருக்கால் குற்றங்களில் ஈடுபட்டால் ,இந்தவாகனங்களை எளிதாக அறியமுடியாததால், குற்றவாளிகளும் தப்பித்து விடுகின்றனர்.எனவே, வாகனங்களின் உயிர் நாடியாக திகழும் நம்பர் பிளேட்டில் கண்டபடி எழுதுபவர்களை தடுத்து நிறுத்த ஆர்.டி.ஓ.,வும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இந்த பிரச்சனை இன்று சாதரணமாக தெரிந்தாலும் , இவற்றின் மூலம் எதுவும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

----செ. சுந்தரராஜன்



புவி நிலையத்துடன் தொடர்பு இழந்தது சந்திரயான்???


நிலவைச் சுற்றிக் கொண்டு அது குறித்த பல்வேறு தகவல்களை கடந்த 312 நாட்களாக அளித்துக் கொண்டிருந்த சந்திரயான் 1 விண்கலம், நேற்று நள்ளிரவு புவி நிலையத்துடனான தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நேற்றுவரை 3,400 முறை நிலவைச் சுற்றி வந்து பல தகவல்களை பெங்களூருவிற்கு அருகிலுள்ள பயலாலு புவி நிலையத்திற்கு அளித்து வந்தது. இறுதியாக நேற்று இரவு 12.25 மணிக்கு அது கடைசியாக தகவல் அனுப்பியது. அதன் பிறகு புவி நிலையத்துடனான தொடர்பை சந்திரயான் விண்கலம் இழந்துவிட்டதாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

புவி நிலையத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரயான் 1 திட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக, அத்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தின் பணி 10 மாத காலத்திற்குள் முடிந்துவிட்டாலும், அது சாதிக்கவேண்டிய 90-95 விழுக்காட்டுப் பணிகளை துல்லியமாக நிறைவேற்றிவிட்டது என்று அண்ணாதுரை கூறினார்.

சந்திரயான் அனுப்பிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், அதன் துணை அமைப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அதனைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் விண்கலத்தில் நிலவின் மேற்பகுதியை ஆராயும் டெர்ரைன் மேப்பிங் கேமிரா, நிலவின் பரப்பில் உள்ள கனிமங்களை ஆராயும் கருவி, அதன் காற்று வெளியை ஆராயும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் உள்ளிட்ட பல கருவிகள் பொறுத்தப்பட்டு ஆய்வு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் திட்டத்துக்கு தலைமை வகித்த அண்ணாதுரை தமிழ்நாட்டுக்காரர் என்பதுகுறிப்பிடத்தக்கது!!!!


ஐ.மு.கூ. அரசின் 100 நாட்கள்


மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 100 நாட்களை பூர்த்தி செய்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

இந்த 100 நாட்களில் சில சிறந்த பணிகளை செய்துள்ளதாக பாராட்டப்படும் அதே நேரத்தில், போதுமான வறட்சி நிவாரண நடவடிகைகளை மேற்கொள்ளாதது,நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது , பாகிஸ்தானுடனான உறவில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கூட கட்டுப்படுத்த தவறியது, ஒட்டு மொத்த நாட்டையே அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோயை பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விலைவாசி உயர்வுக்கு வித்திடும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதும் மன்மோகன் அரசுக்கு பொதுமக்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் குற்றவாளிகளை, நீதியின் முன் நிறுத்தச் செய்வதில் பாகிஸ்தானை பணிய வைக்க முடியாமல் திணறி வருவதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆளுமை திறனை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

அதிலும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா அலி கிலானியை, பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் எகிப்தில் சந்தித்துப் பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க பயங்கரவாத பிரச்னையை தொடர்புபடுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும்,அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கவனக்குறைவாக அந்த கருத்து இடம்பெற்றதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் பின்னர் மழுப்பியதும் மன்மோகன் அரசு மீது படிந்த மற்றொரு களங்கமாகும்.

