வியாழன், 22 அக்டோபர், 2009

இதுதான் சரியான நேரம்!

              இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எதுக்கு என்று நீங்கள் கேட்கலாம் (நீங்க கேட்கலனா கூட நான் சொல்லுவேனே). தமிழ் வலை பதிவு உலகத்தில் ஏறத்தாழ அனைவரும் அந்த படத்தை பற்றி நல்ல விதமாகவும் , கேவலமாகவும், விமர்சித்தும்   பேசியபோது கூட நான் அந்த படத்தின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
(சரி! எழுதவில்லை).இப்போது அந்த படத்தை பற்றிய கருத்துகள் குறைந்ததே இந்த பதிவெழுத சரியான நேரம்.


             அது எந்த படம்? என்று நீங்கள் கேட்கலாம், ஆனாலும் நான் எப்படி சொல்லுவேன்? சொல்லாததுதானே இந்த பதிவை போடுவதற்கு அடித்தளம். கெட்ட வார்த்தையில் என்னை திட்டிவிட்டு நீங்கள் செல்ல நினைக்கலாம், இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் நான் இந்த பதிவு போட காரணம், நான் அந்த படத்தின் கதாநாகயனின் தீவிர ரசிகன்.(ரசிகன் என்றதும் விஜய் என்று நினைத்து கொள்ளாதீர்கள்)
             என்ன பதிவு போடலாம் என்று யோசித்தபோது   அந்த படத்தை பற்றி எழுதாதையே ஒரு பதிவாக எழுதிடலாம் என்று சிந்தித்ததின் பலன்தான் இந்த மொக்கை பதிவிற்கான அடித்தளம் (என்னது மறுபடியும் முதலேர்ந்தா?) .
            அது என்ன படமாக இருக்கும்  என்று நீங்கள் பின்னுட்டங்களில்
(ம்! ம்! பின்னுட்டங்கள் வாங்க எவ்வளோ செய்ய வேண்டி இருக்கு(அப்படியே போட்டுட்டாலும்!)) சொல்லலாம்.

 டிஸ்கி:தலிவர் படத்தை பத்தி எப்படியாவது எழுதுவோமில்ல (இருக்குஆனா இல்ல)   

 

4 கருத்துகள்:

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

ங்கொய்யால.........

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

ஐ.. இந்த புது வீடு (டெம்ப்ளேட்) நல்லாருக்கு

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

யோவ்... இந்த Archivesனு ஒன்னு இருக்குமே அது எங்கேய்யா??? காக்கா தூக்கிட்டு போச்சா??

rajan சொன்னது…

அய்யா அணிமா ! அந்த blog archives மட்டுமா இல்லை, என்னுடைய சுய விவரமும் காணவில்லை. தேடி கொண்டிருக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க!