புதன், 30 செப்டம்பர், 2009

அது என்னடாது இரட்டிப்பு?!?!?!?!

தொலைக்காட்சிகளில் அன்றாடம் பல விளம்பரங்கள் வந்தாலும் சில மட்டுமே நம் கண்ணையும் கருத்தையும் கவரும். அவற்றில் முக்கியமானது இந்த பிரபல பான விளம்பரம்.(நம்மகிட்ட வாங்கி கட்டிகிறதுக்கேனே விளம்பரம் எடுப்பானுங்க போல)
இரட்டிப்பு! இரட்டிப்பு! இரட்டிப்பு!
அது என்னடாது இரட்டிப்பு? (எதோ காசுதான் இரட்டிப்பு ஆவுது போல) அப்படின்னு நாமளும் பாத்தா, அவங்க company பானத்தை குடித்தால் நம்ம வீட்டு பிள்ளைகள் இரட்டிப்பு வேகத்துல வளருமாம்.(அடங்ங் கொன்னியான் ஒரு லாஜிக் வேணாம், இங்க என்ன பேரரசு படமா ஓடுது?).

இதெல்லாம்கூட ok, இத நேர்ல பார்த்து confirm பண்றதுக்குனு ஒரு group போறமாதிரி காட்றானுக பாருங்க அப்படியே tv ய தூக்கி போட்டு உடைக்கிற அளவு கோவம் வருது.(அதுலயும் அந்த group தலிவி doctor வேஷம் போட்டு இருக்கும், இவனுக எல்லாம் doctor படிச்சவங்களை என்ன நினைச்சிட்டு இருக்கானுங்கனு எனக்கு தெரிஞ்சாவனும்).

ஒரு குழந்தை 4 அடி இருக்க வேண்டிய வயசில் 8 அடி இருக்குமா? அப்ப சாதரணமா 6 அடி வளர்ச்சி உள்ள ஒருவர் 12 அடி ஆய்டுவாரோ?

யப்பா உயரமா வளர்ந்து guiness ல இடம் பிடிக்கணும்னு ஆசை இருந்தா இந்த இதையே குடிங்கப்பா .(பாத்து உங்க பக்கத்து வீட்டுக்காரனும் இதையே குடிச்சி தொலைக்க போறான்.)

எப்படியெல்லாம் torcher பன்றாங்கே. உக்காந்து யோசிப்பாங்களோ!!!!

வேற இடமே கிடைக்கலயாப்பா உங்களுக்கு?


கொடுமை,கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் .

அந்த மாதிரி நாம நியூஸ் பாக்கலாம்னு உக்காந்தா(நாம நியூஸ் பாக்குறதே உலக அதிசயம், அதுல இவங்க வேற ) இவங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியலை ,கரெக்டா விளம்பரத்த போடுவார்கள் இந்த marketing சகோதரர்கள்.
செய்ங்கடா உங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ செய்ங்கடா அப்படின்னு 24 மணி நேர நியூஸ் சேனலுக்கு(இந்த marketing சகோதரர்கள் சேனல்தான் அதுவும் ) மாத்துனா அங்கேயும் விளம்பரம்.

இதெல்லாம் பத்தாதுனு கிழே நியூஸ் ஓடும் பாருங்க அங்கயும் போட்டான் பாரு பிட்ட!
(அதுவும் முக்கியமான நியூஸ் ஓடும்போதுதான் அணிவதற்கு ஏற்றது "சுடர்மணி ஜட்டிகள்" னு போடுராங்கோ)

வாழ்க உங்க விளம்பர உத்தி! நாடு விளங்கும்!

வியாழன், 10 செப்டம்பர், 2009

கூகிள்ல நம்ம பேரு!நான் இந்த blog ஆரம்பிச்ச அன்னிக்கே google adsense கொடுத்தேன், ஆனா நம்ம blog பேர போட்டு தேடுனா
அப்டியெல்லாம் ஒன்னும் இல்லன்னு google காறித் துப்பிடுச்சு!

சரி கூகுள்ல மொக்க blog மட்டும்தான் சேத்து பாங்க போலனு நினச்சிட்டு இருந்தப்ப நம்ம bloga யும், சேத்து நீயும் மொக்கதாண்டான்னு சொன்ன google க்கு நனறி சொல்லவே இந்த பதிவு!