இவை தவிர அண்டை நாடான இலங்கை அரசு, போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதை கண்டும் காணாமல் இருப்பதும், ராஜ பக்ச அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதும், நிதியுதவி அளிப்பதும்,தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீள் குடியமர்த்த இலங்கை அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து எழுப்பப்படும் குரலை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதும் மன்மோகன் அரசுக்கு ஏற்பட்டுள்ள தீரா களங்கமாக அமைந்துள்ளது.

------- நனறி- தமிழ் வெப்துனியா .காம்

சனி, 29 ஆகஸ்ட், 2009

அணி மாறினார் ஜாகிர்


மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கர்நாடக வீரர் உத்தப்பா நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் ஜாகிர் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் கிரிக்கெட் போர்டால் துவங்கப்பட்ட அமைப்பு இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இவ்வமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு "டுவென்டி-20' தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின், இரண்டாவது தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. தொடருக்கு முன்பாக அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என கடந்த டிச., 28 ம் தேதி ஐ.பி.எல்., நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் படி திறமையான வீரர்களை ஒவ்வொரு அணிகளும் தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்ற ஜாகிர் கான், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளார். இவருக்குப் பதில் ராபின் உத்தப்பா, பெங்களூரு அணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

இப்பவே கண்ணை கட்டுதே!!!! தமிழக் காவல்துறை !!!


"மின் வாரிய அலுவலகத் தில் கொள்ளை போன 2.50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, எங்களால் மீட்க முடியவில்லை' என தங்களது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு சர்ட்டிபிகேட் அளித்துள்ளது மாநகர போலீஸ். இதே போன்று, எண்ணற்ற வாகனத் திருட்டு வழக்குகளிலும், புகார்தாரர்களுக்கு சான்றளித்து கைகழுவி வருகின்றனர். களவு போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல், இப்படியொரு சான்றிதழை வாரி வழங்கவா போலீஸ் துறை செயல்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 2008, ஏப்., 5 நள்ளிரவில் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர், ஆறு கம்ப்யூட்டர், 1.5 கி.மீ., நீள மின் ஒயர், 50க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகளை திருடிச் சென்றனர்; இதன் மதிப்பு 2.50 லட்ச ரூபாய். இது குறித்து, அப்போதைய உதவி செயற்பொறியாளர் மணிவேலு, சரவணம்பட்டி குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித் தார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாரால், 16 மாதங்கள் கழிந்த நிலை யிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், நிர் வாக காரணங்களால் உதவி செயற்பொறியாளர் மணிவேலு, வேறு பணிக்கு மாற் றப்பட்டு, கதிர் வேல் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர், பொறுப்பேற்ற போது, அலுவலகத்தில் கம்ப் யூட்டர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண வசூல் பணிகள், கம்ப்யூட்டர்கள் இல்லாததால் பணிகள் முடங்கின.

கொள்ளை போன கம்ப் யூட்டர்களை மீட்டுத் தருமாறு சரவணம்பட்டி போலீசாரை தொடர்ந்து வற்புறுத்தினார். "கொள்ளையரை பிடிக்காவிடில் மின் வாரியம் விடாது போலிருக்கிறது' எனக் கருதிய போலீசார், வழக்கை மூடிவிட முடிவு செய்தனர். "உமது மின் வாரிய அலுவலகத்தில் திருட் டுப் போன சொத்துக்களை எங்களால் மீட்க முடியவில்லை' என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, உதவி செயற்பொறியாளரிடம் சர்ட்பிடிகேட் கொடுத்துவிட்டனர்; அவரும், அதை பெற்று அலுவலக கோப்பில் சேர்த்துவிட்டார். ரூ. 2.50 லட்சத்துக்கு நேர்ந்த கதி: திருட்டு நடந்தது அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகத்தில்; திருடப்பட்டவை மக்கள் வரிப்பணத்தில் வாங் கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற் றும் சொத்துக்கள்.

