செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ஒரு நாள் ஒரு கனவு...




அதிகாலை 3 மணி...

"என்னடா நேத்து கூப்டியா?"
   
"ஆமா அண்ணே! அப்பாட்ட சொல்லி வண்டி சாவி தர சொல்லுனே!" என்றான் தம்பி.  

"டேய்! நா சொன்ன அவரு கேட்பாராடா?"

"நிச்சயமா கேட்பாருன்னே".

"சரிடா, பேசி பாக்குறேன்" . 

"சரிண்ணே" .

அன்று இரவு... 


"ப்பா! பா...!"

"ம்ம்! ம்ம்"

 தம்பி வண்டி சாவி கேட்கறான், கொடுங்களேன்!"

"அது,உனக்குன்னு வாங்குன வண்டிடா!".

"தெரியும்பா, ஆனா அந்த வண்டிய நான் ஓட்டவா போறேன்?"

" ஏற்கனவே உன்ன இழந்துட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே.வேண்டாண்டா, ரொம்ப பயமா இருக்கு!"

"என்னப்பா பண்றது? அது என் விதி! வண்டி வாங்குன அன்னிக்கே போய் சேந்துட்டேன்".அவனை நா பாத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க "

"நீ சொல்லித்.... "

"என்னங்க, என்னங்க என்ன தூக்கத்துல புலம்புறிங்க?" எதாவது கனவா?    

"ம்ம்! ஆமாம், நம்ம பெரிய புள்ளதா, அவனக்கு நேத்து திதி கொடுத்தொம்ல அப்ப சின்னவன் வண்டி வேணும்னு, அவன்கிட்ட வேண்டிகிட்டானாம் , அதான் இவன் இன்னிக்கு வந்து கொடுக்க சொல்றாண்டி!    

வேண்டாங்க! பயமா இருக்குங்க!  

அதான் நானும் சொன்னேன், விடுங்க நா பாத்துக்குறேங்குறான்!  

மறு நாள் காலை 3  மணி ...

"ண்ணே! அப்பா சாவி கொடுத்துடாருன்னே!"

"சரிடா, ஜாக்கிரதையா ஓட்டனும், அவங்களுக்கு tension கொடுக்காதே!".     

"சரிண்ணே". ரொம்ப thanksna

குறிப்பு:-
ஒன்னு சொல்ல மறந்திட்டேன். நான் இறந்து 3 வருஷமாகுது, .
அன்றிலிருந்து நான் அவ்வபோது  என் வீட்டில் இருப்பவர்களுடன் கனவில் பேசிகொண்டிருகிறேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

உன் கிசு கிசு குரலின் சுவை!


1) நீ அணிந்திருந்த ஆடையை போல 
இங்கும் ஒரு பெண் அணிந்திருக்கிறாள் - என்கிறாய் நீ!

உன் அழகு வெளிச்சத்தில் உன் ஆடைகளின் 
நிறங்கள் என் கண்களுக்கு புலப்படுவதே இல்லை! 


2) புதிதாக வாங்கிய கொலுசினை 
அணிந்து வந்து 
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது 
உன் கால்களை அடைந்த 
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை 
போலவே நானும் ஆகிறேன்!   

3) எளிதாய் துவங்கி விடுகிறாய் 
உரையாடலை !
முடிக்க முடியாமல் அல்லாடுகிறேன் நான்!

4) "சொல்லுடா! அப்பா பக்கத்தில இருகார்"  
என்ற உன் கிசு கிசு குரலின் சுவையை அறிய வைத்ததற்கே 
உன் தந்தைக்கு ஆயிரம் கோவில்கள் கட்டலாம்!


புதன், 24 நவம்பர், 2010

ஒவ்வொருமுறையும் !


ஒவ்வொருமுறையும் சொல்ல நினைத்து
உன் பின்னால் வரும்போதும் 
இந்த முறை  
நண்பனின் பயமுறுத்தலுக்கும்
சகோதரனின் கேலிக்கும்
தோழியின் நகைப்புக்கும் 
ஆளாககூடாதென்று
சொல்லிவிடத்தான் நினைக்கிறது மனது!

