சனி, 6 பிப்ரவரி, 2010

மீண்டு(ம்) வந்தேன்!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். இத்தனை நாளாய் நான் ஒரு வளர்ந்து வரும் ஒரு பதிவர்( சொல்லிகிட்டாங்க) என்னால் எழுதமுடியாமல் போனது துரசிர்ஷ்டம்தான்(எங்களுக்கு அதிர்ஷ்டமாச்சே). ஆனால்  இனிமேல் தொடர்ந்து எழுத முயற்ச்கிறேன். 
உங்கள்  ஆதரவை வேண்டுகிறேன் . மீண்டும்  ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். 
நன்றி!
      
----செ. சுந்தரராஜன்----

புதன், 2 டிசம்பர், 2009

கும்பகோணம் பதிவர்களே! 1 நிமிடம்

இந்த தலைப்பை எழுதும் முன் நான் 1000 முறை யோசித்தேன் , கும்பகோணம் பல அறிஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி இருந்தாலும் பதிவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது சந்தேகமாவே உள்ளது.


 எனவே இந்த பதிவை படிக்கும் கும்பகோணத்தை சேர்ந்த பதிவர்கள் (நீங்க பதிவர் இல்லைனாலும் பரவாயல்லை, படிச்சா என்னை தொடர்பு கொள்ளுங்கள்). என் நண்பர்கள் யாருக்கும் blog என்ற ஒரு விஷயம் பற்றி தெரியவில்லை. எனவேதான் நான் நாம் நகரத்தை சேர்ந்த வலைபதிவில் ஆர்வமுள்ளவர்களை சந்திக்க விரும்புகிறேன்..


என் கைபேசி எண்: 9994916530
மின்னஞ்சல் முகவரி: sundararajanit@yahoo.


மற்ற பதிவர்கள் மன்னிக்கவும், ஆணி மலையொன்று எனக்காக காத்திருப்பதால் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை, அடுத்த பதிவுக்கு ஒரு புதிய விஷயம் பிடித்திருக்கிறேன், அதுவரை கொஞ்சம் பொறுங்கள்....
சந்திப்போம்...
........செ.சுந்தரராஜன்....


      

புதன், 18 நவம்பர், 2009

ஒரு பாடல்! ஒரு விளம்பரம்!ஒரு நிகழ்ச்சி!

அந்த அடை மழை நாளில் தொலைகாட்சி என் கைகளில் சிக்கிய வேளையில் சட்டென்று ஒரு சேனலில் என் பார்வை நின்றது.  ஈரம் படத்தின் பாடல் அது, நிஜ மழை தந்த கடுப்பையெல்லாம் அந்த பாடலில் படமாக்கப்ட்டிருந்த மழை மறக்க வைத்தது. பெரும்பாலும் நீங்கள் அந்த பாடலை பார்த்திருக்க கூடும் எனினும் இதோ என் மகிழ்ச்சிக்காகவும் உங்களுக்காக....



---------------------------------------------------------------------------------------
ஹிரித்திக் ரோசஹ்னக்கு என்ன வயது இருக்கும் என்று தெரியவில்லை! என்னமாய் ஆடுகிறார் மனிதர். அந்த  புதிய ரிலையன்ஸ் விளம்பரதைதான் சொல்கிறேன் . இசையும் ஒளிப்பதிவும் ச்சே!வாய்ப்பே இல்லை . நான் முதலில் இந்த விள்மபரத்தின் இசையை மட்டுமே கெட்டு கொண்டிருந்தேன் . இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அந்த எலிகளாக மாறும் விஷயங்கள் என்னவென்று புரிகிறதா ? (புரிந்தவர்கள் பின்ன்டூங்களில் சொல்லுங்கள்)ஹோட்ஸ் ஆப் ஹிரித்திக் .

----------------------------------------------------------------------------------
விஜய்  டிவியில் மாலை 6.30 க்கு நாங்கதான் சூப்பர் ஸ்டார்ஸ் என்று ஒரு சீரியல் ( என்று நினைக்கிறேன்), அதில் ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் ஒரு தந்தையின் மன நிலையையும், அதற்க்கு பிறகு அவரிடம் மாற்றத்தை உணரும் அந்த சிறுமியின் மன நிலையையும் மிக எதாதார்தமாக படமாக்கி இருந்தனர். அருமை, முடிந்தால் நீங்களும் (ஒரு நாள் மட்டும்) பாருங்கள்....
---------------------------------------------------------------------------------
ரொம்ப  நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன், வோட்  போடுங்கப்பா!


...............செ.சுந்தரராஜன்..............

செவ்வாய், 10 நவம்பர், 2009

வர்ட்டா! வர்ட்டா! வர்ட்டா!என் ஊரே வர்ட்டா!

             என் திண்டுக்கல் வாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த வேலை முடிந்ததால் மீண்டும் கும்பகோணத்திற்கே செல்கிறேன். நினைத்து பார்த்தால் திண்டுக்கல் என் வாழ்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை அளித்திருக்கிறது.  நான் வலைபதிவு உலகிற்க்குள் நுழைந்ததே இங்கு வந்த பிறகுதான்.என்னதான் ஊருக்கு செல்வதை நினைத்து மகிழ்ந்தாலும் இங்கு கிடைத்த நண்பர்கள் லெனின், ஆண்டோ, விஜயகுமார் (வழக்கறிஞர்) எல்லாரையும் (யப்பா! எல்லார் பேரையும் போட்டாச்சு) விட்டு செல்வதை நினைக்கையில் மனது கனத்து போகிறது.    
-----------------------------------------------------------------------------------------------
                  திண்டுக்கல்லில்  இருந்த வரையில் (இன்று வரை) அண்ணனின் வீட்டில் தங்கி இருந்ததால், அவரின் பெண் குழந்தை k.g - II படித்து கொண்டிருக்கிறாள். அவளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட நான் செல்வது வழக்கம், தினமும் ஏதாவது ஒரு விசயத்திற்காக   என்னிடம் சண்டையிடும் அவள், நான் ஊருக்கு செல்வது அறிந்ததாலோ என்னவோ இன்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். அவளின் புன்னகை என்னை இங்கே இருக்க சொல்கிறதா? அல்லது நான் ஊருக்கு போவதிற்காக மகிழ்ச்சியா? தெரியவில்லை. ஆனாலும் அவளின் புன்னகை..
பெரியவர்கள் புன்னகைக்கும் போது அழகாக தெரிகிறார்கள்.
குழ்ந்தைகள்  புன்னகைக்கும்  போது புன்னகை அழகாக இருக்கிறது...         