அரசு சொத்து களவு போனதற்கே இந்த நிலை என்றால், தனி நபர்களின் சொத்துக்கள் களவு போனால் என்னவாகும்? திருட்டு நடந் தால், குற்றவாளிகளை கைது செய்து, சொத் துக்களை மீட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே போலீசின் கடமை; பொறுப்பும் கூட. அதை விடுத்து, திருட்டு சொத்துக்களை மீட்க முடியவில்லை என வெள் ளைக் காகிதத்தில் சான்றளித்து, கையெழுத்திட போலீஸ் துறை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "மின்வாரிய கான்ட்ராக் டர் - வாரிய அதிகாரிகள் இடையேயான பண செட்டில்மென்ட் மோதல் காரணமாக, அலுவலக கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்கள் இரவில் களவாடப்பட்டன; இக்கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?' என கேள்வி எழுப்புகின்றனர்.

மின் வாரிய அலுவலக திருட்டு வழக்கில் மட்டுமின்றி, வாகனத் திருட்டு வழக் குகளிலும் போலீசார் முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வது கிடையாது. "வாகனத்தை மீட்க முடியவில்லை' என சான்று அளித்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்; இதனால், கிரிமினல்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.களவு போன சொத்துக்களை மீட்க முடியவில்லை, என சான்று அளிக்க போலீஸ் படை பலம் எதற்கு? புலன்விசாரணை எதற்கு? ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு ரைட்டர் மட்டும் போதாதா என்ற கேள்விகள் எழுகின்றன.

நண்பர்களே!

இந்த வலைப்பூவில் காதல் கவிதைகள் அதிகம் இருந்தாலும்
எதோ என்னால் முடிந்த அளவுக்கு மற்ற செய்திகளையும் இடுகை
இடுகிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்!!
--- உங்கள் செ.சுந்தரராஜன்

காதல் அன்றி வேறரியோம் !


உன் ஒற்றை பார்வைக்காக
உறக்கமின்றி
உன் பின்னாலே
தொடரும் காலங்களில்
என் செவிகளில் உன் சிரிப்பொலி
மட்டும் கேட்கும்
என்
விழிகளில் உன் பிம்பம்
மட்டும் தெரியும்
ஆனால்
உனக்கோ
என்னை தவிர மற்றவை
மட்டுமே
தெரிகிறது!
என
என் நண்பர்கள் சொல்ல கேட்டு
சிரித்தேன்!
பைத்தியமாடா உனக்கு? என்று
அவர்கள்
கேட்டபோது - ஆமாம் அவள் மீது !
என
பதில் சொல்ல தெரிந்த
எனக்கு !!!
அதையே நீ கேட்ட போது சொல்வதற்கு என்னிடம் பதிலே இல்லை !
------செ.சுந்தரராஜன்

காதல் தவிர வேறில்லை !!!


நேரமறியாமல் தொடர்ந்து பேசி இருந்தாலும் விடை பெறும்போது நம்மிடையே இன்னும் மிச்சம் இருப்பது ?
காதல்தான்! வேறென்ன?
குறுஞ்செய்திகளில் "Happy Sunday"என்று ஒருவருக்கொருவர் விளையாடினாலும் நாம் இன்னும் பகிர்ந்து கொள்ளாத செய்தி?
காதல்தான்! வேறென்ன?
எனக்கு பிடிக்கும் என்று நீ நீலமும், உனக்கு பிடிக்கும் என்று நான் சிகப்பும், அணிந்த பிறகும் , நம் இருவருக்கும் பிடித்திருந்தும் நாம் அணிந்து கொள்ளாமல் இருப்பது?
காதல்தான்! வேறென்ன?
10 மணிக்குத்தான் அலுவலகம் என்றாலும் நானும் 8.30க்கே பேருந்து நிலையத்தில் உன்னருகே நிற்பதற்கு காரணம்?
காதல்தான்! வேறென்ன?
நாம் காதலிப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், இன்னும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க காரணம்?
காதல்தான்! வேறென்ன?