ஏதோ என் blog யும் சேர்த்து கூகிள் தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கே பெருமை தேடி இருக்கு!(இது google, தான் இன்னும் famous ஆக எடுத்த முடிவுன்னு எடுத்து கொடுத்த என் நண்பன்க்கு நனறி)

நனறி! நனறி! நனறி!

செ. சுந்தரராஜன்

திங்கள், 7 செப்டம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும்! - ஒரு பார்வை


இந்த படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க வேண்டும்.படம் நன்றாக இருக்கிறது, ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.(எடுத்திருக்கலாம்).

படத்தில் எனக்கு பெரிய குறையாக தெரிந்தது, ப்ரித்வி, பிரியா காதல், ஏனோ ரொம்ப செயற்கையாக இருப்பது போல் ஒரு பிரமை. எனக்கு ஒரு சந்தேகம் படத்தின் ஹீரோ சக்தி தானோ என்று? சக்தி கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது , அவரின் காதலியாக வரும் அனுஜா அய்யர் அவ்வளவு நன்றாக நடித்தும் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர்!!!
கவலை வேண்டாம் இவர் உன்னை போல் ஒருவன்- லும் இருக்கிறார் , அங்கு பார்த்து கொள்ளலாம் , (ஆனா இவங்க பர்தா போட்டுட்டு வெட்கப்படும் போது சூப்பர்ங்க) .

மற்றபடி பாக்யராஜ் , கார்திக்(எல்லா வேடமும் இவருக்கு பொருந்துகிறது, இவர் ஹீரோவா நடித்திருக்கலாம்), பாலவாக வரும் நண்பன்(அவர் பெயர் தெரியலை) எல்லோரும் நன்றாக செய்து இருக்கின்றனர்.(கவனிக்கவும் சிறப்பாக அல்ல நன்றாக).

படத்தின் சிறப்பம்சங்கள் ஒளிப்பதிவும் , இசையும், அதிலும் பாலசுப்ரமணியெம்மின் கேமரா கண்களுக்கு விருந்தளிக்கிறது, அழகாய் பூக்குதே பாடலில் நம் மனதை உருகுகிறார் விஜய் அன்டோனி.

இயக்குனர் பல இடங்களில் கவனத்தை சிதற விட்டு இருந்தாலும் (ஒரு சண்டைக்காட்சியில் கூட, தண்ணீரில் விழுந்தும் ப்ரித்வியின் முடி நனையவில்லை. இயக்குனர் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார்) , flash back 2000 ஆம் வருடம் என்பதால் செல்போன் பயன்படுத்தாதது,( சில காட்சிகளில் std booth இல் இருந்து பேசுகின்றனர்) தன் புத்திசாலிதனத்தை காட்டி இருக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும் -- காக்டெய்ல் சரக்கு

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கலாட்டா கல்யாணம்!

தரகர் : பொண்ண பத்தி சொல்றேன், நல்லா கேட்டுக்க.
சேகர் : ம்ம்ம்....
தரகர் : இந்த நெத்தி இருக்கே நெத்தி, ஸ்ரீதேவி நெத்தி.
சித்தப்பா : நெத்தியடி
சேகர் : சித்தப்பா, உணர்ச்சிவசப்படதே. பொண்ணு எனக்கு.
தரகர் : காது இருக்கே, ஒரு காது குஷ்பு காது; ஒரு காது ரூபிணி காது
சேகர் : பொண்ணுக்கு மொத்தம் ரெண்டு காது தானே?
தரகர் : ஆமாம் தம்பி. கண்ணு ரெண்டும் ஸ்ரீவித்யா கண்ணு.
சேகர் : ஓஹோ!
தரகர் : இந்த மூக்கு இருக்குல்ல, மூக்கு?
சேகர் : சுகன்யா மூக்கா?
தரகர் : அதான் இல்ல.
சேகர் : மூக்கே இல்லையா? அந்த இடத்துல என்ன இருக்கு? பிளாட் போட்டு வித்துடாங்களா?
தரகர் : ஐயோ, தம்பி! இந்திரா காந்தி மூக்குன்னு சொல்ல வந்தேன்.
சேகர் : என்னய்யா இது? நீ சொல்றது எல்லாம் மொத்தமா கூட்டி பார்த்தா, நம்ம ஜனகராஜுக்கு பொம்பள வேஷம் போட்டமாதிரி வருதேயா???????

வெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...

இன்று காலை எட்டு மணிவாக்கில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தினசரி காலண்டரில் என் ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தபோதே நினைத்தேன். இதுப்போல் ஏதாவது நடக்கும் என்று. சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

நான் எவ்வளவு லக்கி? கொடுத்து வைத்தவன்.

கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

இந்த இந்திய பெருந்தேசத்தில், கோடானு கோடி மக்கள் மத்தியில் ஒரு சில பேருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்ததென்றால் சும்மாவா?

போதும் நிறுத்து! அப்படி என்னத்தான் நடந்தது என்கிறீர்களா?

மூணு மாசம் கழிச்சி வருற தீபாவளிக்கு ஊருக்கு போக, ரயில்ல டிக்கெட் கிடைச்சிடுச்சு! :-)

சாப்ட்வேர் வாங்கலியோ சாப்ட்வேர்!

ஒரு விமான நிறுவனத்திற்கு, சாப்ட்வேர் செய்ய வேண்டிய தேவை வந்தது. எந்த கம்பெனியிடம் வேலையை கொடுப்பது? என்று தீர்மானிக்க ஒரு விநோத திட்டம் தீட்டினார்கள். அச்சமயம், அமெரிக்காவிற்கு செல்ல ஒரே நேரத்தில் இருபது பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார்கள். இது தான் சரியான நேரம் என்று விமான நிறுவனம் ரகசியமாக திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார்கள். ஒன்றுமில்லை, அவர்களின் திறமையை, நம்பகத்தன்மையை, நம்பிக்கையை சோதிக்க போகிறார்கள்.

இருபது சிஇஓ’க்களும், அமெரிக்காவில் நடக்கும் கூட்டமைப்பு மீட்டிங்கிற்கு செல்லும் நாள் வந்தது. ஒவ்வொருவரும் ப்ளைட்டில் ஏறும் போது, அவர்களிடம் தனியாக விமான நிறுவனத்தினர் ஒரு விஷயம் சொல்கிறார்கள்.

“நீங்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், உங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஆளில்லா தானியங்கி’ மென்பொருளால் இந்த விமானம் முதன்முறையாக இயக்கப்படுகிறது. அதில் நீங்கள் பயணம் செய்வது இன்னும் விசேஷமாகிறது.”

என்னது, பைலட் இல்லாம வெறும் சாப்ட்வேர் ப்ளைட் ஓட்டப்போகுதா? பெரிய நிறுவனங்கள் என்பதால், எந்த சாப்ட்வேர் யாருக்கு செய்து கொடுத்தோம் என்று தலைமை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், அதை அப்படியே நம்பினார்கள்.

இப்ப, நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு கலக்கமாகி விட்டது. பயம். நடுக்கம். என்ன பண்றது?

எஸ்கேப் ஆவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள்.

”ஒரு அவசர வேலை வந்திருக்கு. என் டிக்கெட்டை கேன்சல் பண்ணிருங்க.”

”ஓ! மை காட். தாத்தா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரா?” (சின்ன வயசுல இருந்து இக்கட்டான நேரத்துல தாத்தா தான் ஹெல்ப் பண்றாரு)

“அப்படியா? மீட்டீங் கேன்சலா? ஒகே, திரும்ப எப்பன்னு சொல்லுங்க... பை”

“20 கோடி லாஸா? உடனே நான் வாரேன்”

“ஐயோ, வயத்தை கலக்குதே!”

இப்படி பத்தொன்பது பேரும் எஸ்ஸாகிவிட்டார்கள்.

ஆனால், ஒருத்தர் மட்டும் ஜம்மென்று சீட்டில் உட்கார்ந்தார். அவர் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை. பைலட் இல்லாத முதல் விமானம் என்று சொல்லப்படும் அந்த விமானத்தில் பயணம் செய்ய எந்த தயக்கமும் காட்டவில்லை.

விமான சோதனை டீம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இவர்தான். இவர் நிறுவனம் தான். தங்கள் சாப்ட்வேர் தேவையை இவரிடம் தான் கொடுக்க வேண்டும். எதற்கும் பேசி பார்த்து விடலாம் என்று நினைத்து, தங்கள் ஆள் ஒருவரை பயணி போல் வேடமிட்டு, அவர் பக்கத்தில் அமர வைத்தார்கள்.

“என்ன சார்? இந்த ப்ளைட்ல பைலட்டே இல்லையாமே?” பயணி வேடத்தில் ஒற்றன் தூண்டில் போட்டான்.

