வெள்ளி, 6 நவம்பர், 2009

வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு!

"உன் கை விரல்கள் மெல்ல மெல்ல button அமுக்கி! உன் இனிமையான குரலில்..." 

சொல்லு  ரமேஷ்!

ம்! என்னடா பண்ணிட்டிருக்க?

office ல தான் இருக்கேன் சொல்லு

இல்ல சும்மாதான் போட்டேன், நல்லா இருக்கியா?

ம்! இருக்கேண்டா! எதாவது படம் பாத்தியா?

ஆமாண்டா! "கண்டேன் காதலை"பார்த்தேன், பரவால்ல பாக்கலாம்!
 
படம் இருக்கட்டும்! போற போக்க பாத்த தமன்னா படம் ஒன்னு வுடாம இவங்க்ய்ளே வாங்கிடுவாங்க போல

நீ ஒன்னு! இனிமே எல்லா படத்தையும் இவங்க வாங்கிடுவாங்க போல, வாங்கலனாலும்  நம்ம ஆளுங்க c.m ட்ட சொல்லி போராட்டம் பண்ணியாவது வாங்க வச்சிடுவாங்க போல இருக்குடா!

அது சரி! எல்லா படத்தையும் இவங்களே வாங்கின எப்படிடா விளம்பரம் பண்ணுவாங்க?

அவங்க அதுக்குனே  தனி channel கூட ஆரம்பிப்பாங்க! 

ங்கொய்யால! வுட்டா நீயே ஐடியா கொடுப்ப போல இருக்கு! வைடா phone அ! office time ல disturb பண்ணிக்கிட்டு!

5 கருத்துகள்:

ஜெட்லி சொன்னது…

நீங்க சொல்ற மாதிரி நடந்தாலும் நடக்கும்...
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை நண்பரே...

ரோஸ்விக் சொன்னது…

கலைச் சேவை பண்ண விட மாட்டய்ங்க போல....:-)

ஆட்டோ இன்னுமா வந்து சேரல? :-)))

பங்காளி அப்படியே ஆட்டோ வந்தாலும் நம்ம குவாலிஸ்-ல ஆள் அனுப்புவம் கவலைபடாதீக.

rajan சொன்னது…

நன்றி ஜெட்லி!

//நீங்க சொல்ற மாதிரி நடந்தாலும் நடக்கும்...
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை நண்பரே...//

அப்ப நானே ஐடியா கொடுத்துட்டனா ?//ரோஸ்விக் சொன்னது…

ஆட்டோ இன்னுமா வந்து சேரல? :-)))


பங்காளி அப்படியே ஆட்டோ வந்தாலும் நம்ம குவாலிஸ்-ல ஆள் அனுப்புவம் கவலைபடாதீக.//


எதுக்கு? நின்னு வேடிக்கை பாக்கவா?

விக்னேஷ்வரி சொன்னது…

ஃபோன் அவர் பண்ணிட்டு உங்களைத் திட்டுறாரா...

ஆமாங்க, விளம்பரத்துக்குன்னே ஒரு தனி சேனல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க.

rajan சொன்னது…

வாங்க விக்கி!

சிகப்பு நான்ங்க!

கருப்பு நண்பர்!