காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமெடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2009

எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்!

ஒரு காலகட்டத்தில் நான் விவேக் என்றால்
மிகவும்
ரசித்தேன் (ஒரு காலம்தான் இப்ப இல்ல)
அந்தளவுக்கு
அவரின் timing dialogues (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) எனக்கு பிடிக்கும்.
ஆனால் அவரின் நேரம்(ஹீரோ ஆசை(7.30 சனி ) யார விட்டிச்சு?)
நடித்த படங்களிலெல்லாம் ஒரே மாதிரி நடித்ததால் (சரி பேசி கொண்டிருந்ததால்)....

இப்படி இருந்த அவர்...


இப்படி ஆகிவிட்டார் ...




சரி இப்ப என்ன திடீர் விவேக் பாசம் (1.எல்லாரும் மறந்துபோன நேரத்துல?
2.
எவ்ளோ பணம் கொடுத்தார்(பாவம் அவரே அதுக்குதான் கஷ்டபடுறார்,
மறுபடி hero வா நடிக்கனுமில்ல)).
நேற்று ஆதித்யா சேனல் இல் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன், அதுலமனுஷன் நேரத்துல(அதான்பா timing) பூந்து விளையாடிருப்பார்(ஒடனேகொசுவத்தி சுத்தனும்ல).

ஒரு உ. தா(பார்த்திபன் கனவு) தான்

விவேக் மனைவி: உள்ள வாங்க, இன்ப அதிர்ச்சி காத்துட்டு இருக்கு!

விவேக் : ஆஞ! எனக்கு இன்பமா அதிர்ச்சியா இருக்கே!!!

இதோ அந்த படத்திலருந்து சில காட்சிகள்!




பாத்து சூதனமா இருந்துக்குங்க சார் , அப்புறம் கவுண்டர்பெல்(சவுண்டர்)மாதிரி
உங்க dialogue எல்லாம் mobile தான்இருக்கும்


புதன், 30 செப்டம்பர், 2009

அது என்னடாது இரட்டிப்பு?!?!?!?!

தொலைக்காட்சிகளில் அன்றாடம் பல விளம்பரங்கள் வந்தாலும் சில மட்டுமே நம் கண்ணையும் கருத்தையும் கவரும். அவற்றில் முக்கியமானது இந்த பிரபல பான விளம்பரம்.(நம்மகிட்ட வாங்கி கட்டிகிறதுக்கேனே விளம்பரம் எடுப்பானுங்க போல)
இரட்டிப்பு! இரட்டிப்பு! இரட்டிப்பு!
அது என்னடாது இரட்டிப்பு? (எதோ காசுதான் இரட்டிப்பு ஆவுது போல) அப்படின்னு நாமளும் பாத்தா, அவங்க company பானத்தை குடித்தால் நம்ம வீட்டு பிள்ளைகள் இரட்டிப்பு வேகத்துல வளருமாம்.(அடங்ங் கொன்னியான் ஒரு லாஜிக் வேணாம், இங்க என்ன பேரரசு படமா ஓடுது?).

இதெல்லாம்கூட ok, இத நேர்ல பார்த்து confirm பண்றதுக்குனு ஒரு group போறமாதிரி காட்றானுக பாருங்க அப்படியே tv ய தூக்கி போட்டு உடைக்கிற அளவு கோவம் வருது.(அதுலயும் அந்த group தலிவி doctor வேஷம் போட்டு இருக்கும், இவனுக எல்லாம் doctor படிச்சவங்களை என்ன நினைச்சிட்டு இருக்கானுங்கனு எனக்கு தெரிஞ்சாவனும்).

ஒரு குழந்தை 4 அடி இருக்க வேண்டிய வயசில் 8 அடி இருக்குமா? அப்ப சாதரணமா 6 அடி வளர்ச்சி உள்ள ஒருவர் 12 அடி ஆய்டுவாரோ?

யப்பா உயரமா வளர்ந்து guiness ல இடம் பிடிக்கணும்னு ஆசை இருந்தா இந்த இதையே குடிங்கப்பா .(பாத்து உங்க பக்கத்து வீட்டுக்காரனும் இதையே குடிச்சி தொலைக்க போறான்.)

