சனி, 29 ஆகஸ்ட், 2009

காதல் தவிர வேறில்லை !!!


நேரமறியாமல் தொடர்ந்து பேசி இருந்தாலும் விடை பெறும்போது நம்மிடையே இன்னும் மிச்சம் இருப்பது ?
காதல்தான்! வேறென்ன?
குறுஞ்செய்திகளில் "Happy Sunday"என்று ஒருவருக்கொருவர் விளையாடினாலும் நாம் இன்னும் பகிர்ந்து கொள்ளாத செய்தி?
காதல்தான்! வேறென்ன?
எனக்கு பிடிக்கும் என்று நீ நீலமும், உனக்கு பிடிக்கும் என்று நான் சிகப்பும், அணிந்த பிறகும் , நம் இருவருக்கும் பிடித்திருந்தும் நாம் அணிந்து கொள்ளாமல் இருப்பது?
காதல்தான்! வேறென்ன?
10 மணிக்குத்தான் அலுவலகம் என்றாலும் நானும் 8.30க்கே பேருந்து நிலையத்தில் உன்னருகே நிற்பதற்கு காரணம்?
காதல்தான்! வேறென்ன?
நாம் காதலிப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், இன்னும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க காரணம்?
காதல்தான்! வேறென்ன?----செ.சுந்தரராஜன்

2 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

அபவுட் மீ சூப்பர்ப்...

rajan சொன்னது…

நன்றி வசந்த்
//அபவுட் மீ சூப்பர்ப்...//
வாட் அபௌட் யு?