புதன், 24 நவம்பர், 2010
ஒவ்வொருமுறையும் !
ஒவ்வொருமுறையும் சொல்ல நினைத்து
உன் பின்னால் வரும்போதும்
இந்த முறை
நண்பனின் பயமுறுத்தலுக்கும்
சகோதரனின் கேலிக்கும்
தோழியின் நகைப்புக்கும்
ஆளாககூடாதென்று
சொல்லிவிடத்தான் நினைக்கிறது மனது!
இவர்களிடம் கத்தி திரிகிற என் காதல்
உன் பார்வைக்கு முன் ஊமையாவதால்
இந்த முறையும் சொல்லாமலே திரும்புகிறது
உன்னை பின்தொடரும் என் காதல்!
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
உன் அழகும்! என் காதலும்!
குழந்தையை போல அலறி துள்ளி குதிக்கிறது
உன் அழகு!
வேலையிருந்து ஓய்வு பெறுபவனின்
கடைசி நாளை போல் மௌனபட்டு கிடக்கிறது
என் காதல்!
நண்பனின் பிறந்தநாள் மகிழ்ச்சியை
போல் அமர்களபடுகிறது
உன் அழகு!
நண்பனின் மரணத்தை போல்
கலக்கம் கொள்கிறது
என் காதல்!
காதலிக்கு தரும் ஒற்றை ரோஜாவை
போல தனித்து நிற்கிறது
உன் அழகு!
இறுதி சடங்கில் நசுங்கிவிடும்
பூவை போலஆகிவிடுகிறது
என் காதல்!
சிறுமி, காதலி, மனைவி, தாய், கிழவியாகி
இறந்து விடுகிறது
உன் அழகு!
இன்னும் பிரசவமாகாத கர்ப்பமாகதான்
இருக்கிறது
என் காதல்!
சனி, 17 ஜூலை, 2010
இப்ப நான் என்ன செய்ய?
1 Message received என்று என் மொபைல் போனில் வந்தவுடன் நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று வந்திருந்தால் நிச்சயமாக அது அவன்தான் "ரமேஷ் ". அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி இதுவாகதான் இருக்கும் "I m ready. r u ready?".
அவன் எப்போதும் அப்படித்தான், நாங்கள் எங்கேனும் செல்வதாக இருந்தால், நான் கிளம்பிவிட்டனா என்று என்னிடமிருந்து வேகமான பதிலை பெறுவதற்காக தொடந்து 10 செய்திகளை அனுப்புவான்.
இன்று நான் கிளம்பி வாசலுக்கு சென்ற பிறகும் கூட அவனது செய்திகளை காணவில்லை. அப்போதுதான் என் மொபைல் போனில் "Govalu calling..." என்று வந்தது, அட! மிஸ்ட் கால் தர கூட பாலன்ஸ் இல்லை என்பவன் இன்று கால் செய்கிறானே என்று எடுத்தவுடன் அவன் சொன்னான்.
"மச்சி! ரமேஷ் முதல்ல போய் டிக்கெட் எடுக்க போறேன் சொல்லி கிளம்பி போனவன், போற வழியிலே ஆக்சிடென்ட் ஆகி ஹெல்மெட் போடததனாலே தலையிலே அடிப்பட்டு ஸ்பாட்லேயே போயடண்டா, நீ சீக்ரம் கிளம்பி வா மச்சி".
இப்போது மீண்டும் 1 Message received என்று என் மொபைல் போனில் வந்தது, நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று கொட்டி தீர்த்து விட்டது.அவன்தான்,விபத்திற்கு முன் அவன் அனுப்பிய செய்தி இப்போதுதான் என் மொபைலில் டெலிவரி ஆகிறது.. இப்போது அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி இதுதான் "Me going first, u follow me must"
நான் அவனை பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன், நீங்களே சொல்லுங்கள் , இப்போ நான் ஹெல்மெட் போடவா? வேண்டாமா?
புதன், 7 ஜூலை, 2010
விஜய் டிவியும் , செம்மொழி பாடலும்!
சென்ற மாதம் முழுதும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்ட செம்மொழி மாநாட்டு மைய்ய நோக்கு பாடலை கண்டுகளிக்கும் போது , என் அபிமானத்திற்குரிய கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுடய சிந்தனை திறத்தை மெச்சி கொண்டிருந்தேன்.
இப்போது பிரச்சினை ஒன்றுமில்லை . மாநாட்டு மயக்கமெல்லாம் தீர்ந்த பிறகு ஒரு நாள் விஜய் டிவி பார்த்து கொண்டிருந்த போது அவர்களின் பாடலை ஒளிப்பரப்ப, அதை பார்த்த எனக்கு எங்கோ ஒரு மின்னல் வெட்டியது . அது தற்செயலாகவும் இருக்கலாம் அல்லது அதிலிருந்து இயக்குனருக்கும் ஒரு மின்னல் வெட்டிருக்கலாம் . அந்த இரு பாடல்களை நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் மின்னல் வெட்டலாம் .
மு.கு: விஜய் டிவி பாடல் செம்மொழி பாடல்க்கு முன்பே எடுக்கபட்டுவிட்டது .
விஜய் டிவி பாடல்
செம்மொழி பாடல்
புதன், 30 ஜூன், 2010
நண்பனும், பதிவராகும் ஆசையும்....
நானெல்லாம் பதிவுலகில் நுழைந்ததே நண்பர்களிடம் படம் (scence ) காட்டுவதற்குத்தான், அதில் என்னை போல் ஒரு ஆர்வக்கோளாறு நண்பன் என் வலைப்பூவை மட்டுமே பார்த்துவிட்டு அவனும் வலைப்பூ தொடங்க ஆசை கொண்டான், அதற்க்கு என்னையே கற்று கொடுக்கும் குருவாக ஏற்றுகொள்வதாகவும் ஒப்புகொண்டான்.
ஒரு நல்ல குருவிற்கு அழகு நல்ல வழிகாட்டுதல்தானே? உடனே நான் அவனிடம் நீ என்னை மட்டும் படித்துவிட்டு பதிவுலகில் நுழைவதைவிட, என் குருமார்களையும் படித்து தெளியவேண்டும் என்று கூறி பதிவுலகின் ஆதர்ச நாயகர்களான பரிசல். கார்கி, கேபிள், சரவணகுமரன் போன்றோரை படிக்குமாறு கூறினேன்.
இரண்டொரு நாள் கழித்து வலைப்பூவை தொடங்கலாமா? என்று கேட்க , அவன் இன்னும் அவார்களை படித்து முடிக்கவில்லை என்றும் , இப்போது தனக்கு எழதும் ஆர்வத்தைவிட, படிக்கும் ஆர்வமே அதிகம் உள்ளது என்கிறான். நானும் அவனது படிக்கும் ஆர்வத்தை மெச்சிவிட்டு அவனிடம் சொன்னேன் " மச்சி!நீ வந்துடேல்ல இனிமே கூவம் சுத்தமாய்டும் ".
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)