(ஒரே இருக்கைனா ஒரே desk ).
அவன் பேச ஆரம்பித்தான், 2 ஆவதா இருந்தவனிடம்
"மச்சி! நீ யார் fan? " என்றான்.
"விஜய் மச்சி! ஏன் கேட்குற?" என்றவுடன் .
அவரை பற்றி ஒரு joke சொல்லி அந்த விஜய் ரசிகனை
(விஜய் நடிச்ச ரசிகன் இல்ல,விஜயோட ரசிகன்)
வெறுப்பு ஏற்றினான்.
பிறகு அடுத்தவனிடம் "மச்சி! நீ யார் fan? ".
அதற்க்கு அவன் மிகவும் ""தலை"க்கனத்துடன் (நல்லா கவனிங்க தல இல்லை"தலை") "அஜித்! மச்சி" என்றான்.
அதற்க்கு அவன் சொன்ன joke கேட்டவுடன் விஜயே தேவலாம் என்றாகிவிட்டது.
இப்படி எல்லாரிடமும் கேட்டு எல்லாரையும் கடுப்பாக்கிவிட்டு என்னிடம்வந்தான்.
என்னிடம் "மச்சி! நீ யார் fan? ".
நான் " இன்றைய தமிழகம்
நாளைய பாரதம்
நாளை மறுநாளைய உலகம்
அடுத்த அமெரிக்க அதிபர்
வெள்ளை உள்ளம்
டில்லியின் கில்லி
முகவையின் முத்து
தமிழகத்தின் சொத்து
வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்"
என்றேன்.
அவன்"இது உனக்கு தேவையா?"(வடிவேலு style ல்) என்று அவனக்கு அவனே கேட்டு கொண்டுவேறு desk க்கு ஓடிவிட்டான்.
அன்றிலிருந்து அவன் யாரிடமும் கேட்பதில்லை "மச்சி! நீ யார் fan? ".
டிஸ்கி: எப்பேர்பட்ட துன்பம், அவமானம் வந்தாலும்
அண்ணன் ஜே.கே.ரித்திஷ்
பெயரை உச்சரித்தவன் காப்பாற்றபடுவான்.
ஸ்டார்ட் மீஸீக்..
"இருந்தாக்கா அள்ளிக் கொடு
இல்லேன்னா சொல்லிக் கொடு"