எப்படியெல்லாம் torcher பன்றாங்கே. உக்காந்து யோசிப்பாங்களோ!!!!

வேற இடமே கிடைக்கலயாப்பா உங்களுக்கு?


கொடுமை,கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் .

அந்த மாதிரி நாம நியூஸ் பாக்கலாம்னு உக்காந்தா(நாம நியூஸ் பாக்குறதே உலக அதிசயம், அதுல இவங்க வேற ) இவங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியலை ,கரெக்டா விளம்பரத்த போடுவார்கள் இந்த marketing சகோதரர்கள்.
செய்ங்கடா உங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ செய்ங்கடா அப்படின்னு 24 மணி நேர நியூஸ் சேனலுக்கு(இந்த marketing சகோதரர்கள் சேனல்தான் அதுவும் ) மாத்துனா அங்கேயும் விளம்பரம்.

இதெல்லாம் பத்தாதுனு கிழே நியூஸ் ஓடும் பாருங்க அங்கயும் போட்டான் பாரு பிட்ட!
(அதுவும் முக்கியமான நியூஸ் ஓடும்போதுதான் அணிவதற்கு ஏற்றது "சுடர்மணி ஜட்டிகள்" னு போடுராங்கோ)

வாழ்க உங்க விளம்பர உத்தி! நாடு விளங்கும்!

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கலாட்டா கல்யாணம்!

தரகர் : பொண்ண பத்தி சொல்றேன், நல்லா கேட்டுக்க.
சேகர் : ம்ம்ம்....
தரகர் : இந்த நெத்தி இருக்கே நெத்தி, ஸ்ரீதேவி நெத்தி.
சித்தப்பா : நெத்தியடி
சேகர் : சித்தப்பா, உணர்ச்சிவசப்படதே. பொண்ணு எனக்கு.
தரகர் : காது இருக்கே, ஒரு காது குஷ்பு காது; ஒரு காது ரூபிணி காது
சேகர் : பொண்ணுக்கு மொத்தம் ரெண்டு காது தானே?
தரகர் : ஆமாம் தம்பி. கண்ணு ரெண்டும் ஸ்ரீவித்யா கண்ணு.
சேகர் : ஓஹோ!
தரகர் : இந்த மூக்கு இருக்குல்ல, மூக்கு?
சேகர் : சுகன்யா மூக்கா?
தரகர் : அதான் இல்ல.
சேகர் : மூக்கே இல்லையா? அந்த இடத்துல என்ன இருக்கு? பிளாட் போட்டு வித்துடாங்களா?
தரகர் : ஐயோ, தம்பி! இந்திரா காந்தி மூக்குன்னு சொல்ல வந்தேன்.
சேகர் : என்னய்யா இது? நீ சொல்றது எல்லாம் மொத்தமா கூட்டி பார்த்தா, நம்ம ஜனகராஜுக்கு பொம்பள வேஷம் போட்டமாதிரி வருதேயா???????

வெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...

இன்று காலை எட்டு மணிவாக்கில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தினசரி காலண்டரில் என் ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தபோதே நினைத்தேன். இதுப்போல் ஏதாவது நடக்கும் என்று. சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

நான் எவ்வளவு லக்கி? கொடுத்து வைத்தவன்.

கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

இந்த இந்திய பெருந்தேசத்தில், கோடானு கோடி மக்கள் மத்தியில் ஒரு சில பேருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்ததென்றால் சும்மாவா?

போதும் நிறுத்து! அப்படி என்னத்தான் நடந்தது என்கிறீர்களா?

மூணு மாசம் கழிச்சி வருற தீபாவளிக்கு ஊருக்கு போக, ரயில்ல டிக்கெட் கிடைச்சிடுச்சு! :-)

சாப்ட்வேர் வாங்கலியோ சாப்ட்வேர்!

ஒரு விமான நிறுவனத்திற்கு, சாப்ட்வேர் செய்ய வேண்டிய தேவை வந்தது. எந்த கம்பெனியிடம் வேலையை கொடுப்பது? என்று தீர்மானிக்க ஒரு விநோத திட்டம் தீட்டினார்கள். அச்சமயம், அமெரிக்காவிற்கு செல்ல ஒரே நேரத்தில் இருபது பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார்கள். இது தான் சரியான நேரம் என்று விமான நிறுவனம் ரகசியமாக திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார்கள். ஒன்றுமில்லை, அவர்களின் திறமையை, நம்பகத்தன்மையை, நம்பிக்கையை சோதிக்க போகிறார்கள்.

