சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 அக்டோபர், 2009

இதுதான் சரியான நேரம்!

              இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம் (நீங்க கேட்கலனா கூட நான் சொல்லுவேனே). தமிழ் வலை பதிவு உலகத்தில் ஏறத்தாழ அனைவரும் அந்த படத்தை பற்றி நல்ல விதமாகவும் , கேவலமாகவும், விமர்சித்தும்   பேசியபோது கூட நான் அந்த படத்தின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
(சரி! எழுதவில்லை).இப்போது அந்த படத்தை பற்றிய கருத்துகள் குறைந்ததே இந்த பதிவெழுத சரியான நேரம்.


             அது எந்த படம்? என்று நீங்கள் கேட்கலாம், ஆனாலும் நான் எப்படி சொல்லுவேன்? சொல்லாததுதானே இந்த பதிவை போடுவதற்கு அடித்தளம். கெட்ட வார்த்தையில் என்னை திட்டிவிட்டு நீங்கள் செல்ல நினைக்கலாம், இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் நான் இந்த பதிவு போட காரணம், நான் அந்த படத்தின் கதாநாகயனின் தீவிர ரசிகன்.(ரசிகன் என்றதும் விஜய் என்று நினைத்து கொள்ளாதீர்கள்)
             என்ன பதிவு போடலாம் என்று யோசித்தபோது   அந்த படத்தை பற்றி எழுதாதையே ஒரு பதிவாக எழுதிடலாம் என்று சிந்தித்ததின் பலன்தான் இந்த மொக்கை பதிவிற்கான அடித்தளம் (என்னது மறுபடியும் முதலேர்ந்தா?) .
            அது என்ன படமாக இருக்கும்  என்று நீங்கள் பின்னுட்டங்களில்
(ம்! ம்! பின்னுட்டங்கள் வாங்க எவ்வளோ செய்ய வேண்டி இருக்கு(அப்படியே போட்டுட்டாலும்!)) சொல்லலாம்.

 டிஸ்கி:தலிவர் படத்தை பத்தி எப்படியாவது எழுதுவோமில்ல (இருக்குஆனா இல்ல)   

 

புதன், 7 அக்டோபர், 2009

அண்ணாமலை remake????


அண்ணாமலை என்ற காலத்தால் அழியாத காவியத்தை அதே இயக்குனர்மீண்டும் ஆறுமுகம் என்ற பெயரில் மறு உருவாக்கம்(remake) செய்துள்ளார். மூலகதையின் சாராம்சம் கெடாமலும், ரசிகனின் நினைவு திறனை கருத்தில்கொண்டும் காட்சிகளை உருவாக்கி ரசிகனின் இதயங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார்.(அப்பதானே இவரோட அடுத்த படத்திற்கு(அந்த நினைப்பு வேறஇருக்கா?) போகாமல் தப்பிக்கலாம்).

பில்லா remake ல் விஷ்ணு வர்தன் சில கதாபாத்திரங்களை மாற்றியமைத்துபுரட்சி செய்தது போல் சுரேஷ் கிருஷ்ணாவும் செய்துள்ளார்.

இயக்குனரின் கற்பனை திறனை பறை சாற்றும் வகையில் அண்ணாமலைக்கும், ஆறுமுகத்திற்கும் உள்ள 10 வித்தியாசங்களை பட்டியல் இடுகிறேன்.
  1. அண்ணாமலையில் ரஜினி கதாநாயகன் , இதில் பரத் என்று ஒருவர்.
  2. அதில் குஷ்பூ. இதில் ப்ரியாமணி.
  3. அதில் தங்கை வைஷ்ணவி.இதில் சரண்யா மோகன்(நான் படத்துக்குபோனதே இவங்களுக்காகதான்)
  4. அதில் ராதாரவி, இதில் ரம்யா கிருஷ்ணன்.(இயக்குனரின் தைரியத்தை நாம்பாராட்டியே ஆக வேண்டும்)
  5. அதில் சரத் பாபு , இதில் ஏதோ ஒரு அமுல் பேபி(பரவாயில்லை, சுமாராகநடிக்கிறார்)
  6. அதில் ரஜினி RayBan கண்ணாடி அணிதிருப்பார், இதில் பரத் எதோ சுமாரான கண்ணாடி.
  7. அதில் ஜனகராஜ், இதில் கருணாஸ் (அவரே தேவலாம்)
  8. குஷ்பூ குளிப்பதை(முழுதாக) ரஜினி மட்டுமே பார்ப்பார், இதில்ப்ரியாமணியை நாமும் சேர்ந்து பார்க்கிறோம்.
  9. முக்கியமான வேறுபாடு அதில் ரஜினி பால்காரர், இதில் பரத் இட்லிவிற்பவர்.(எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)
  10. ரஜினிக்கு வயதான பின்னர் climax, இதில் நமக்கு வயதாவதற்கு முன் climax (என்று நினைக்கிறேன்).
படத்தில் பரத் ஆடுவது, பாடுவது, சண்டை போடுவது , பஞ்ச் dialogue பேசுவது, செண்டிமெண்ட் காட்சிகளில் தான் அழுது நம்மையும் அழவைப்பது என ரொம்ப busy ,பாவம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் விடுங்கள்.

ப்ரியாமணி இதே போல் இன்னும் 2 இல்லை இல்லை 1 படம் நடித்தாலே Oscar award நிச்சயம்(எவ்வளவோ பண்ணிட்டோம்! இதை பண்ணமாட்டோமா?).

கடைசியாக பரத்திற்கு ஒரு எச்சரிக்கை!

நீங்கள் வேண்டுமானால் இன்னொரு ரஜினி ஆவதற்கோ , விஜய் ஆவதற்கோமுயற்சி செய்யுங்கள்.

எங்கள் அண்ணன்

இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" போல்

ஆக முயற்சி செய்வதை கை விட்டு விடுங்கள்.

ஒரு சூரியன்! ஒரு சந்திரன் என்பதை

ஒரே வீரத்தளபதி மட்டுமே இருக்க முடியும்

அது

எங்கள் அண்ணன்


இன்றைய தமிழகம்

நாளைய பாரதம்

நாளை மறுநாளைய உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர்

வெள்ளை உள்ளம்

டில்லியின் கில்லி

முகவையின் முத்து

தமிழகத்தின் சொத்து

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்னது படத்து climax ஆ, இவளவையும் கேட்ட பின் இந்த படத்தின் climax பாக்கஉங்களக்கு தைரியம் இருக்கலாம், எனக்கு இல்லை. (எல்லா duet பாடல்களும்முடிந்த பின் theatre ல் நமக்கென்ன வேலை.)






திங்கள், 7 செப்டம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும்! - ஒரு பார்வை


இந்த படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க வேண்டும்.படம் நன்றாக இருக்கிறது, ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.(எடுத்திருக்கலாம்).

படத்தில் எனக்கு பெரிய குறையாக தெரிந்தது, ப்ரித்வி, பிரியா காதல், ஏனோ ரொம்ப செயற்கையாக இருப்பது போல் ஒரு பிரமை. எனக்கு ஒரு சந்தேகம் படத்தின் ஹீரோ சக்தி தானோ என்று? சக்தி கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது , அவரின் காதலியாக வரும் அனுஜா அய்யர் அவ்வளவு நன்றாக நடித்தும் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர்!!!
கவலை வேண்டாம் இவர் உன்னை போல் ஒருவன்- லும் இருக்கிறார் , அங்கு பார்த்து கொள்ளலாம் , (ஆனா இவங்க பர்தா போட்டுட்டு வெட்கப்படும் போது சூப்பர்ங்க) .

மற்றபடி பாக்யராஜ் , கார்திக்(எல்லா வேடமும் இவருக்கு பொருந்துகிறது, இவர் ஹீரோவா நடித்திருக்கலாம்), பாலவாக வரும் நண்பன்(அவர் பெயர் தெரியலை) எல்லோரும் நன்றாக செய்து இருக்கின்றனர்.(கவனிக்கவும் சிறப்பாக அல்ல நன்றாக).

படத்தின் சிறப்பம்சங்கள் ஒளிப்பதிவும் , இசையும், அதிலும் பாலசுப்ரமணியெம்மின் கேமரா கண்களுக்கு விருந்தளிக்கிறது, அழகாய் பூக்குதே பாடலில் நம் மனதை உருகுகிறார் விஜய் அன்டோனி.

