சனி, 29 ஆகஸ்ட், 2009

அணி மாறினார் ஜாகிர்


மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கர்நாடக வீரர் உத்தப்பா நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் ஜாகிர் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் கிரிக்கெட் போர்டால் துவங்கப்பட்ட அமைப்பு இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இவ்வமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு "டுவென்டி-20' தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின், இரண்டாவது தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. தொடருக்கு முன்பாக அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என கடந்த டிச., 28 ம் தேதி ஐ.பி.எல்., நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் படி திறமையான வீரர்களை ஒவ்வொரு அணிகளும் தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்ற ஜாகிர் கான், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளார். இவருக்குப் பதில் ராபின் உத்தப்பா, பெங்களூரு அணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: