திங்கள், 9 நவம்பர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! ஸ்ரீ பெரும்புதூர்

             நான் சென்னையில் இருந்த அந்த ஆறு மாத காலத்தில் எனது வார இறுதி நாட்களை எல்லாம் ஸ்ரீ பெரும்புதூர் ஆக்ரமித்து கொண்டது, எனது மற்றொரு அத்தை இங்குதான் உள்ளார். நான் ரசிக்கும் ஊர்களில்  இந்த ஊர்க்கென்று தனி இடமுண்டு. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் ஊரினை (ஊருக்கு வெளியிலதான், காஞ்சிபுரம் செல்லும் வழி) ஆக்ரமித்திருந்தாலும் அமைதியான ஒரு நகரம் (??).
ஸ்ரீ பெரும்புதூர்
             பொதுவாக பெரிய ஊர்தான் என்றாலும் நல்ல வளர்ச்சியடைந்த, எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு கிராமம் போன்றுதான் காட்சியளிக்கிறது. என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதற்குள் இந் நகரின் வளர்ச்சியை நினைத்தால்!!!!
 வரலாறு 

                     மேற்கண்ட படத்திலுள்ளது போல் விஷ்ணு பக்தர் ராமானுஜர் அவதரித்த இடம் என்பது மட்டுமே தெரியும், மற்றபடி தோற்றம் தெரியவில்லை. நிறைய திரைப்படங்களில் வருகிறது ராமானுஜர் கோவில் குளம், முக்கியமாக கே.எஸ்.ஆர் படங்களில்.     

சிறப்பம்சங்கள் 
                                     ஸ்ரீ பெரும்புதூர் என்றதும் நினைவுக்கு வருவது முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடம் என்பது சற்றே வருந்த கூடிய விஷயம்தான். எனினும் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சியில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை நினைவிடத்தின் பராமரிப்பு அசர வைக்கிறது. நீங்கள் உள்ளே எங்கேனும் ஒரு சிறிய காகித துண்டினை கூட கண்டெடுக்க முடியாது.அவ்வளவு சுத்தம். (நான் கொண்டு குப்பை போட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால்,1. உள்ளே நுழைந்தவுடன் குப்பை போடும் ஆசை உங்களுக்கே போய்விடும்!
2.வெளியில் துப்பாகியுடன் இரண்டு பேர் உங்களை சோதனை செய்த பிறகே உள்ளே விடுவர்)..
 ராஜீவ் காந்தி நினைவிடம் சில புகைப்படங்கள்

 


                                      ஸ்ரீ பெரும்புதூரின் மற்ற சிறப்பம்சங்கள் என்றால் உலகளாவிய நிறுவனங்களின் கிளைகளும், ராமானுஜர் கோவிலும் தான்...
கோவில்கள்
                                      இங்கு நிறைய கோவில்கள் இருந்தாலும் ராமானுஜர் கோவில்தான் புகழ் பெற்றது. இக்கோவிலும் நிறைய திரைபடங்களில் வந்திருக்கிறது, நல்ல பெரிய கோவில். விஷ்ணு ஸ்தலம்...


   
  மக்கள்
                      இவ்வூரில் நிறைய பேர் தெலுங்கு பேசுபவர்கள், வீட்டை விட்டு வெளியே நிற்பவர்களை பார்ப்பது அபூர்வம்.யாருடனும் வீணாக பேசி பொழுதை கழிப்பதில்லை , ஆனால் அதற்காக எதாவது கேட்டால் கூட 5 நிமிடம் யோசித்து விட்டே பதில் சொல்கிறார்கள். கையில் நிறைய காசு வைத்திருந்தாலும் மேலும் எப்படி பொருளீட்டுவது என்ற சிந்தனை உடையவர்கள்.
                  கொரிய தேச நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் கொரிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்.(t.nagar bus stand லிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பவர்களில் குறைந்தது 10 கொரிய நாட்டினர் இருப்பார்கள்).
பொருளாதாரம்
                              நிறைய திருமணமாகத வெளியூர்  இளைஞர்கள் இருப்பதால் பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். ஒரளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும் ஏழைகள் நிறைய உண்டு.


                                         நேரமிருந்தால் சென்னைவாசிகள்   கடற்கரைக்கும், city centre க்கும் போவதை விட  ஸ்ரீ பெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தையும், அதன் சுத்தத்தையும் அமைதியும் அனுபவித்து விட்டு வாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்.( அனேகமாக திண்டுக்கல்)
..............செ. சுந்தரராஜன்...........    









5 கருத்துகள்:

விக்னேஷ்வரி சொன்னது…

என் வாழ்க்கையின் ஒய்வு நாட்களை இந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது //
இப்போவே ஏன்பா அந்த கவலை...

நல்ல தகவல்கள்.

வேறு கலர் ஃபான்ட் தவிர்த்தால் நல்லா இருக்கும்.(அடைப்புக்குள்)

கலையரசன் சொன்னது…

நன்றி படங்களுடன் கூடிய விபரங்களுக்கு..

rajan சொன்னது…

@நன்றி விக்கி!

// பிளாகர் விக்னேஷ்வரி கூறியது..

இப்போவே ஏன்பா அந்த கவலை...//

எல்லாம் ஒரு முன்னெச்சரிகை நடவடிக்கைதான்!

உண்மையிலே அமைதியான ஊர்

வருகைக்கும்! உங்கள்
ஆலோசனைக்கும் (கலர் பத்தி). அடுத்த பதிவுல சரி பண்ணிடலாம்.



@நன்றி கலை!

தொடர்ந்து வாருங்கள்!

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அருமை நானும் அங்கெல்லாம் சென்றிருக்கிறேன் , திண்டுக்கல் கூட ..

rajan சொன்னது…

@நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!
தொடர்ந்து வாருங்கள்!