காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2011

நீ - நான்- அலைபேசி!


1)நீ!
"ம்ம்" என்று  அனுப்புவாய் என்று 
எதிர்பார்த்துகொண்டிருகும்போது
"ஹா ஹா" என்று அனுப்பி விடுகிறாய் - "ம்ம்ம்ம்" 
என்று புலம்பி கொண்டிருக்கிறேன் நான்!

2)உன் பெயர் திரையில் வரும்போதெல்லாம் 
சிவந்து விடுகிறது என் பேசி! - வெட்கமோ?
கோபமோ ? நானறியேன்!

3)உன் அழைப்புகளுக்கு நான் ஒலி வைக்கவில்லை
உன் அழைப்புகளின் போது மலர் வாசம் வீசுகிறது
என் பேசியில்!  

4) என் பேசியில் எதையும் 2 முறை அழுத்த வேண்டியிருகிறது 
என்கிறாய் நீ! - உடனே என்னையும் 
அவளிடம் கொடுத்து விடு 
என்கிறது என் பேசி!

5) நேரில் உன் பார்வைகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை
பேசியில் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை!
இருந்தும் உன் கேள்விகளுக்காகவே கிறுக்குத்தனம் செய்கிறது 
மனது!

6) உன்னிடம் பேசிய பிறகு இசை கேட்க முடிவதில்லை 
என் பேசியில்! -  ஏன் என்று கேட்டால்  
இப்போதுதானே அவள் குரல் கேட்டாய்! 
அதைவிட இனிது ஒன்றுமில்லை இந்த இசையில் 
என்கிறது! 



திங்கள், 2 மே, 2011

காதல் தேவதை பதவி!

 

உனக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகும்
வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது என் பேசியில்!

நண்பர்களின் நடுவே நான் நிற்கையில் 
நீ அழைத்தால் மகிழ்ச்சியை விட  மமதை கொள்கிறது மனது!

நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே 
இல்லை உன் பேச்சு வழக்கு!

உன் குழந்தை கோவம் காணவே - நான் 
காதல் குறும்பு செய்கிறேன்!   

உன்னை தேடி வரும்போதெல்லாம் சாலையின் 
இருபுறமும் நீயே தெரிகிறாய்!
காதல் தேவதை பதவிக்கு ஆள் எடுக்கிறார்களாம் 
உன்னை போட்டியிட சொல்லி என் உயிரை எடுக்கிறார்கள்!

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!


புதன், 24 நவம்பர், 2010

ஒவ்வொருமுறையும் !


ஒவ்வொருமுறையும் சொல்ல நினைத்து
உன் பின்னால் வரும்போதும் 
இந்த முறை  
நண்பனின் பயமுறுத்தலுக்கும்
சகோதரனின் கேலிக்கும்
தோழியின் நகைப்புக்கும் 
ஆளாககூடாதென்று
சொல்லிவிடத்தான் நினைக்கிறது மனது!

இவர்களிடம் கத்தி திரிகிற என் காதல் 
உன் பார்வைக்கு முன் ஊமையாவதால் 
இந்த முறையும் சொல்லாமலே திரும்புகிறது 
உன்னை பின்தொடரும் என் காதல்!   

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உன் அழகும்! என் காதலும்!

 

முதல் நாள்  பள்ளி  செல்லும் 
குழந்தையை போல அலறி துள்ளி குதிக்கிறது
உன் அழகு!
வேலையிருந்து ஓய்வு பெறுபவனின் 
கடைசி நாளை போல் மௌனபட்டு கிடக்கிறது 
என் காதல்!

நண்பனின் பிறந்தநாள் மகிழ்ச்சியை 
போல் அமர்களபடுகிறது
உன் அழகு!
நண்பனின் மரணத்தை போல் 
கலக்கம் கொள்கிறது 
என் காதல்!


காதலிக்கு தரும் ஒற்றை ரோஜாவை 
போல தனித்து நிற்கிறது 
உன் அழகு!
இறுதி சடங்கில் நசுங்கிவிடும் 
பூவை போலஆகிவிடுகிறது 
என் காதல்!

சிறுமி, காதலி, மனைவி, தாய், கிழவியாகி 
இறந்து விடுகிறது 
உன் அழகு!
இன்னும் பிரசவமாகாத கர்ப்பமாகதான்
இருக்கிறது 
என் காதல்!

 

சனி, 12 ஜூன், 2010

யாரடி நீ?



யாரடி நீ?

என் இருவிழிகளொன்றும் குருடில்லையே!

எங்கிருந்தாய் நீ?

நான் இதுவரை உன்னை கண்டதில்லையே!



பேருந்தின்  ஜன்னலோரங்களில் அமர்ந்து

நான் தேடுவது உனைத்தான் என்று

உன்னை பார்க்கும்வரை நான் அறியவில்லையே!




உறவினர்களின்  திருமண புகைப்படங்களில்

தேடி! தேடி! நான் பார்த்த பெண்களில்

சத்தியமாக நீயில்லையே!



கல்லூரி தோழிகளில் நீயிருக்க வாய்ப்பில்லை!

அவர்களின் தோழியாகவது இருந்திருப்பாயா?

என்று எனக்கு தெரியவில்லையே!



இவைகளில் நீ இல்லாதது

என்னுடன் மணமேடையில் மணபெண்ணாக

இருக்க போவதற்குத்தான் என்பதில்

எனக்கொன்றும் மறுப்பில்லையே!




என் காதலியே!

எப்படியும் நீ ஆகிவிட வேண்டும்

என் மனைவியே!

இதில் உனக்கொன்றும் மறுப்பில்லையே?



.........செ. சுந்தரராஜன்.......  

திங்கள், 26 அக்டோபர், 2009

உனக்கென்ன?


என் கனவுகளில் நீ வருவதில்லை
நீயே எனக்கு கனவாகத்தான் 
இருக்கிறாய்!  


உன் பின்னால் வந்த ஆண்களை விடுத்து
மக்கள் தொகை கணக்கிடுவதற்கு
பத்து விரல்களே அதிகம்!


மின்னலை படம் பிடித்ததால் தான்
என் புகைப்பட கருவி கெட்டு விட்டதாய்
நண்பன் சொன்னான்!
நான் உன்னை பற்றி சொன்னேன்!
ஆமாம் நீ கூட ஒரு வகையில்
மின்னல்தானே!


செயற்கை மூளை பொருத்தப்பட்ட
உலகின் முதல் ரோபோ உன்னைத்தான்
தேடிகொண்டிருக்கிறதாம் காதலிக்க!
பாவம் அதற்க்கு தெரியாது
நீ இயற்கை மூளை படைக்கப்பட்ட
ஒரு எந்திரம் என்று!    


உனக்கென்ன நீ பெண்ணாக
பிறந்துவிட்டாய்!
ஆணாக பிறந்திருப்பது
நானல்லவா!
..........செ.சுந்தரராஜன்.......

வெள்ளி, 2 அக்டோபர், 2009

அழைப்பு மணி!


சாலையில் கை கோர்த்து செல்லும்
காதலர்களை முன் சென்று பார்க்கிறேன்!
நனறி கடவுளே!
இதில் பெண்ணவள் என்னவள் இல்லை!


தொலைபேசி அழைக்கும்போதும்
அழைப்புமணி ஒலிக்கும்போதும்
வந்திருப்பவர்களுக்காக மகிழாத மனது
வராத உன்னை எண்ணி வருந்துகிறது !


கைபேசி ஒலிக்கும்போது மனது
உன் பெயரை சொல்லும் - ஆனால்
திரை நண்பனின் பெயரை காட்டும்போது
மௌனமாகிறது என்
கைபேசியும்! உதடுகளும்



என்றேனும் நீ அழைப்பாய் என வாங்கிய
கைபேசியும் உன்னிடம் மட்டும் பேசுவது
என்றிருக்கும் என் மனதும் வீணாகிக் கொண்டிருக்கிறது!
அவை இறந்துபோகும் முன்

ஒருமுறையாவது
அழைப்பாயா?


-----செ. சுந்தரராஜன்

வியாழன், 3 செப்டம்பர், 2009

காதல் பொறுக்கி!


நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?
-----செ.சுந்தரராஜன்

புதன், 2 செப்டம்பர், 2009

லேசா! லேசா!

அன்று கடற்கரையில் நடந்தது
என்னவோ நாம்
இருவரும்தான்
!

மணலில்
பதிந்தது என்னவோ என்
கால் தடம் மட்டுமே!

நீ
அவ்வளவு லேசா லேசா
நடகின்றாய் என்றேன் நான் !

லூசா நீ! நான் உனக்குள் இருக்கும் போது
மணலில் எப்படி என் கால் பதியும் என்றாய் நீ!



நான் உன்னையும் நீ என்னையும்
காதலிக்கிறோம்!

காதல் நம்மை காதலிக்கிறது!


-------------செ. சுந்தரராஜன்

சனி, 29 ஆகஸ்ட், 2009

காதல் அன்றி வேறரியோம் !


உன் ஒற்றை பார்வைக்காக
உறக்கமின்றி
உன் பின்னாலே
தொடரும் காலங்களில்
என் செவிகளில் உன் சிரிப்பொலி
மட்டும் கேட்கும்
என்
விழிகளில் உன் பிம்பம்
மட்டும் தெரியும்
ஆனால்
உனக்கோ
என்னை தவிர மற்றவை
மட்டுமே
தெரிகிறது!
என
என் நண்பர்கள் சொல்ல கேட்டு
சிரித்தேன்!
பைத்தியமாடா உனக்கு? என்று
அவர்கள்
கேட்டபோது - ஆமாம் அவள் மீது !
என
பதில் சொல்ல தெரிந்த
எனக்கு !!!
அதையே நீ கேட்ட போது சொல்வதற்கு என்னிடம் பதிலே இல்லை !
------செ.சுந்தரராஜன்