சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!


கருத்துகள் இல்லை: