சனி, 10 அக்டோபர், 2009

அய்யா! ராசா!


"may i come in sir?"

"அட!mr. ராஜன் ! வாங்க , வாங்க! என்ன விஷயம்?"என்றார் production engineer.

"sir, இன்னிக்கு எங்க பாட்டியோட முதல் நினைவு நாள், so எனக்கு மதியம் ஒரு 2 hrs permisson வேணும்'.

"அடடா! என்னங்க இன்னிக்கு production எல்லாம் submit பண்ணனுமே , இன்னிக்கு வேற MD வரேன்னு சொல்லிருக்காரு , நீங்க வேணுனா நாளைக்குஎடுத்துக்குட்டு enjoy பண்ணுங்களேன்".

மனதிற்குள் (அடேய்!ரப்பர் வாயா!)"sir! leave போட்டு enjoy பண்ற விஷயமா இது?, கிடைக்கும்னா கிடைக்கும்னு சொல்லுங்க! இல்லனா say no! நான் ஒன்றும் நினைச்சிக்க மாட்டேன்" என்றேன்.

"அதான்ங்க இன்னிக்கு கிடைக்கிறது கஷ்டம், நீங்க வேணுனா நாளைக்..."

"thank you sir",மனதிற்குள் (கேட்கறப்ப permisson கொடுக்க மாட்டான், நாளைக்கி leave போட்டு enjoy பண்றதாம், யார்க்கு வேணும் இவனுங்க leave)" என்றபடியேவெளியில் வந்து ,

"அண்ணே! ஒரு kings கொடுங்க". பற்ற வைத்தேன்.

"அய்யா! ராசா! டீ குடிக்க காசு கொடுயா"என்றபடி நின்றது ஒரு கிழவி.

நான் கடுப்புடன்"வேற, வேற எங்கயாவது பாரு"

"நீ கொடுத்தா கொடு, நான் வேற யார்ட்டயும் கேட்க மாட்டேன்" என்றது அது.

"என்னடா இது வம்பா போச்சு! த்தே! சொல்றேனில்ல, வேற பாரு"

"வுடு sir, கொஞ்ச நேரத்துல அதுவே போய்டும்"கடைக்காரர்.

"ராசா! அப்ப நான் வரட்டுமா "என்றது கிழவி.

"போ, போ"என்று சொல்ல வந்த நான்"பாட்டி என்னை என்னை சொல்லிகூப்பிட்ட?".

"ராசான்னு கூப்பிட்டேன்யா, ஏன் அப்படி கூப்பிட கூடாதா?"

"எங்கே இன்னொருவாட்டி கூப்பிடு"

"ராசா" .

"டீ குடிக்க காசு வேணுமா? எவ்வளோ வேணும்?" என்றேன்.

"ம்ம் 1000 ரூபா கொடு, ஒரு 5 ரூபா இருந்தா கொடுய்யா"

"த்தே கிழவி! உனக்கு ரொம்பத்தான் ஏத்தம், அய்யா எதோ கேட்டா.."

"அண்ணே! இருங்க நான் பாத்துக்கறேன்" என்றேன் கடைக்காரரிடம்.

"இந்தா பாட்டி 10 ரூவா வச்சிக்க'

"அய்யா! ராசா! 5 ரூவா இருந்தா கொடு போதும்"

"என்ட சில்லறை இல்லை, பரவால்ல வச்சிக்க "

"இந்தயா, என்ட இருக்கு சில்லறை"என்று 5 ரூபாய் திருப்பி கொடுத்தது அந்தபாட்டி.

"பாட்டி! ஒரு நிமிஷம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க"என்று காலில்விழுந்தேன்.

"மவராசனா இருயா"என்றுவிட்டு அந்த பாட்டி போக நான் அலுவகத்திற்குள் செல்ல திரும்பினேன்.

எல்லோர் பார்வையும் என் மேல இருக்க நான் யாரையும் கண்டுகொள்ளாமல் அலுவகத்திற்குள் நுழைந்தேன்.

"மச்சான்! treat எப்படா?" என்றபடியே வேகமாக வந்தான் ரமேஷ்.

"எதுக்கு? இப்ப treat"

"உனக்கு இந்த மாசத்திலிருந்து 3500 rs increment"என்றான்.

நான் உடனே ஜன்னல் வழியே தூரத்தில் அந்த பாட்டி போவதை பார்க்க, மழைஆரம்பித்தது.



15 கருத்துகள்:

சகாதேவன் சொன்னது…

அய்யா ராசா, மகராசனா இரு ராசா,
பாட்டி சொல்லை தட்டாத ராசா,
என்னை மறக்காத ராசா,
ஆபீசுக்கு போ ராசா,
நல்லா வேலை பாரு ராசா.

போதுமா "ராசா"

சகாதேவன்.

rajan சொன்னது…

நனறி கொள்ளு தாத்தா

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

அப்போ எனக்கு எப்போ ட்ரீட்????

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி!

rajan சொன்னது…

நன்றி anbudan-mani

//அப்போ எனக்கு எப்போ ட்ரீட்????//

கதையை கதையாக மட்டும் பார்க்கவும்(எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு, படுத்துறாய்ங்களே என்னையே)

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

சிறுகதைன்னு லேபிள்ல போட்டா நாங்க நம்பிடுவோமா?? உங்க உண்மைகதை அருமை...


ஒழுங்கா ட்ரீட் குடுங்க... இல்ல அந்த பணத்தையாவது அனுப்பி வைங்க..

rajan சொன்னது…

அப்ப போய் தமிழிஸ்ல வோட் குத்துங்க

பெயரில்லா சொன்னது…

தேவதைகள் எந்த ரூபத்திலும் வரலாம். தமிழ்மணம் ஓட்டு போட்டாச்சு

rajan சொன்னது…

நன்றி சின்ன அம்மிணி!

kanagu சொன்னது…

நல்லாயிருக்குங்க... :))

3500 ரூவா இன்க்ரிமெண்டுக்கு ட்ரீட் கொடுக்க மாட்டீங்களா :(

rajan சொன்னது…

நன்றி kanagu

//3500 ரூவா இன்க்ரிமெண்டுக்கு ட்ரீட் கொடுக்க மாட்டீங்களா :(//

கதையில என் நண்பனா ரமேஷ்க்கு கொடுத்துவிட்டேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன் . (எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு, படுத்துறாய்ங்களே என்னையே)

விக்னேஷ்வரி சொன்னது…

நல்ல முயற்சி ராஜன்.

rajan சொன்னது…

நன்றி விக்னேஷ்வரி

பின்னோக்கி சொன்னது…

எதோ ஜோக்குன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சேன். ம்ம்..ரொம்ப நல்லாயிருந்ததுங்க.. உயிரோட இருக்குற மனுசங்க பசி போக்கனும்ங்க. செத்து போனவங்க நம்ம வாழ்த்துவாங்க..அருமையா எழுதியிருக்கீங்க..

Sheik Mansoor சொன்னது…

மிக அருமை சுறா..