இயக்குனர் பல இடங்களில் கவனத்தை சிதற விட்டு இருந்தாலும் (ஒரு சண்டைக்காட்சியில் கூட, தண்ணீரில் விழுந்தும் ப்ரித்வியின் முடி நனையவில்லை. இயக்குனர் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார்) , flash back 2000 ஆம் வருடம் என்பதால் செல்போன் பயன்படுத்தாதது,( சில காட்சிகளில் std booth இல் இருந்து பேசுகின்றனர்) தன் புத்திசாலிதனத்தை காட்டி இருக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும் -- காக்டெய்ல் சரக்கு

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

கந்தசாமி விமர்சனம்


கந்தசாமி


இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் ஏறக்குறைய அறுபத்தைந்து லட்சம் கோடிகள். உலகின் மொத்த ஏழைகளில் முப்பது சதவீதம் பேர் இந்தியர்கள். பதுக்கி வைத்திருக்கும் பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தால் ஏற்றத் தாழ்வு நீங்குமே என்று சிபிஐ அதிகா‌ரி ஒருவருக்கு தோன்றினால் என்ன நடக்கும்...? அதுதான் கந்தசாமி.


நடைமுறையில் இருக்கும் பிரச்சனையை நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளில் தீர்வு காணும் ஜென்டில்மேன், முதல்வன், ரமணா, அந்நியன், சிவா‌ஜி படங்களின் வ‌ரிசையில் புதிதாக சுசி.கணேசனின் கந்தசாமி.

இதுபோன்ற படங்களில் பார்வையாளர்களின் உணர்வுகளை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் திரைக்கதை, காட்சிகள் முக்கியம். கதாபாத்திரங்களின் ஸ்கின் டோனைகூட கணிக்க முடியாத கந்தசாமியில் உணர்வுபூர்வமான அத்தகைய காட்சிகள் இல்லாதது மிகப் பெ‌ரிய குறை.

படத்தின் கதைக்கு வருவோம். திருப்போரூ‌ரில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது கஷ்டத்தை பேப்ப‌ரில் எழுதி அங்குள்ள மரத்தில் கட்டி தொங்கவிடுகிறார்கள். அவர்களின் கஷ்டம் எதுவாக இருந்தாலும் அது உடனே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அதிசயத்துக்கு காரணம் கந்தசாமி கடவுள் என்று ப‌ரிபூரணமாக நம்புகிறார்கள் பொது ஜனங்கள்.

கந்தசாமி கஷ்டப்படும் ஜனங்களுக்கு அள்ளித் தருவது கரன்ஸி என்பதால் இது சாமியின் வேலை அல்ல ஏதோ ஆசாமியின் வேலை என்று களத்தில் இறங்குகிறார் காவல்துறை அதிகா‌ரி பிரபு. ஆள், அம்புடன் அவர் துப்பு கிடைக்குமா என்று திணறிக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் காரணம் சிபிஐ அதிகா‌ரி கந்தசாமிதான் என இருந்த இடத்திலேயே தெ‌ரிந்து கொள்கிறார் ஸ்ரேயா. எப்படி...?

ஸ்ரேயாவின் தந்தை பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி) மிகப் பெ‌ரிய கோடீஸ்வரர். அவரது வீட்டை சோதனையிட்டு, முக்கியமான டாக்குமெண்ட்டுகள் அனைத்தையும் கைப்பற்றுகிறது விக்ரம் அண்டு கோ. இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க பக்கவாதம் வந்ததுபோல் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. தனது அப்பாவின் நிலைக்கு விக்ரம்தான் காரணம் என்று அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் ஸ்ரேயா. இந்த நேரத்தில் டிவி-யில் கந்தசாமி கடவுளின் மகிமை பற்றி ஒளிபரப்புகிறார்கள். ஒன்றும் ஒன்றும் இரண்டு... அந்த கந்தசாமிதான் இந்த கந்தசாமி. கண்டுபிடித்து விடுகிறார் ஸ்ரேயா.

விக்ரம்தான் கந்தசாமி என்பதை பிரபுவும் கண்டுபிடித்து அவரை நெருங்கும்போது, ஸ்ரேயாவின் சூழ்ச்சியால் ஆசிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொள்கிறார் விக்ரம். அதன் பிறகு மெக்சிகோ செல்லும் கதை, தமிழகத்துக்கே ரோல் மாடலாக திகழும் பணக்கார வில்லன் என யு டர்ன் அடித்து சின்ன அட்வைஸுடன் முடிகிறது.

கொக்கரக்கோ சேவல் சவுண்டுடன் மன்சூர் அலிகானை புரட்டியெடுக்கும் விக்ரமின் அறிமுகம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. அவர் சூப்பர்மேனெல்லாம் இல்லை, நண்பர்களின் உதவியால் ரோப் கட்டிதான் பறக்கிறார் என்ற விளக்கம் பகுத்தறிவுக்கு உவப்பாக இருந்தாலும் படத்தின் டெம்போவுக்கு கசப்பாக அமைகிறது. சிபிஐ அதிகா‌ரியாக டிப் டாப் மீசையில்லா விக்ரம் டாப். சார்லி அண்டு கோ-வை பயமுறுத்த போடும் பெண் வேசம் நம்மையும் பயமுறுத்துகிறது. படத்தின் சீ‌ரியஸ் மூடுக்கு இயக்குனர் வைத்த சிதை அது.