----செ.சுந்தரராஜன்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

கந்தசாமி விமர்சனம்


கந்தசாமி


இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் ஏறக்குறைய அறுபத்தைந்து லட்சம் கோடிகள். உலகின் மொத்த ஏழைகளில் முப்பது சதவீதம் பேர் இந்தியர்கள். பதுக்கி வைத்திருக்கும் பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தால் ஏற்றத் தாழ்வு நீங்குமே என்று சிபிஐ அதிகா‌ரி ஒருவருக்கு தோன்றினால் என்ன நடக்கும்...? அதுதான் கந்தசாமி.


நடைமுறையில் இருக்கும் பிரச்சனையை நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளில் தீர்வு காணும் ஜென்டில்மேன், முதல்வன், ரமணா, அந்நியன், சிவா‌ஜி படங்களின் வ‌ரிசையில் புதிதாக சுசி.கணேசனின் கந்தசாமி.

இதுபோன்ற படங்களில் பார்வையாளர்களின் உணர்வுகளை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் திரைக்கதை, காட்சிகள் முக்கியம். கதாபாத்திரங்களின் ஸ்கின் டோனைகூட கணிக்க முடியாத கந்தசாமியில் உணர்வுபூர்வமான அத்தகைய காட்சிகள் இல்லாதது மிகப் பெ‌ரிய குறை.

படத்தின் கதைக்கு வருவோம். திருப்போரூ‌ரில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது கஷ்டத்தை பேப்ப‌ரில் எழுதி அங்குள்ள மரத்தில் கட்டி தொங்கவிடுகிறார்கள். அவர்களின் கஷ்டம் எதுவாக இருந்தாலும் அது உடனே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அதிசயத்துக்கு காரணம் கந்தசாமி கடவுள் என்று ப‌ரிபூரணமாக நம்புகிறார்கள் பொது ஜனங்கள்.

கந்தசாமி கஷ்டப்படும் ஜனங்களுக்கு அள்ளித் தருவது கரன்ஸி என்பதால் இது சாமியின் வேலை அல்ல ஏதோ ஆசாமியின் வேலை என்று களத்தில் இறங்குகிறார் காவல்துறை அதிகா‌ரி பிரபு. ஆள், அம்புடன் அவர் துப்பு கிடைக்குமா என்று திணறிக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் காரணம் சிபிஐ அதிகா‌ரி கந்தசாமிதான் என இருந்த இடத்திலேயே தெ‌ரிந்து கொள்கிறார் ஸ்ரேயா. எப்படி...?

ஸ்ரேயாவின் தந்தை பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி) மிகப் பெ‌ரிய கோடீஸ்வரர். அவரது வீட்டை சோதனையிட்டு, முக்கியமான டாக்குமெண்ட்டுகள் அனைத்தையும் கைப்பற்றுகிறது விக்ரம் அண்டு கோ. இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க பக்கவாதம் வந்ததுபோல் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. தனது அப்பாவின் நிலைக்கு விக்ரம்தான் காரணம் என்று அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் ஸ்ரேயா. இந்த நேரத்தில் டிவி-யில் கந்தசாமி கடவுளின் மகிமை பற்றி ஒளிபரப்புகிறார்கள். ஒன்றும் ஒன்றும் இரண்டு... அந்த கந்தசாமிதான் இந்த கந்தசாமி. கண்டுபிடித்து விடுகிறார் ஸ்ரேயா.

விக்ரம்தான் கந்தசாமி என்பதை பிரபுவும் கண்டுபிடித்து அவரை நெருங்கும்போது, ஸ்ரேயாவின் சூழ்ச்சியால் ஆசிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொள்கிறார் விக்ரம். அதன் பிறகு மெக்சிகோ செல்லும் கதை, தமிழகத்துக்கே ரோல் மாடலாக திகழும் பணக்கார வில்லன் என யு டர்ன் அடித்து சின்ன அட்வைஸுடன் முடிகிறது.