இது அவள் இல்லை 
------------------------------------------------------------------------------------------------------    
 இனி தொடர்ந்து பதிவு எழுவது கொஞ்சம் கடினம்தான், முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ( ஏன்? நாங்க சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா?). நேரம் கிடைத்தால் உடனே வலைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.  எனவே அடுத்த பதிவுக்கு சிறிது நாள் ஆகலாம், உங்கள் பின்னூடகளுக்கு பதிலளிக்க நேரமானால் யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் (என்னமோ பின்னூட்டமா கொட்ற  மாதிரி).


மீண்டும் சந்திக்கலாம்



இது நான் தாங்க! 
--------செ.சுந்தரராஜன்--------


திங்கள், 9 நவம்பர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! ஸ்ரீ பெரும்புதூர்

             நான் சென்னையில் இருந்த அந்த ஆறு மாத காலத்தில் எனது வார இறுதி நாட்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர் ஆக்ரமித்து கொண்டது, எனது மற்றொரு அத்தை இங்குதான் உள்ளார். நான் ரசிக்கும் ஊர்களில்  இந்த ஊர்க்கென்று தனி இடமுண்டு. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் ஊரினை (ஊருக்கு வெளியிலதான், காஞ்சிபுரம் செல்லும் வழி) ஆக்ரமித்திருந்தாலும் அமைதியான ஒரு நகரம் (??).
ஸ்ரீ பெரும்புதூர்
             பொதுவாக பெரிய ஊர்தான் என்றாலும் நல்ல வளர்ச்சியடைந்த, எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு கிராமம் போன்றுதான் காட்சியளிக்கிறது. என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதற்குள் இந் நகரின் வளர்ச்சியை நினைத்தால்!!!!
 வரலாறு 

                     மேற்கண்ட படத்திலுள்ளது போல் விஷ்ணு பக்தர் ராமானுஜர் அவதரித்த இடம் என்பது மட்டுமே தெரியும், மற்றபடி தோற்றம் தெரியவில்லை. நிறைய திரைப்படங்களில் வருகிறது ராமானுஜர் கோவில் குளம், முக்கியமாக கே.எஸ்.ஆர் படங்களில்.     

சிறப்பம்சங்கள் 
                                     ஸ்ரீ பெரும்புதூர் என்றதும் நினைவுக்கு வருவது முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் என்பது சற்றே வருந்த கூடிய விஷயம்தான். எனினும் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நினைவிடத்தின் பராமரிப்பு அசர வைக்கிறது. நீங்கள் உள்ளே எங்கேனும் ஒரு சிறிய காகித துண்டினை கூட கண்டெடுக்க முடியாது.அவ்வளவு சுத்தம். (நான் கொண்டு குப்பை போட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால்,1. உள்ளே நுழைந்தவுடன் குப்பை போடும் ஆசை உங்களுக்கே போய்விடும்!
2.வெளியில் துப்பாகியுடன் இரண்டு பேர் உங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுவர்)..
 ராஜீவ் காந்தி நினைவிடம் சில புகைப்படங்கள்

 


                                      ஸ்ரீ பெரும்புதூரின் மற்ற சிறப்பம்சங்கள் என்றால் உலகளாவிய நிறுவனங்களின் கிளைகளும், ராமானுஜர் கோவிலும் தான்...
கோவில்கள்
                                      இங்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் ராமானுஜர் கோவில்தான் புகழ் பெற்றது. இக்கோவிலும் நிறைய திரைபடங்களில் வந்திருக்கிறது, நல்ல பெரிய கோவில். விஷ்ணு ஸ்தலம்...


   
  மக்கள்
                      இவ்வூரில் நிறைய பேர் தெலுங்கு பேசுபவர்கள், வீட்டை விட்டு வெளியே நிற்பவர்களை பார்ப்பது அபூர்வம்.யாருடனும் வீணாக பேசி பொழுதை கழிப்பதில்லை , ஆனால் அதற்காக எதாவது கேட்டால் கூட 5 நிமிடம் யோசித்து விட்டே பதில் சொல்கிறார்கள். கையில் நிறைய காசு வைத்திருந்தாலும் மேலும் எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனை உடையவர்கள்.
                  கொரிய தேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் கொரிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.(t.nagar bus stand லிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்களில் குறைந்தது 10 கொரிய நாட்டினர் இருப்பார்கள்).
பொருளாதாரம்
                              நிறைய திருமணமாகத வெளியூர்  இளைஞர்கள் இருப்பதால் பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். ஒரளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும் ஏழைகள் நிறைய உண்டு.


                                         நேரமிருந்தால் சென்னைவாசிகள்   கடற்கரைக்கும், city centre க்கும் போவதை விட  ஸ்ரீ பெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தையும், அதன் சுத்தத்தையும் அமைதியும் அனுபவித்து விட்டு வாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்.( அனேகமாக திண்டுக்கல்)
..............செ. சுந்தரராஜன்...........