இருபது சிஇஓ’க்களும், அமெரிக்காவில் நடக்கும் கூட்டமைப்பு மீட்டிங்கிற்கு செல்லும் நாள் வந்தது. ஒவ்வொருவரும் ப்ளைட்டில் ஏறும் போது, அவர்களிடம் தனியாக விமான நிறுவனத்தினர் ஒரு விஷயம் சொல்கிறார்கள்.

“நீங்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், உங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஆளில்லா தானியங்கி’ மென்பொருளால் இந்த விமானம் முதன்முறையாக இயக்கப்படுகிறது. அதில் நீங்கள் பயணம் செய்வது இன்னும் விசேஷமாகிறது.”

என்னது, பைலட் இல்லாம வெறும் சாப்ட்வேர் ப்ளைட் ஓட்டப்போகுதா? பெரிய நிறுவனங்கள் என்பதால், எந்த சாப்ட்வேர் யாருக்கு செய்து கொடுத்தோம் என்று தலைமை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், அதை அப்படியே நம்பினார்கள்.

இப்ப, நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு கலக்கமாகி விட்டது. பயம். நடுக்கம். என்ன பண்றது?

எஸ்கேப் ஆவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள்.

”ஒரு அவசர வேலை வந்திருக்கு. என் டிக்கெட்டை கேன்சல் பண்ணிருங்க.”

”ஓ! மை காட். தாத்தா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரா?” (சின்ன வயசுல இருந்து இக்கட்டான நேரத்துல தாத்தா தான் ஹெல்ப் பண்றாரு)

“அப்படியா? மீட்டீங் கேன்சலா? ஒகே, திரும்ப எப்பன்னு சொல்லுங்க... பை”

“20 கோடி லாஸா? உடனே நான் வாரேன்”

“ஐயோ, வயத்தை கலக்குதே!”

இப்படி பத்தொன்பது பேரும் எஸ்ஸாகிவிட்டார்கள்.

ஆனால், ஒருத்தர் மட்டும் ஜம்மென்று சீட்டில் உட்கார்ந்தார். அவர் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை. பைலட் இல்லாத முதல் விமானம் என்று சொல்லப்படும் அந்த விமானத்தில் பயணம் செய்ய எந்த தயக்கமும் காட்டவில்லை.

விமான சோதனை டீம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இவர்தான். இவர் நிறுவனம் தான். தங்கள் சாப்ட்வேர் தேவையை இவரிடம் தான் கொடுக்க வேண்டும். எதற்கும் பேசி பார்த்து விடலாம் என்று நினைத்து, தங்கள் ஆள் ஒருவரை பயணி போல் வேடமிட்டு, அவர் பக்கத்தில் அமர வைத்தார்கள்.

“என்ன சார்? இந்த ப்ளைட்ல பைலட்டே இல்லையாமே?” பயணி வேடத்தில் ஒற்றன் தூண்டில் போட்டான்.

நம்மாளு “ஆமாம். அப்படித்தான் சொன்னாங்க”

“உங்களுக்கு ஒண்ணும் பயமில்லையா?”

“எனக்கெதுக்கு பயம்? அந்த சாப்ட்வேர் எங்க நிறுவனத்தால் பண்ணியது, தெரியுமா?”

“ஓ! அப்படியா? உங்கள் நிறுவனம் மேல், உங்கள் ஊழியர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கையா?”

”நம்பிக்கைதான். கொஞ்சம் காத கிட்ட கொண்டு வாங்க. எங்க கம்பெனி சாப்ட்வேர்ங்கிறதால, இது முதல்ல ஸ்டார்ட்டே ஆகாது. அப்புறம் எங்க பறக்குறது?”

கன்சல்டன்சி காமெடிகள்!

ட்ரிங் ட்ரிங்...

“ஹலோ”

“கிருஷ்ணனா?”