நம்மாளு “ஆமாம். அப்படித்தான் சொன்னாங்க”

“உங்களுக்கு ஒண்ணும் பயமில்லையா?”

“எனக்கெதுக்கு பயம்? அந்த சாப்ட்வேர் எங்க நிறுவனத்தால் பண்ணியது, தெரியுமா?”

“ஓ! அப்படியா? உங்கள் நிறுவனம் மேல், உங்கள் ஊழியர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கையா?”

”நம்பிக்கைதான். கொஞ்சம் காத கிட்ட கொண்டு வாங்க. எங்க கம்பெனி சாப்ட்வேர்ங்கிறதால, இது முதல்ல ஸ்டார்ட்டே ஆகாது. அப்புறம் எங்க பறக்குறது?”

கன்சல்டன்சி காமெடிகள்!

ட்ரிங் ட்ரிங்...

“ஹலோ”

“கிருஷ்ணனா?”

“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”

“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க”

“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”

“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”

“இது ஒரு முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளது?”

“ஆறு வருஷம்”

“உங்க தொழில்நுட்ப அனுபவங்களை பத்தி சொல்லுங்க?”

“நான் கடந்த ஆறு வருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் வேலைப் பார்த்துவருகிறேன். தற்போது தொழில்நுட்ப அணித்தலைவராக இருக்கிறேன்.”

“உங்கள் வருடாந்திர சம்பளம்?”

“எட்டு லட்சம்”

“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“பத்து லட்சம்”

“இந்த நேரத்தில் இது அதிகம். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.”

“சரி.”

“இந்த வேலை கிடைத்தால், எவ்வளவு நாட்களில் சேர முடியும்”

“ஒரு மாதம். என்னிடம் சில கேள்விகள் உள்ளது.”

”கேளுங்க”

“நான் வெளிநாட்டு பணியை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?”

“கண்டிப்பா. நீங்கள் சேர்ந்த சில நாட்களில் வெளிநாடு அனுப்பப்படுவீர்கள்.”

“அதேப்போல், இனி நான் அதிகமாக மேலாண்மை பொறுப்பில் ஈடுபட எண்ணியுள்ளேன். பணி உயர்வு வாய்ப்பு எப்படி?”

“உங்கள் தகுதியை பார்க்கும் போது, நீங்கள் அதற்கு தகுதி உள்ளதாக தோன்றுகிறது. பிரகாசமான வாய்ப்பு உள்ளது”

“பணி சூழ்நிலை எப்படி? வேலை நேரம் என்ன? அதிக நேரம் வேலை பார்ப்பதில் தொந்தரவில்லை. ஆனால், அதுவே தொடர்ச்சியாக இருக்க கூடாதுல்ல. இங்க பார்த்தீங்க, நைட் பத்து மணிவரை இருக்க வேண்டி இருக்கிறது.”

“பணி சூழ்நிலை சிறந்த நிறுவனம் இது. பணி நேரம் இங்கு சிறப்பா நிர்வாகம் செய்யப்படுகிறது.”

“சரி சரி”

“வேறேதும் கேள்வி உள்ளதா?”

“இல்லை.”

“நேர்காணலுக்கு இந்த சனிக்கிழமை வரமுடியுமா?”

“ம்ம்ம்.... சரி. வருகிறேன். எங்கு?”

“டைடல் பார்க்.... ஏபிசி கம்பெனி”

“போன வைய்யா! நான் அங்கத்தான் வேலை பார்க்குறேன்.”

டொக்.

நீதி : என்ன வாங்குறோம்ன்னு தெரிஞ்சு, பேரம் பேசுங்க.

சனி, 5 செப்டம்பர், 2009

என் புகைப்படக்கலை!இது கொஞ்சம்(நிறைய) ஓவர்தான், இருந்தாலும் நான்
எடுத்த
புகைப்படங்கள் என் செல்லோட virus க்கு del ஆகிடகூடாதுன்னுதான்
வலைப்பூவில்
போட்டு வைக்கிறேன்!
புகைப்படங்கள் அனைத்தும் என் cell camera எடுக்கப்பட்டது!

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

வாங்க சிரிக்கலாம்!
நண்பர்களே!

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது நான் ரசித்த சில துணுக்குகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் படித்துவிட்டு சிரித்து மகிழுங்கள்!