கொக்கரக்கோ சேவல் சவுண்டுடன் மன்சூர் அலிகானை புரட்டியெடுக்கும் விக்ரமின் அறிமுகம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. அவர் சூப்பர்மேனெல்லாம் இல்லை, நண்பர்களின் உதவியால் ரோப் கட்டிதான் பறக்கிறார் என்ற விளக்கம் பகுத்தறிவுக்கு உவப்பாக இருந்தாலும் படத்தின் டெம்போவுக்கு கசப்பாக அமைகிறது. சிபிஐ அதிகா‌ரியாக டிப் டாப் மீசையில்லா விக்ரம் டாப். சார்லி அண்டு கோ-வை பயமுறுத்த போடும் பெண் வேசம் நம்மையும் பயமுறுத்துகிறது. படத்தின் சீ‌ரியஸ் மூடுக்கு இயக்குனர் வைத்த சிதை அது.


ஸ்ரேயாவின் முகத்தைவிட இடை நன்றாக நடிக்கிறது, ஸா‌ரி... வெடிக்கிறது. சி‌ரித்துக் கொண்டே விக்ரமை கவிழ்க்க நினைக்கும் அவரது கதாபாத்திரம் குலுமணாலி ‌ஜில். விக்ரமின் அறையில் தனது உடையை கிழித்துக் கொண்டு காப்பாத்துங்க என்று நாட்டிய ஸ்டைலில் நெ‌ளிகிறாரே... இளசுகள் தொலைந்தார்கள். அப்பாவின் நாடகம் பு‌ரிந்து விக்ரமை நிஜமாக காதலிக்கும் போது தமிழ் சினிமா ஹீரோயினுக்கான அவரது ரோல் முழுமையடைகிறது.

பிரபுவுக்கு அலட்டலில்லாத போலீஸ் அதிகா‌ரி வேடம். விக்ரமும் அவரது பால்யகால நண்பர்களும் பதுக்கல் பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பதற்காக சொல்லப்படும் காரணத்தில் வலுவில்லை. மெக்சிகோ எபிசோட் எதற்கு? அங்கு நடக்கும் பண பட்டுவாடாவை பு‌ரிந்துகொள்ள தனித் திறமை வேண்டும். சொகுசு பேருந்தில் குட்டி குளியலறை, குஷன் படுக்கை என சிட்டியை வலம்வரும் வில்லன் ஜெய்சங்கர் படத்தை நினைவுப்படுத்துகிறார்.

புட்டே‌ஜில் வடிவேலுவின் காட்சிகளில் கைவைத்து விட்டார்கள் போல. திடீரென துண்டு துண்டாக வந்துவிட்டுப் போகிறார் வைகைப் புயல். நான்தான் கந்தசாமி என சேவல் கெட்டப்பில் அவர் காட்டும் மேன‌ரிசம் ரகளை. போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு நடக்கும் வாட்டர் ட்‌‌ரீட்மெண்டுக்கு கோலி சோடாவை குலுக்கி உடைத்த மாதி‌ரி தியேட்ட‌ரில் பொங்கி சி‌ரிக்கிறார்கள்.

பாடல்களில் பாஸ் மார்க் வாங்கும் தேவிஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் கோட்டைவிடுகிறார். ஆ‌க்சன் படம் என்றால் காட்சிக்கு காட்சி கொட்டி முழக்க வேண்டுமா வாத்தியங்களை? காஸ்ட்யூமருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ். ஸ்ரேயாவின் உடையில் மறைப்பதைவிட வெளிப்படுத்தும் பகுதி அதிகம். நுணுக்கமும்கூட.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஏமாற்றம். விக்ரமின் அறிமுக காட்சியில் பத்து வினாடிக்கு ஒருமுறை லைட்டிங் மாறுகிறது. சில காட்சிகளில் மஞ்சள் காமாலையோ என சந்தேகப்படும் அளவுக்கு எங்கும், எதிலும் மஞ்சள் மயம். சில பாடல் காட்சிகளில் திரை பளீரென்று இருக்க நடிகர்களை தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிபிஐ அதிகா‌ரி விக்ரம் படம் முழுக்க பணக்காரர்கள் வீட்டில் ரெய்டு செய்கிறார். இன்கம் டாக்ஸ்காரர்களின் வேலையல்லவா அது? விக்ரமின் ராபின் ஹுட் வேலைக்கு அவரது மேலதிகா‌ரி முதற்கொண்டு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். வித்யார்த்தியின் ஆட்கள் கியூ பிராஞ்ச் அதிகா‌ரிகள் என்றதும் விக்ரம் அப்படியே நம்புவதும், அவர்களின் கற்பழிப்பு மிரட்டலுக்கு அடங்கிப் போவதும் விக்ரமின் இன்டலக்சுவல் கேரக்டருக்கு விழுந்த அடி.