“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”

“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க”

“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”

“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”

“இது ஒரு முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளது?”

“ஆறு வருஷம்”

“உங்க தொழில்நுட்ப அனுபவங்களை பத்தி சொல்லுங்க?”

“நான் கடந்த ஆறு வருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் வேலைப் பார்த்துவருகிறேன். தற்போது தொழில்நுட்ப அணித்தலைவராக இருக்கிறேன்.”

“உங்கள் வருடாந்திர சம்பளம்?”

“எட்டு லட்சம்”

“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“பத்து லட்சம்”

“இந்த நேரத்தில் இது அதிகம். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.”

“சரி.”

“இந்த வேலை கிடைத்தால், எவ்வளவு நாட்களில் சேர முடியும்”

“ஒரு மாதம். என்னிடம் சில கேள்விகள் உள்ளது.”

”கேளுங்க”

“நான் வெளிநாட்டு பணியை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?”

“கண்டிப்பா. நீங்கள் சேர்ந்த சில நாட்களில் வெளிநாடு அனுப்பப்படுவீர்கள்.”

“அதேப்போல், இனி நான் அதிகமாக மேலாண்மை பொறுப்பில் ஈடுபட எண்ணியுள்ளேன். பணி உயர்வு வாய்ப்பு எப்படி?”

“உங்கள் தகுதியை பார்க்கும் போது, நீங்கள் அதற்கு தகுதி உள்ளதாக தோன்றுகிறது. பிரகாசமான வாய்ப்பு உள்ளது”

“பணி சூழ்நிலை எப்படி? வேலை நேரம் என்ன? அதிக நேரம் வேலை பார்ப்பதில் தொந்தரவில்லை. ஆனால், அதுவே தொடர்ச்சியாக இருக்க கூடாதுல்ல. இங்க பார்த்தீங்க, நைட் பத்து மணிவரை இருக்க வேண்டி இருக்கிறது.”

“பணி சூழ்நிலை சிறந்த நிறுவனம் இது. பணி நேரம் இங்கு சிறப்பா நிர்வாகம் செய்யப்படுகிறது.”

“சரி சரி”

“வேறேதும் கேள்வி உள்ளதா?”

“இல்லை.”

“நேர்காணலுக்கு இந்த சனிக்கிழமை வரமுடியுமா?”

“ம்ம்ம்.... சரி. வருகிறேன். எங்கு?”

“டைடல் பார்க்.... ஏபிசி கம்பெனி”

“போன வைய்யா! நான் அங்கத்தான் வேலை பார்க்குறேன்.”

டொக்.

நீதி : என்ன வாங்குறோம்ன்னு தெரிஞ்சு, பேரம் பேசுங்க.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

வாங்க சிரிக்கலாம்!




நண்பர்களே!

இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது நான் ரசித்த சில துணுக்குகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் படித்துவிட்டு சிரித்து மகிழுங்கள்!

தோழி பொம்மி மற்றும் சத்யாவுக்கு , இந்த வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதுவேன், எனவே அடிக்கடி புது புது செய்த்களை படிக்கலாம்...

நம்ம ஜோக்ஸ் படிச்சிட்டு மன்மோகன் சிங்கே முகத்த மூடிகிட்டே சிரிக்கிறார்!


புதுமொழிகளில் சில ...

மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.

வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?

இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.

நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.

ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.

Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.

மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.

வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.

அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும், MCA படிச்சா பொம்மி கூட progam போடுவா!


நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.

jokes


டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?

***********
டாக்டர்! என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா...
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!
***********

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...
***********

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும், எடுத்திட்டு போயிடறாங்க.
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்.
***********

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
***********

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?
***********





புதன், 2 செப்டம்பர், 2009

நாங்கலாம் terrorல !


நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம ஆளு யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா ????.....

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

இன்றைய கார்டுன்


இந்த கார்டூனை பார்த்தவுடன் சிரிப்பு வந்தாலும் இது கொண்டிருக்கும் செய்தி மிகவும் serious matter. இனிமேலாவது யோசித்து வோட்டு போடுங்கள் நண்பர்களே!

