செவ்வாய், 10 நவம்பர், 2009

வர்ட்டா! வர்ட்டா! வர்ட்டா!என் ஊரே வர்ட்டா!

             என் திண்டுக்கல் வாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இங்கு வந்த வேலை முடிந்ததால் மீண்டும் கும்பகோணத்திற்கே செல்கிறேன். நினைத்து பார்த்தால் திண்டுக்கல் என் வாழ்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை அளித்திருக்கிறது.  நான் வலைபதிவு உலகிற்க்குள் நுழைந்ததே இங்கு வந்த பிறகுதான்.என்னதான் ஊருக்கு செல்வதை நினைத்து மகிழ்ந்தாலும் இங்கு கிடைத்த நண்பர்கள் லெனின், ஆண்டோ, விஜயகுமார் (வழக்கறிஞர்) எல்லாரையும் (யப்பா! எல்லார் பேரையும் போட்டாச்சு) விட்டு செல்வதை நினைக்கையில் மனது கனத்து போகிறது.    
-----------------------------------------------------------------------------------------------
                  திண்டுக்கல்லில்  இருந்த வரையில் (இன்று வரை) அண்ணனின் வீட்டில் தங்கி இருந்ததால், அவரின் பெண் குழந்தை k.g - II படித்து கொண்டிருக்கிறாள். அவளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட நான் செல்வது வழக்கம், தினமும் ஏதாவது ஒரு விசயத்திற்காக   என்னிடம் சண்டையிடும் அவள், நான் ஊருக்கு செல்வது அறிந்ததாலோ என்னவோ இன்று பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். அவளின் புன்னகை என்னை இங்கே இருக்க சொல்கிறதா? அல்லது நான் ஊருக்கு போவதிற்காக மகிழ்ச்சியா? தெரியவில்லை. ஆனாலும் அவளின் புன்னகை..
பெரியவர்கள் புன்னகைக்கும் போது அழகாக தெரிகிறார்கள்.
குழ்ந்தைகள்  புன்னகைக்கும்  போது புன்னகை அழகாக இருக்கிறது...         

இது அவள் இல்லை 
------------------------------------------------------------------------------------------------------    
 இனி தொடர்ந்து பதிவு எழுவது கொஞ்சம் கடினம்தான், முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ( ஏன்? நாங்க சந்தோசமா இருக்கிறது பிடிக்கலையா?). நேரம் கிடைத்தால் உடனே வலைக்கு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன்.  எனவே அடுத்த பதிவுக்கு சிறிது நாள் ஆகலாம், உங்கள் பின்னூடகளுக்கு பதிலளிக்க நேரமானால் யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் (என்னமோ பின்னூட்டமா கொட்ற  மாதிரி).


மீண்டும் சந்திக்கலாம்



இது நான் தாங்க! 
--------செ.சுந்தரராஜன்--------


1 கருத்து:

விக்னேஷ்வரி சொன்னது…

திண்டுக்கல்ல இருந்து எந்த ஊருக்கு...