ரமணா முதல் சிவா‌ஜி வரை பலப் படங்களின் சாயலும், திரைக்கதையின் பலவீனமும், லா‌ஜிக் மீறல்களும் நிறைந்த கந்தசாமி... ஹைடெக் கந்த(ல்)சாமி.

1998 அணு ஆயுத சோதனை வெற்றியே: கலாம்


1998ஆம் ஆண்டு இந்தியா ஒரே நேரத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை வெற்றிகரமானது என்று அப்போது அந்த திட்டத்தின் தலைவராக இருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

இந்தியா நடத்திய அந்த அணு ஆயுதச் சோதனை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு விஞ்ஞானி கே. சந்தானம் கூறியிருந்தார். இது குறித்து பெங்களூருவில் கலாமிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு முதலில் பதிலளிக்க மறுத்த முனைவர் கலாம், பிறகு, “அதனை விஞ்ஞானிகள் அறிவார்கள், அது ஒரு வெற்றிகரமான சோதனை” என்று கூறியுள்ளார்.

இந்தியா சோதித்த தெர்மோ நியூக்கிளியர் டிவைஸ் என்றழைக்கப்படும் அந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டபோது வெளிப்பட்ட சக்தி எதிர்பார்த்த அளவிற்கு இருந்தது என்று இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான ஆர். சிதம்பரமும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ஐடி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு


சென்னை: பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 29 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. 2008-09ம் ஆண்டில் ஏற்றுமதி அளவு ரூ. 36,680 கோடியாக அது இருந்தது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமியின் பயிற்சி முகாம் மதுரையில் இன்று தொடங்கியது. இதை சென்னையிலிருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி [^] தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிற போதும், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.

தமிழ்நாடு [^] தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி மூலம் தொழில் கல்வி ஆசிரியர்கள் 5000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கேற்ற தகுதிகளை மாணவர்களிடத்தில் புகுத்துவார்கள்.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு [^] ரூ. 6 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய நடைமுறைகளை மாணவர்கள் [^] அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.

தனி தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான். 1997ல் இது அறிவிக்கப்பட்டது.

நான் ராவணனின் பரம ரசிகன்-கமல்


இராவணன் காலத்திலிருந்தே தமிழர்களுக்கு தங்கள் பெருமை பேசத்தெரியாது. அதை மற்றவர் சொன்னால்தான் தெரியும்...’ என்றார் நடிகர் [^] கமலஹாசன்.

நடிகை [^] ஷோபனாவின் ‘மாயா ராவண்’ நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார்.

முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

தனது வாழ்த்துரையில் கமல் [^] கூறுகையில்,

கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால்இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும்.

நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் [^] கலா ரசிகர்கள் [^]. அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள்.

ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்.
ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது…

நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும்.

இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம்.

ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை’யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார்.

உயிரே உனக்காக !(காதல் கவிதைகள் )


உயிரே உனக்காக !
(i)உன்னை காணாத போது என் பொழுதுகள் தனிமையில் கழிகின்றன !
உலகத்தின் அத்தனை சாபங்களும் என் தலையில்தான்
ஒழிகின்றன !




(ii)ஒவ்வொரு இரவும் கண் மூடும் முன்
உன்னை நினைத்திருப்பேன் !
உன்னை நினைத்து கொண்டே கண் மூட மறந்திருப்பேன் !

(iii)காதலும் கடவுள்தான் !
இரண்டும் தேடுபவர்களுக்கு என்றும் கிடைப்பதில்லை!!

---செ.சுந்தரராஜன்