சனி, 29 ஆகஸ்ட், 2009

இப்பவே கண்ணை கட்டுதே!!!! தமிழக் காவல்துறை !!!


"மின் வாரிய அலுவலகத் தில் கொள்ளை போன 2.50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, எங்களால் மீட்க முடியவில்லை' என தங்களது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு சர்ட்டிபிகேட் அளித்துள்ளது மாநகர போலீஸ். இதே போன்று, எண்ணற்ற வாகனத் திருட்டு வழக்குகளிலும், புகார்தாரர்களுக்கு சான்றளித்து கைகழுவி வருகின்றனர். களவு போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல், இப்படியொரு சான்றிதழை வாரி வழங்கவா போலீஸ் துறை செயல்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 2008, ஏப்., 5 நள்ளிரவில் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர், ஆறு கம்ப்யூட்டர், 1.5 கி.மீ., நீள மின் ஒயர், 50க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகளை திருடிச் சென்றனர்; இதன் மதிப்பு 2.50 லட்ச ரூபாய். இது குறித்து, அப்போதைய உதவி செயற்பொறியாளர் மணிவேலு, சரவணம்பட்டி குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித் தார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாரால், 16 மாதங்கள் கழிந்த நிலை யிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், நிர் வாக காரணங்களால் உதவி செயற்பொறியாளர் மணிவேலு, வேறு பணிக்கு மாற் றப்பட்டு, கதிர் வேல் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர், பொறுப்பேற்ற போது, அலுவலகத்தில் கம்ப் யூட்டர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண வசூல் பணிகள், கம்ப்யூட்டர்கள் இல்லாததால் பணிகள் முடங்கின.

கொள்ளை போன கம்ப் யூட்டர்களை மீட்டுத் தருமாறு சரவணம்பட்டி போலீசாரை தொடர்ந்து வற்புறுத்தினார். "கொள்ளையரை பிடிக்காவிடில் மின் வாரியம் விடாது போலிருக்கிறது' எனக் கருதிய போலீசார், வழக்கை மூடிவிட முடிவு செய்தனர். "உமது மின் வாரிய அலுவலகத்தில் திருட் டுப் போன சொத்துக்களை எங்களால் மீட்க முடியவில்லை' என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, உதவி செயற்பொறியாளரிடம் சர்ட்பிடிகேட் கொடுத்துவிட்டனர்; அவரும், அதை பெற்று அலுவலக கோப்பில் சேர்த்துவிட்டார். ரூ. 2.50 லட்சத்துக்கு நேர்ந்த கதி: திருட்டு நடந்தது அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகத்தில்; திருடப்பட்டவை மக்கள் வரிப்பணத்தில் வாங் கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற் றும் சொத்துக்கள்.

அரசு சொத்து களவு போனதற்கே இந்த நிலை என்றால், தனி நபர்களின் சொத்துக்கள் களவு போனால் என்னவாகும்? திருட்டு நடந் தால், குற்றவாளிகளை கைது செய்து, சொத் துக்களை மீட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே போலீசின் கடமை; பொறுப்பும் கூட. அதை விடுத்து, திருட்டு சொத்துக்களை மீட்க முடியவில்லை என வெள் ளைக் காகிதத்தில் சான்றளித்து, கையெழுத்திட போலீஸ் துறை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "மின்வாரிய கான்ட்ராக் டர் - வாரிய அதிகாரிகள் இடையேயான பண செட்டில்மென்ட் மோதல் காரணமாக, அலுவலக கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்கள் இரவில் களவாடப்பட்டன; இக்கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?' என கேள்வி எழுப்புகின்றனர்.

மின் வாரிய அலுவலக திருட்டு வழக்கில் மட்டுமின்றி, வாகனத் திருட்டு வழக் குகளிலும் போலீசார் முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வது கிடையாது. "வாகனத்தை மீட்க முடியவில்லை' என சான்று அளித்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்; இதனால், கிரிமினல்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.களவு போன சொத்துக்களை மீட்க முடியவில்லை, என சான்று அளிக்க போலீஸ் படை பலம் எதற்கு? புலன்விசாரணை எதற்கு? ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு ரைட்டர் மட்டும் போதாதா என்ற கேள்விகள் எழுகின்றன.