தோழி பொம்மி மற்றும் சத்யாவுக்கு , இந்த வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதுவேன், எனவே அடிக்கடி புது புது செய்த்களை படிக்கலாம்...

நம்ம ஜோக்ஸ் படிச்சிட்டு மன்மோகன் சிங்கே முகத்த மூடிகிட்டே சிரிக்கிறார்!


புதுமொழிகளில் சில ...

மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.

வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?

இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.

நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.

ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.

Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.

மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.

வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.

அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும், MCA படிச்சா பொம்மி கூட progam போடுவா!


நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.

jokes


டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?

***********
டாக்டர்! என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா...
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!
***********

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...
***********

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும், எடுத்திட்டு போயிடறாங்க.
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்.
***********

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
***********

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?
***********

வியாழன், 3 செப்டம்பர், 2009

உலகின் முதல் கடவுள் பெற்றோர்தான் - நடிகர் சிவகுமார்


ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசினார்.

கோவை பேரூர் தமிழ் [^] கல்லூரியில் அருளாட்சி வெள்ளி விழா சொற்பொழிவு நிகழ்ச்சி, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் [^] சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது ...

ஒவ்வொரு மனிதனும் அடக்கத்துடன் வாழ கற்றுக் கொண்டால், மிகப் பெரிய இலக்கை எட்ட முடியும். பொறுமையை விட உயர்ந்த தவமும், கருணையை விட பெரிய அறமும் இல்லை.

மனிதர்களிடையே கருப்பு, வெள்ளை என வண்ணங்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஒற்றுமை என்ற எண்ணத்தில் வேறுபாடு இருக்கக் கூடாது.

ஒவ்வொரு மனிதனிடமும், அன்பு, கல்வி [^], நீதி, உயர்ந்த பண்பு போன்ற பழக்கங்கள் இருந்தால் சான்றோர்களால் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படுவர்.

இரண்டாம் உலகப்போரில் கோடிக்கணக்கான மக்கள் [^] கொல்லப்பட்டதற்கு காரணம், மனிதநேயமின்றி அரக்கத்தனத்துடன் நடந்த நிகழ்ச்சி என்று கூறலாம் .

இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் தலைதூக்காமல் இருக்க, சமுதாயத்தில் ஒற்றுமையும், மனிதநேயமும், மத நல்லிணக்கமும் அவசியம்.

அன்றைய காலத்தில் கஷ்டப்பட்டு பணம் செலவழித்து, சொத்துக்களை விற்று, வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு நம் நாட்டில் சேவை செய்தனர்.

ஆனால், தற்போது அரசு உதவித்தொகை, சலுகைகளை பயன்படுத்தி படித்து விட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை கவுரமாக நினைக்கின்றனர்.

நம்மை கேட்காமல் படைத்த கடவுள், நமக்கு தேவையானவற்றை உரிய நேரத்தில் நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில் கடமையை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.


காதல் பொறுக்கி!


நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?
-----செ.சுந்தரராஜன்

ராஜசேகர ரெட்டி! ஒரு சகாப்தம் !

ராஜசேகர ரெட்டி, ஆந்தர முதல்வர், நேற்று காலையில் விமான விபத்து காரணமாக உரியிழந்திருப்பவர்!
நம் காசில் கழ கண்மணிகளை பற்றி கவிதை எழுதும் முதல்வர்கள் மத்தியில் கொஞ்சம் (இல்லை இல்லை, நிறையவே) மக்களுக்காக
உழைத்திருக்கிறார்.
எது எப்படியோ அவரது ஆன்மா சாந்தியடைய நாம் கடவுளிடம் வேண்டுவோம்!

புதன், 2 செப்டம்பர், 2009

லேசா! லேசா!

அன்று கடற்கரையில் நடந்தது
என்னவோ நாம்
இருவரும்தான்
!

மணலில்
பதிந்தது என்னவோ என்
கால் தடம் மட்டுமே!

நீ
அவ்வளவு லேசா லேசா
நடகின்றாய் என்றேன் நான் !

லூசா நீ! நான் உனக்குள் இருக்கும் போது
மணலில் எப்படி என் கால் பதியும் என்றாய் நீ!நான் உன்னையும் நீ என்னையும்
காதலிக்கிறோம்!

காதல் நம்மை காதலிக்கிறது!


-------------செ. சுந்தரராஜன்

நாங்கலாம் terrorல !


நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம ஆளு யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா ????.....