அப்பாவின் ஐடியாக்களையும்
தம்பியின் மரியாதையையும்
காதலியின் காதலையும்
நான் தவறவிட்ட காலங்களில்
நான் தவறாமல் பெற்றது
உன்னைத்தான்!
என்னுடன் என் வீடு
இல்லாத நேரங்களிலும்
நீ இருந்திருகிறாய்!
தாயின் கருவில் நான்
இருந்த நேரங்களை விட
உன்னுடன் தெருவில் இருந்த
நாட்கள் பாதுகாப்பானவை
எனக்கு!
நம் உறவில் குறைகள்
இல்லாத போதும் - நாம்
பரிசளித்துகொண்ட அறைகளை
மறக்கவில்லை நான்!
மனைவியாலும் பிரிக்க
முடியாத நம் உறவு
அவளின் மரணத்திற்கு பிறகு
நம் பிள்ளைகளால் பிரிக்கப்பட்டவுடன்
"நண்பா"
என்ற வார்த்தைகள் என்
செவிகளில் கேட்கும் நேரங்களில்
உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகிறது!
..........செ. சுந்தரராஜன்.....