அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 நவம்பர், 2009

வர்ட்டா! வர்ட்டா! வர்ட்டா!என் ஊரே வர்ட்டா!

             என் திண்டுக்கல் வாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த வேலை முடிந்ததால் மீண்டும் கும்பகோணத்திற்கே செல்கிறேன். நினைத்து பார்த்தால் திண்டுக்கல் என் வாழ்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை அளித்திருக்கிறது.  நான் வலைபதிவு உலகிற்க்குள் நுழைந்ததே இங்கு வந்த பிறகுதான்.என்னதான் ஊருக்கு செல்வதை நினைத்து மகிழ்ந்தாலும் இங்கு கிடைத்த நண்பர்கள் லெனின், ஆண்டோ, விஜயகுமார் (வழக்கறிஞர்) எல்லாரையும் (யப்பா! எல்லார் பேரையும் போட்டாச்சு) விட்டு செல்வதை நினைக்கையில் மனது கனத்து போகிறது.    
-----------------------------------------------------------------------------------------------
                  திண்டுக்கல்லில்  இருந்த வரையில் (இன்று வரை) அண்ணனின் வீட்டில் தங்கி இருந்ததால், அவரின் பெண் குழந்தை k.g - II படித்து கொண்டிருக்கிறாள். அவளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட நான் செல்வது வழக்கம், தினமும் ஏதாவது ஒரு விசயத்திற்காக   என்னிடம் சண்டையிடும் அவள், நான் ஊருக்கு செல்வது அறிந்ததாலோ என்னவோ இன்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். அவளின் புன்னகை என்னை இங்கே இருக்க சொல்கிறதா? அல்லது நான் ஊருக்கு போவதிற்காக மகிழ்ச்சியா? தெரியவில்லை. ஆனாலும் அவளின் புன்னகை..
பெரியவர்கள் புன்னகைக்கும் போது அழகாக தெரிகிறார்கள்.
குழ்ந்தைகள்  புன்னகைக்கும்  போது புன்னகை அழகாக இருக்கிறது...         

இது அவள் இல்லை 
------------------------------------------------------------------------------------------------------    
 இனி தொடர்ந்து பதிவு எழுவது கொஞ்சம் கடினம்தான், முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ( ஏன்? நாங்க சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா?). நேரம் கிடைத்தால் உடனே வலைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.  எனவே அடுத்த பதிவுக்கு சிறிது நாள் ஆகலாம், உங்கள் பின்னூடகளுக்கு பதிலளிக்க நேரமானால் யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் (என்னமோ பின்னூட்டமா கொட்ற  மாதிரி).


மீண்டும் சந்திக்கலாம்



இது நான் தாங்க! 
--------செ.சுந்தரராஜன்--------


செவ்வாய், 6 அக்டோபர், 2009

நண்பா!


வாழ்வின் எல்லா சாபங்களையும் சந்தித்தது போல்
ஒரு வெறுப்பு, பயங்கர கடுப்பு,
ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

நம்ம மேல தான் தப்போ!. என்றெல்லாம்
சிந்தித்தபடி நான் அமர்ந்திருந்த நேரத்தில்
அங்கு வந்த என நண்பன் சொன்ன அந்த 3 வார்த்தைகள்


என் அம்மா சொன்னதை விட பெரியது!

காதலியின் வார்த்தைகளை விட இனியது !

அப்பாவின் ஆறுதலை விட மகிழ்ச்சியானது!

அது !



அது !



அது !


அது !


அது !



மச்சி நானும் பெயில்டா

திங்கள், 5 அக்டோபர், 2009

இதையெல்லாம் பாக்குறப்போ!


  • கஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..
  • ரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்ப அதிர்ச்சி (எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே!) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், "மச்சி! தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..
  • எல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..
  • சண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...
  • இந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...
  • zip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..
பேசாம மூடிகிட்டு (வாயதான்) நம்ம வேலையவே பாத்திருக்கலாம்னு தோணுதுங்க...(உங்களுக்கும் அப்படித்தானே?)