அண்ணாமலை என்ற காலத்தால் அழியாத காவியத்தை அதே இயக்குனர்மீண்டும் ஆறுமுகம் என்ற பெயரில் மறு உருவாக்கம்(remake) செய்துள்ளார். மூலகதையின் சாராம்சம் கெடாமலும், ரசிகனின் நினைவு திறனை கருத்தில்கொண்டும் காட்சிகளை உருவாக்கி ரசிகனின் இதயங்களில் நீங்கா இடம்பிடிக்கிறார்.(அப்பதானே இவரோட அடுத்த படத்திற்கு(அந்த நினைப்பு வேறஇருக்கா?) போகாமல் தப்பிக்கலாம்).
பில்லா remake ல் விஷ்ணு வர்தன் சில கதாபாத்திரங்களை மாற்றியமைத்துபுரட்சி செய்தது போல் சுரேஷ் கிருஷ்ணாவும் செய்துள்ளார்.
இயக்குனரின் கற்பனை திறனை பறை சாற்றும் வகையில் அண்ணாமலைக்கும், ஆறுமுகத்திற்கும் உள்ள 10 வித்தியாசங்களை பட்டியல் இடுகிறேன்.
- அண்ணாமலையில் ரஜினி கதாநாயகன் , இதில் பரத் என்று ஒருவர்.
- அதில் குஷ்பூ. இதில் ப்ரியாமணி.
- அதில் தங்கை வைஷ்ணவி.இதில் சரண்யா மோகன்(நான் படத்துக்குபோனதே இவங்களுக்காகதான்)
- அதில் ராதாரவி, இதில் ரம்யா கிருஷ்ணன்.(இயக்குனரின் தைரியத்தை நாம்பாராட்டியே ஆக வேண்டும்)
- அதில் சரத் பாபு , இதில் ஏதோ ஒரு அமுல் பேபி(பரவாயில்லை, சுமாராகநடிக்கிறார்)
- அதில் ரஜினி RayBan கண்ணாடி அணிதிருப்பார், இதில் பரத் எதோ சுமாரான கண்ணாடி.
- அதில் ஜனகராஜ், இதில் கருணாஸ் (அவரே தேவலாம்)
- குஷ்பூ குளிப்பதை(முழுதாக) ரஜினி மட்டுமே பார்ப்பார், இதில்ப்ரியாமணியை நாமும் சேர்ந்து பார்க்கிறோம்.
- முக்கியமான வேறுபாடு அதில் ரஜினி பால்காரர், இதில் பரத் இட்லிவிற்பவர்.(எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)
- ரஜினிக்கு வயதான பின்னர் climax, இதில் நமக்கு வயதாவதற்கு முன் climax (என்று நினைக்கிறேன்).
ப்ரியாமணி இதே போல் இன்னும் 2 இல்லை இல்லை 1 படம் நடித்தாலே Oscar award நிச்சயம்(எவ்வளவோ பண்ணிட்டோம்! இதை பண்ணமாட்டோமா?).
கடைசியாக பரத்திற்கு ஒரு எச்சரிக்கை!
நீங்கள் வேண்டுமானால் இன்னொரு ரஜினி ஆவதற்கோ , விஜய் ஆவதற்கோமுயற்சி செய்யுங்கள்.
எங்கள் அண்ணன்
இன்றைய தமிழகம்
நாளைய பாரதம்
நாளை மறுநாளைய உலகம்
அடுத்த அமெரிக்க அதிபர்
வெள்ளை உள்ளம்
டில்லியின் கில்லி
முகவையின் முத்து
தமிழகத்தின் சொத்து
வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" போல்
ஆக முயற்சி செய்வதை கை விட்டு விடுங்கள்.
ஒரு சூரியன்! ஒரு சந்திரன் என்பதை
ஒரே வீரத்தளபதி மட்டுமே இருக்க முடியும்
அது
எங்கள் அண்ணன்
இன்றைய தமிழகம்
நாளைய பாரதம்
நாளை மறுநாளைய உலகம்
அடுத்த அமெரிக்க அதிபர்
வெள்ளை உள்ளம்
டில்லியின் கில்லி
முகவையின் முத்து
தமிழகத்தின் சொத்து
வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்" மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்னது படத்து climax ஆ, இவளவையும் கேட்ட பின் இந்த படத்தின் climax பாக்கஉங்களக்கு தைரியம் இருக்கலாம், எனக்கு இல்லை. (எல்லா duet பாடல்களும்முடிந்த பின் theatre ல் நமக்கென்ன வேலை.)