புதன், 7 அக்டோபர், 2009

ரத்தத்தின் நிறம் xxx?


விபத்தில் சிக்கி மயங்கி பின்
விழித்தவுடன் மருத்தவமனையில் இருப்பதை
உணர்பவனுக்கும்!

தங்கையின் பிரசவத்திற்கு யார்க்கும்
எளிதாக கிடைக்காத ரத்த பிரிவு
எளிதாய் கிடைத்தவனுக்கும்!

உறவினர்களே அற்ற திருமணத்தில்
மணமகனாய் இருந்தவனுக்கும்!

மழை நேரங்களில் பத்திரமாய்
வீடு திரும்பும் தந்தையின்
மகனுக்கும்!

மச்சான்!நீ என் ரத்தம்டா
என்பவனுக்கும்!

அந்த வார்த்தைகளை கேட்கும்
தகுதியுள்ள எவனுக்கும்!


ரத்தத்தின் நிறம் நட்பு!

------செ. சுந்தரராஜன்


கவிதைனா
காதலை பற்றி மட்டும்தான்(என் வரையில்) எழுதுனுமா என்று
சிந்த்திதற்கு பலன் இந்த படைப்பு. நட்பு என்றும்(எதையும்) கவிதைகளை
எதிர்பார்பதில்லை
என்றாலும், எழுத தோன்றியது!நான் நட்பை பற்றி எழுதிய முதல் கவிதை. யாரேனும்வேறெங்காவது நட்பு பற்றிய கவிதைகளை அறிந்திருந்தால் பின்னூட்டங்களில் சொல்லவும்

5 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கவிதைனா காதலை பற்றி மட்டும்தான்(என் வரையில்) எழுதுனுமா என்று
சிந்த்திதற்கு பலன் இந்த படைப்பு.//

இதுமாதிரி படைப்புகளைத்தான் எதிர்பார்க்கிறோம்

வாழ்த்துக்கள்

rajan சொன்னது…

நன்றி வசந்த்!
இந்த மாதிரி தொடாந்து எழுத முயற்சி செய்கிறேன்.

நன்றி தமிழினி!
உங்கள் யோசனைகளை சொன்னதற்கு நன்றி!
தொடாந்து வாருங்கள்!

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

ரத்தத்தின் நிறம் நட்பு...................

நண்பரே அற்புதம் .........கவிதை என்றால் காதல் தானா........................
நல்ல சிந்தனை

rajan சொன்னது…

நன்றி வெண்ணிற இரவுகள்....!
தொடாந்து வாருங்கள்!

பின்னோக்கி சொன்னது…

கலக்கிட்டீங்க... ரொம்ப நல்லா எழுதுறீங்க... தொடர்ந்து எழுதுங்க..