பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! ஸ்ரீ பெரும்புதூர்

             நான் சென்னையில் இருந்த அந்த ஆறு மாத காலத்தில் எனது வார இறுதி நாட்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர் ஆக்ரமித்து கொண்டது, எனது மற்றொரு அத்தை இங்குதான் உள்ளார். நான் ரசிக்கும் ஊர்களில்  இந்த ஊர்க்கென்று தனி இடமுண்டு. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் ஊரினை (ஊருக்கு வெளியிலதான், காஞ்சிபுரம் செல்லும் வழி) ஆக்ரமித்திருந்தாலும் அமைதியான ஒரு நகரம் (??).
ஸ்ரீ பெரும்புதூர்
             பொதுவாக பெரிய ஊர்தான் என்றாலும் நல்ல வளர்ச்சியடைந்த, எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு கிராமம் போன்றுதான் காட்சியளிக்கிறது. என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதற்குள் இந் நகரின் வளர்ச்சியை நினைத்தால்!!!!
 வரலாறு 

                     மேற்கண்ட படத்திலுள்ளது போல் விஷ்ணு பக்தர் ராமானுஜர் அவதரித்த இடம் என்பது மட்டுமே தெரியும், மற்றபடி தோற்றம் தெரியவில்லை. நிறைய திரைப்படங்களில் வருகிறது ராமானுஜர் கோவில் குளம், முக்கியமாக கே.எஸ்.ஆர் படங்களில்.     

சிறப்பம்சங்கள் 
                                     ஸ்ரீ பெரும்புதூர் என்றதும் நினைவுக்கு வருவது முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் என்பது சற்றே வருந்த கூடிய விஷயம்தான். எனினும் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நினைவிடத்தின் பராமரிப்பு அசர வைக்கிறது. நீங்கள் உள்ளே எங்கேனும் ஒரு சிறிய காகித துண்டினை கூட கண்டெடுக்க முடியாது.அவ்வளவு சுத்தம். (நான் கொண்டு குப்பை போட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால்,1. உள்ளே நுழைந்தவுடன் குப்பை போடும் ஆசை உங்களுக்கே போய்விடும்!
2.வெளியில் துப்பாகியுடன் இரண்டு பேர் உங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுவர்)..
 ராஜீவ் காந்தி நினைவிடம் சில புகைப்படங்கள்

 


                                      ஸ்ரீ பெரும்புதூரின் மற்ற சிறப்பம்சங்கள் என்றால் உலகளாவிய நிறுவனங்களின் கிளைகளும், ராமானுஜர் கோவிலும் தான்...
கோவில்கள்
                                      இங்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் ராமானுஜர் கோவில்தான் புகழ் பெற்றது. இக்கோவிலும் நிறைய திரைபடங்களில் வந்திருக்கிறது, நல்ல பெரிய கோவில். விஷ்ணு ஸ்தலம்...


   
  மக்கள்
                      இவ்வூரில் நிறைய பேர் தெலுங்கு பேசுபவர்கள், வீட்டை விட்டு வெளியே நிற்பவர்களை பார்ப்பது அபூர்வம்.யாருடனும் வீணாக பேசி பொழுதை கழிப்பதில்லை , ஆனால் அதற்காக எதாவது கேட்டால் கூட 5 நிமிடம் யோசித்து விட்டே பதில் சொல்கிறார்கள். கையில் நிறைய காசு வைத்திருந்தாலும் மேலும் எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனை உடையவர்கள்.
                  கொரிய தேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் கொரிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.(t.nagar bus stand லிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்களில் குறைந்தது 10 கொரிய நாட்டினர் இருப்பார்கள்).
பொருளாதாரம்
                              நிறைய திருமணமாகத வெளியூர்  இளைஞர்கள் இருப்பதால் பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். ஒரளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும் ஏழைகள் நிறைய உண்டு.


                                         நேரமிருந்தால் சென்னைவாசிகள்   கடற்கரைக்கும், city centre க்கும் போவதை விட  ஸ்ரீ பெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தையும், அதன் சுத்தத்தையும் அமைதியும் அனுபவித்து விட்டு வாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்.( அனேகமாக திண்டுக்கல்)
..............செ. சுந்தரராஜன்...........    









ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! பண்ருட்டி

                   தொடரின் அடுத்த நகரம் பண்ருட்டி, ஏற்கனவே குவிந்த (?!!?!!?) பின்னூட்டங்கள் மற்றும் வோட்டுகளின் எண்ணிகையை கணக்கில் கொண்டு மீண்டும் தொடங்குகிறேன். (உடனே பழைய பதிவுக்கு சென்று வோட்டுகளையும், பின்னூட்டங்களையும் பார்பவர்களுக்கு தமிழ் மறந்து போக கடவது) 
பண்ருட்டி 
                           கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் 97 ஆவது km இல உள்ள நகரம்.இயக்குனர் மன்னிக்கவும் ஒளி ஓவியர் தங்கர் பச்சனின் சொந்த ஊர் (சொல்ல மறந்த கதை உள்ளிட்ட தங்கர் பச்சன் படங்களில் பார்த்திருக்கலாம்). பண்ருட்டியின் வரலாறு சரியாக தெரியாததால் பண்ருடிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பற்றிய வரலாறு இங்கே.
வரலாறு 
                            நான் 4 ஆம் வகுப்பு படித்து(???)கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சில பிரச்சினைகளின் மூலம் எனக்கு பாதுகாப்பு குறைவு என்று கருதிய என் தந்தை இங்கு என் அத்தை வீட்டில் என் படிப்பை தொடர செய்தார். (ஒரு வருடம் மட்டுமே), இது மட்டுமில்லாமல் எந்த விடுமுறையாக இருந்தாலும் (சனி, ஞாயிறு தவிர) இங்கு வந்து டேரா போட்டுவிடுவேன் என்பதால் இவ்வூரின் சந்து, பொந்து எல்லாம் நல்ல பழக்கம்.

  சிறப்பம்சங்கள்
                            பண்ருட்டி என்றதுமே நினைவுக்கு (எனக்கு) வருவது  முந்திரி பருப்புகள், அந்தளவுக்கு இங்கு முந்திரி காடுகளும், முந்திரி தொழில்களும் அதிகம், ஆனால் பண்ருட்டி பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்கள் பலாபழம் இங்கு famous என்று நினைத்து கொண்டிருப்பார்கள், ஆனால் வடலூரும், நெய்வெலியும்தான் பலாபழத்திற்கு புகழ் பெற்றவை. 


  இணையத்தில் பண்ருட்டியின் புகைப்படங்கள் சரிவர கிடைக்கவில்லை, கிடைத்தவரை போட்டுள்ளேன், பொறுத்தருள்க.
 கோவில்கள்    
                                       பண்ருட்டியின் புகழ் மிக்க கோவில்கள் என்று பார்த்தால் 
  1. சோமேஷ்வரர்  திருக்கோவில்
  2. தன்வந்திரி கோவில் (நந்தவனம் கோவில்)
  3. திருவதிகை கோவில் (சிறிது தூரத்தில்)       
                                   திருவதிகை கோவில் புகைப்படம்

மக்கள்
             பண்ருட்டி ஒரு வணிக நகரமென்பதால் இங்கு செட்டியார் மற்றும் மார்வாடி இன மக்கள் அதிகம் உள்ளனர். பெரும்பான்மையோர் சொந்த தொழில் செய்கின்றனர். இங்கு பொற்கொல்லர்களும் நிறைய பேர் உண்டு. மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துகின்றனர் , ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை, நல்ல உழைப்பாளிகள்,  நேர்மையானவர்கள், கோபக்காரர்கள் (நேர்மை தவறும்போது)..
பொழுதுபோக்கு
                               பண்ருட்டியில் மக்கள் கூட இடங்கள் குறைவு என்ற போதும் கோவில்களும் , திரையரங்களும் , காந்தி பூங்காவும் அந்த குறையை சரி செய்கின்றன. அருகிலயே கடலூர் இருப்பதால் நேரமிருந்தால் உடனே silver beach தான்.  
 
நீங்கள் பண்ருட்டி சென்றால் தங்குவதற்கு ஏற்ற இடம் ரங்கா லாட்ஜ் , ஊரின் புகழ் பெற்ற தங்குமிடம், எல்லா நிலையிலும் அறைகள் கிடைக்கும், உங்கள் வசதிகேற்றத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
 மறுபடி சந்திப்போம்.
..............செ.சுந்தரராஜன்.........    

புதன், 21 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 2

அப்பாடா! ஒரு வழியா எல்லா ஆணிகளும் முடிந்து விட்டன. பதிவிற்கு செல்லும் முன் வோட்டு போட்ட அனைவருக்கும் நன்றி!
 திரையரங்கங்கள்    
                                     எங்கள் ஊர்(அடப்பாவி இப்பதாண்டா எங்க ஊர்னு சொல்லி இருக்க) மக்களுக்கு திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வம்    திரையரங்கங்கள்  மீது கிடையாது. இந்த விஷயம் எனக்கு மற்ற ஊர்களுக்கு சென்று திரைப்படங்கள் பார்க்கும் வரை உரைக்கவில்லை. மற்ற ஊர்களின்  திரையரங்கங்கள் உடன் ஒப்பிடும்போது இங்கே பராமரிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்.
கல்வி
                   கல்வியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல! எல்லா விதமான பள்ளிகளும் இங்கே உண்டு, அவரவர் வசதிக்கேற்ப பயன்பெறலாம்.
ஹி! ஹி
                  எனக்கு தெரிந்த வரையில் பெண்கள்(figures) எல்லா ஊர்களிலும் அழகாகவே  இருக்கின்றனர். ஆனாலும் ஸ்ரீ ரங்கத்திலும், கும்பகோணத்திலும்தான்  தேவதைகளாகவே இருக்கின்றனர்.(சுஜாதாவின்  ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்தவர்கள் அறிவார்கள்.) நீங்கள் இந்த அனுபவத்தை பெற இங்கு வந்தால் மட்டுமே முடியும். ஜாக்கிரதை எங்கள் ஊர் பெண்கள் மிகவும் தைரியசாலிகள்.(கோவிலில் சாமிகளை வணங்குவது போல, தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்வது உத்தமம்!)


 இத்துடன் கும்பகோணம் தொடர் முடிகிறது. அடுத்து எந்த ஊர் என்று உங்கள் யூகங்களை பின்னுட்டங்களில் சொல்லலாம். 

 

செவ்வாய், 13 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 1

முதலில் இத்தொடருக்காக ஓட்டு பதிவு அனைவருக்கும் நன்றி! வாங்க பயணத்தை ஆரம்"பிக்கலாம்"....

கும்பகோணம் 
                                 எனது சொந்த ஊர் கும்பகோணதிலிருந்து 3 km தொலைவில் (தம்பி 3km ங்கறது தொலைவு இல்ல, கிட்ட) உள்ள கொரநாட்டு கருப்பூர் (கோலங்கள் serial ல கூட ஒரு தடவை காமிச்சாங்க)  அப்டிங்கற நல்ல வளர்ச்சியடைந்த (என்ன 190 cm இருக்குமா?) எல்லா வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு அருமையான கிராமம். ஆனா நாம இங்க நகரங்களை பற்றி மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்திருப்பதாலும், கும்பகோணம் பற்றிய தகவல்கள் நிறைய இருப்பதாலும்...

வரலாறு 
                                 இப்ப எல்லாரும் கலி முத்திடுச்சு, கலி முத்திடுச்சு அப்படிங்கராங்களே அதே மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவோ ஒரு தடவை இப்படித்தான் கலி முத்திடுச்சாம், உடனே நம்ம சிவபெருமான் கோபம் வந்து நீர் முலமா இந்த உலகத்தை அழிசிட்டராம், அப்பறம் கோபமெல்லாம் குறைஞ்சு மறுபடி உலகத்தை உருவாக்குரத்துக்காக (அவருக்கும் பொழுது போகணுமில்ல) ஒரு கும்பத்தில (கலசம், இப்பயும் புரியலனா குடம்) தன்னோட உயிரணுக்களை வைத்து அந்த நீரில் மிதக்க விட்டராம், அப்புறம் அது சரியான இடத்திற்கு வந்ததும் ஒரு வில்லில் அம்பை வைத்து அந்த குடத்தை பார்த்து விட்டராம், உடனே அந்த குடம் உடைஞ்சு உள்ள இருக்குற உயிரணுக்கள் எல்லாம் நீரில கலந்து உயிரினங்கள்(அமீபா?) எல்லாம் மறுபடி தோன்ற ஆரம்பிச்சுச்சாம், அந்த குடத்தை சிவபெருமான் உடைத்து உயிர் உருவாக செய்த இடம்தான் இன்று குடந்தை எனப்படும் கும்பகோணம் (கும்பம் கோணலாக இருந்ததால் கும்பகோணம்)


 சிறப்பம்சங்கள்  
  (i)மகாமகம் 
                              கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது மகாமகம்  (மகாமக குளத்தின் அமைப்பே கலச குடத்தின் அமைப்பில்தான் இருக்கும்). 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இக்குளத்தில் குளித்தால் நாம்  செய்த பாவங்களெல்லாம் போய் விடும் என்பது ஐதிகம் (அதுக்கு பிறகு செய்ற பாவங்கள என்ன பண்றதுனெல்லாம் கேட்கக்கூடாது).இப்போதான் 2002 ல் வந்தது இனிமேல் 2014 ல் வரும். முடிந்தால் வாருங்கள். 