இவர்களிடம் கத்தி திரிகிற என் காதல் 
உன் பார்வைக்கு முன் ஊமையாவதால் 
இந்த முறையும் சொல்லாமலே திரும்புகிறது 
உன்னை பின்தொடரும் என் காதல்!   

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உன் அழகும்! என் காதலும்!

 

முதல் நாள்  பள்ளி  செல்லும் 
குழந்தையை போல அலறி துள்ளி குதிக்கிறது
உன் அழகு!
வேலையிருந்து ஓய்வு பெறுபவனின் 
கடைசி நாளை போல் மௌனபட்டு கிடக்கிறது 
என் காதல்!

நண்பனின் பிறந்தநாள் மகிழ்ச்சியை 
போல் அமர்களபடுகிறது
உன் அழகு!
நண்பனின் மரணத்தை போல் 
கலக்கம் கொள்கிறது 
என் காதல்!


காதலிக்கு தரும் ஒற்றை ரோஜாவை 
போல தனித்து நிற்கிறது 
உன் அழகு!
இறுதி சடங்கில் நசுங்கிவிடும் 
பூவை போலஆகிவிடுகிறது 
என் காதல்!

சிறுமி, காதலி, மனைவி, தாய், கிழவியாகி 
இறந்து விடுகிறது 
உன் அழகு!
இன்னும் பிரசவமாகாத கர்ப்பமாகதான்
இருக்கிறது 
என் காதல்!

 

சனி, 17 ஜூலை, 2010

இப்ப நான் என்ன செய்ய?

                             1 Message received என்று என் மொபைல் போனில் வந்தவுடன் நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று வந்திருந்தால் நிச்சயமாக அது அவன்தான் "ரமேஷ் ". அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி இதுவாகதான் இருக்கும் "I m ready. r u ready?".
                          அவன் எப்போதும் அப்படித்தான், நாங்கள் எங்கேனும் செல்வதாக இருந்தால், நான் கிளம்பிவிட்டனா என்று என்னிடமிருந்து வேகமான பதிலை பெறுவதற்காக தொடந்து 10 செய்திகளை அனுப்புவான்.
                          இன்று நான் கிளம்பி வாசலுக்கு சென்ற பிறகும் கூட அவனது செய்திகளை காணவில்லை. அப்போதுதான் என் மொபைல் போனில் "Govalu calling..." என்று வந்தது, அட! மிஸ்ட் கால் தர கூட பாலன்ஸ் இல்லை என்பவன் இன்று கால் செய்கிறானே என்று எடுத்தவுடன் அவன் சொன்னான்.
                            "மச்சி! ரமேஷ் முதல்ல போய் டிக்கெட் எடுக்க போறேன் சொல்லி கிளம்பி போனவன், போற வழியிலே ஆக்சிடென்ட் ஆகி ஹெல்மெட் போடததனாலே தலையிலே அடிப்பட்டு ஸ்பாட்லேயே போயடண்டா, நீ சீக்ரம் கிளம்பி வா மச்சி". 
                          இப்போது மீண்டும் 1 Message received என்று என் மொபைல் போனில் வந்தது, நான் அதை எடுத்து பார்பதற்குள் 1 என்பது மிக வேகமாக 2,3,4,5,..10 Messages received என்று கொட்டி தீர்த்து விட்டது.அவன்தான்,விபத்திற்கு முன் அவன் அனுப்பிய செய்தி இப்போதுதான் என் மொபைலில் டெலிவரி ஆகிறது.. இப்போது அந்த 10 செய்திகளும் தாங்கி வந்த ஒற்றை செய்தி  இதுதான் "Me going first, u follow me must"
                           நான் அவனை பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன், நீங்களே சொல்லுங்கள் , இப்போ நான் ஹெல்மெட் போடவா? வேண்டாமா?