சனி, 14 மே, 2011

நீ - நான்- அலைபேசி!


1)நீ!
"ம்ம்" என்று  அனுப்புவாய் என்று 
எதிர்பார்த்துகொண்டிருகும்போது
"ஹா ஹா" என்று அனுப்பி விடுகிறாய் - "ம்ம்ம்ம்" 
என்று புலம்பி கொண்டிருக்கிறேன் நான்!

2)உன் பெயர் திரையில் வரும்போதெல்லாம் 
சிவந்து விடுகிறது என் பேசி! - வெட்கமோ?
கோபமோ ? நானறியேன்!

3)உன் அழைப்புகளுக்கு நான் ஒலி வைக்கவில்லை
உன் அழைப்புகளின் போது மலர் வாசம் வீசுகிறது
என் பேசியில்!  

4) என் பேசியில் எதையும் 2 முறை அழுத்த வேண்டியிருகிறது 
என்கிறாய் நீ! - உடனே என்னையும் 
அவளிடம் கொடுத்து விடு 
என்கிறது என் பேசி!

5) நேரில் உன் பார்வைகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை
பேசியில் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை!
இருந்தும் உன் கேள்விகளுக்காகவே கிறுக்குத்தனம் செய்கிறது 
மனது!

6) உன்னிடம் பேசிய பிறகு இசை கேட்க முடிவதில்லை 
என் பேசியில்! -  ஏன் என்று கேட்டால்  
இப்போதுதானே அவள் குரல் கேட்டாய்! 
அதைவிட இனிது ஒன்றுமில்லை இந்த இசையில் 
என்கிறது!