 மகாமக குளம் சில புகைப்படங்கள்  















(ii)கோவில்கள் 
               கும்பகோணம் என்பது temple சிட்டி (கோவில்களின் நகரம்)  என்ற அடைமொழியாலும் அழைக்கப்படுகிறது.அந்தளவுக்கு திரும்பிய இடமெல்லாம் சிறியது முதல் பெரியது வரையிலான கோவில்கள் நகரை அழகுப்படுதுகின்றன. கும்பகோண முக்கிய கோவில்களின் பட்டியல்.
  1. ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்
  2. சாரங்கபாணி பெருமாள் கோவில் 
  3. சக்கரபாணி திருக்கோவில்
  4. நாகேஸ்வரர் கோவில் 
  5. சோமேஸ்வரர் கோவில் 
  6. காளஹஸ்திஷ்வரர்  கோவில்
  7. ஐராவதிஸ்வரர் கோவில் 
  8. பட்டிச்வரம் துர்கை அம்மன் கோவில் 
இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்(இதுக்கே கண்ணை கட்டுதே)...
சில கோவில்களின் புகைபடங்கள் இதோ
1.ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்

2.சாரங்கபாணி கோவில்  







  
இன்னும் நிறைய படங்கள் இருந்தாலும் இவையிரண்டும் முக்கியமானவை ,மற்ற கோவில்களை நீங்களே கூட தேடி பார்க்கலாம். பாலகுமாரனின் "பாகசாலை" என்ற புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
 (iii) மக்கள்
                     இங்கு எல்லாவகையான மக்களும் பரவி  இருந்தாலும், பிராமணர்கள் அதிகம். மக்களுக்குள் வேற்றுமை கிடையாது, அன்பானவர்கள்,அதிகம் பேசுபவர்கள் , அப்பாவிகள், பொழுது போக்கு விரும்பிகள், ஆனால் இங்கு கோவில்களையும், மகாமக குளத்தையும் தவிர  மக்கள் கூடுமளவுக்கு பெரிய இடங்கள் குறைவு. வணிகம் செய்வர்களும் உண்டு.
  (iv) பொருளாதாரம்    
                      பொருளாதராத்தை பொறுத்தவரையில் ஒன்றும் குறைவில்லை, பெரும்பான்மையான மக்கள் தன்னிறைவு அடைந்தவர்கள்தாம். சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயம் மூலம் தானியங்கள் எளிதில் கிடைப்பதால் no prpblem. காவேரி ஆறு ஓடுவதால்(????) தண்ணீர் பிரச்சினையும் கிடையாது. 
             

         நான் ஏதோ ஒரு பதிவில நம்ம ஊரை பற்றி சொல்லிவிடலாம்னு நினைத்திருந்தேன், எழுத, எழுத ஏதோ ஒன்றை விட்ட மாதிரியே இருக்கு, எனவே நாளைக்கும் கும்பகோணம்தான்.
           நாளைக்கி சில பல முக்கியமான
"அம்சங்கள்" (ஹி! ஹி!)  பற்றி பாக்கலாம். 
அதுக்கு முன்னாடி படிச்சோமா, போனோமான்னு இல்லாம தமிழிஷளையும், தமிழ்மனத்திளையும் மறக்காம வோட் போடுட்டு போங்கோ!

திங்கள், 12 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்!

பயணம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத(கூடாத) ஒன்று. நான்இன்றைய வரையில் நான் சென்று வந்த சில நகரங்களை (த்தோடா! இவரு கிராமத்துக்கு போவவே மாட்டாரு) பற்றிய சில பல சுவாரசியமான   (அத நாங்கசொல்லணும்) தகவல்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர் பதிவாகபோடலாமென்று இருக்கிறேன்(நாராயணா!இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா). உங்களிடம் இருந்து வரும் ஆதரவை பொறுத்து எழுதவதை பற்றிமுடிவு செய்ய வேண்டும்(இல்லனா மட்டும் இவரு விடர போறாரு).

அதற்க்கு முன் இத்தொடர் பற்றி சில:

  1. இத்தொடர் முழுதும் தமிழகத்தின் நகரங்கள்(நீ போய்ட்டு வந்த  நகரங்கள்னுசொல்லு)பற்றி மட்டுமே .
  2. நீ எதுக்கு அந்த ஊருக்கு போன என்பது போன்ற கேள்விகள் தடை செய்யபடுகின்றன.சொல்வதை படித்து கருத்து மட்டும் சொல்லும் என் போன்ற நல்ல உள்ளங்களை மிகவும் வரவேற்கிறேன்.(நா கோவமா கிளம்பறேன், என்ன பாத்து என்ன வார்த்தை சொல்றான்)
  3. அந்தந்த ஊர்களின் தன்மை, மக்கள், பொருளாதாரம்(மன்மோகன் சிங் உன்னத்தான் தேடுராரம்)போன்றவை பற்றி என்னால் முடிந்தவற்றைஎழுதுகிறேன்.(நைனா figure ங்களை வுட்டுடியே).
  4. தொடர் எழுதுவதால் மற்ற இடுகைகள் குறையும் என கனவு காண வேண்டாம், மற்ற சேவைகளும் தொடரும் ஏன்னா நமக்கு பிடுங்க வேண்டிய  ஆணிகள் மிக மிக குறைவு.
முதலில் எனது ஊரான கும்பகோணம் பற்றி தொடங்குகிறேன்.(அஸ்க்கு புஸ்க்குநாளைக்குதான்)..


பயணத்திற்கு தயாரா?