பண்ருட்டி
கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் 97 ஆவது km இல உள்ள நகரம்.இயக்குனர் மன்னிக்கவும் ஒளி ஓவியர் தங்கர் பச்சனின் சொந்த ஊர் (சொல்ல மறந்த கதை உள்ளிட்ட தங்கர் பச்சன் படங்களில் பார்த்திருக்கலாம்). பண்ருட்டியின் வரலாறு சரியாக தெரியாததால் பண்ருடிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பற்றிய வரலாறு இங்கே.
வரலாறு
நான் 4 ஆம் வகுப்பு படித்து(???)கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சில பிரச்சினைகளின் மூலம் எனக்கு பாதுகாப்பு குறைவு என்று கருதிய என் தந்தை இங்கு என் அத்தை வீட்டில் என் படிப்பை தொடர செய்தார். (ஒரு வருடம் மட்டுமே), இது மட்டுமில்லாமல் எந்த விடுமுறையாக இருந்தாலும் (சனி, ஞாயிறு தவிர) இங்கு வந்து டேரா போட்டுவிடுவேன் என்பதால் இவ்வூரின் சந்து, பொந்து எல்லாம் நல்ல பழக்கம்.
சிறப்பம்சங்கள்
பண்ருட்டி என்றதுமே நினைவுக்கு (எனக்கு) வருவது முந்திரி பருப்புகள், அந்தளவுக்கு இங்கு முந்திரி காடுகளும், முந்திரி தொழில்களும் அதிகம், ஆனால் பண்ருட்டி பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்கள் பலாபழம் இங்கு famous என்று நினைத்து கொண்டிருப்பார்கள், ஆனால் வடலூரும், நெய்வெலியும்தான் பலாபழத்திற்கு புகழ் பெற்றவை.
கோவில்கள்
பண்ருட்டியின் புகழ் மிக்க கோவில்கள் என்று பார்த்தால்
- சோமேஷ்வரர் திருக்கோவில்
- தன்வந்திரி கோவில் (நந்தவனம் கோவில்)
- திருவதிகை கோவில் (சிறிது தூரத்தில்)
மக்கள்
பண்ருட்டி ஒரு வணிக நகரமென்பதால் இங்கு செட்டியார் மற்றும் மார்வாடி இன மக்கள் அதிகம் உள்ளனர். பெரும்பான்மையோர் சொந்த தொழில் செய்கின்றனர். இங்கு பொற்கொல்லர்களும் நிறைய பேர் உண்டு. மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துகின்றனர் , ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை, நல்ல உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், கோபக்காரர்கள் (நேர்மை தவறும்போது)..
பொழுதுபோக்கு
பண்ருட்டியில் மக்கள் கூட இடங்கள் குறைவு என்ற போதும் கோவில்களும் , திரையரங்களும் , காந்தி பூங்காவும் அந்த குறையை சரி செய்கின்றன. அருகிலயே கடலூர் இருப்பதால் நேரமிருந்தால் உடனே silver beach தான்.
நீங்கள் பண்ருட்டி சென்றால் தங்குவதற்கு ஏற்ற இடம் ரங்கா லாட்ஜ் , ஊரின் புகழ் பெற்ற தங்குமிடம், எல்லா நிலையிலும் அறைகள் கிடைக்கும், உங்கள் வசதிகேற்றத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
மறுபடி சந்திப்போம்.
..............செ.சுந்தரராஜன்.........
5 கருத்துகள்:
enna unga oor build up aaaaaa. itho enga oora pathi(dindigul)TYPE PANNA arambichachu.
நன்றி லெனின்! பொருங்கள் நாணே உங்கள் ஓர் பற்றியும் எழுதுகிறேண் நன்றி லெனின்! பொருங்கள் நாணே உங்கள் ஓர் பற்றியும் எழுதுகிறேண்
உடனே பழைய பதிவுக்கு சென்று வோட்டுகளையும், பின்னூட்டங்களையும் பார்பவர்களுக்கு தமிழ் மறந்து போக கடவது //
ஹாஹாஹா...
நான் அடிக்கடி கடலூர் செல்ல காரணம் அங்கு தான் என் வருங்கால தங்கமணி படித்து கொண்டிருக்கிறார். //
ரைட்டு. இப்போ புரியுது. நடத்துங்க. வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்கள் பண்ருட்டி பத்தி.
நன்றி விக்னேஷ்வரி! உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துரைக்கும்...
அப்பா சாமீஸ் என்ன இது ஆளாலுக்கு ஊர பத்தி ஊத ஆரம்பிச்சாச்சா. இனி ஒரு யுகம் செய்வோம்னு யாரோ சொன்னது காதுல கேக்குது . அடங்குங்கப்பா
கருத்துரையிடுக