ஸ்ரேயாவின் முகத்தைவிட இடை நன்றாக நடிக்கிறது, ஸா‌ரி... வெடிக்கிறது. சி‌ரித்துக் கொண்டே விக்ரமை கவிழ்க்க நினைக்கும் அவரது கதாபாத்திரம் குலுமணாலி ‌ஜில். விக்ரமின் அறையில் தனது உடையை கிழித்துக் கொண்டு காப்பாத்துங்க என்று நாட்டிய ஸ்டைலில் நெ‌ளிகிறாரே... இளசுகள் தொலைந்தார்கள். அப்பாவின் நாடகம் பு‌ரிந்து விக்ரமை நிஜமாக காதலிக்கும் போது தமிழ் சினிமா ஹீரோயினுக்கான அவரது ரோல் முழுமையடைகிறது.

பிரபுவுக்கு அலட்டலில்லாத போலீஸ் அதிகா‌ரி வேடம். விக்ரமும் அவரது பால்யகால நண்பர்களும் பதுக்கல் பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பதற்காக சொல்லப்படும் காரணத்தில் வலுவில்லை. மெக்சிகோ எபிசோட் எதற்கு? அங்கு நடக்கும் பண பட்டுவாடாவை பு‌ரிந்துகொள்ள தனித் திறமை வேண்டும். சொகுசு பேருந்தில் குட்டி குளியலறை, குஷன் படுக்கை என சிட்டியை வலம்வரும் வில்லன் ஜெய்சங்கர் படத்தை நினைவுப்படுத்துகிறார்.

புட்டே‌ஜில் வடிவேலுவின் காட்சிகளில் கைவைத்து விட்டார்கள் போல. திடீரென துண்டு துண்டாக வந்துவிட்டுப் போகிறார் வைகைப் புயல். நான்தான் கந்தசாமி என சேவல் கெட்டப்பில் அவர் காட்டும் மேன‌ரிசம் ரகளை. போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு நடக்கும் வாட்டர் ட்‌‌ரீட்மெண்டுக்கு கோலி சோடாவை குலுக்கி உடைத்த மாதி‌ரி தியேட்ட‌ரில் பொங்கி சி‌ரிக்கிறார்கள்.

பாடல்களில் பாஸ் மார்க் வாங்கும் தேவிஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் கோட்டைவிடுகிறார். ஆ‌க்சன் படம் என்றால் காட்சிக்கு காட்சி கொட்டி முழக்க வேண்டுமா வாத்தியங்களை? காஸ்ட்யூமருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ். ஸ்ரேயாவின் உடையில் மறைப்பதைவிட வெளிப்படுத்தும் பகுதி அதிகம். நுணுக்கமும்கூட.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஏமாற்றம். விக்ரமின் அறிமுக காட்சியில் பத்து வினாடிக்கு ஒருமுறை லைட்டிங் மாறுகிறது. சில காட்சிகளில் மஞ்சள் காமாலையோ என சந்தேகப்படும் அளவுக்கு எங்கும், எதிலும் மஞ்சள் மயம். சில பாடல் காட்சிகளில் திரை பளீரென்று இருக்க நடிகர்களை தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிபிஐ அதிகா‌ரி விக்ரம் படம் முழுக்க பணக்காரர்கள் வீட்டில் ரெய்டு செய்கிறார். இன்கம் டாக்ஸ்காரர்களின் வேலையல்லவா அது? விக்ரமின் ராபின் ஹுட் வேலைக்கு அவரது மேலதிகா‌ரி முதற்கொண்டு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். வித்யார்த்தியின் ஆட்கள் கியூ பிராஞ்ச் அதிகா‌ரிகள் என்றதும் விக்ரம் அப்படியே நம்புவதும், அவர்களின் கற்பழிப்பு மிரட்டலுக்கு அடங்கிப் போவதும் விக்ரமின் இன்டலக்சுவல் கேரக்டருக்கு விழுந்த அடி.

ரமணா முதல் சிவா‌ஜி வரை பலப் படங்களின் சாயலும், திரைக்கதையின் பலவீனமும், லா‌ஜிக் மீறல்களும் நிறைந்த கந்தசாமி... ஹைடெக் கந்த(ல்)சாமி.