சனி, 29 ஆகஸ்ட், 2009

இப்பவே கண்ணை கட்டுதே!!!! தமிழக் காவல்துறை !!!


"மின் வாரிய அலுவலகத் தில் கொள்ளை போன 2.50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, எங்களால் மீட்க முடியவில்லை' என தங்களது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு சர்ட்டிபிகேட் அளித்துள்ளது மாநகர போலீஸ். இதே போன்று, எண்ணற்ற வாகனத் திருட்டு வழக்குகளிலும், புகார்தாரர்களுக்கு சான்றளித்து கைகழுவி வருகின்றனர். களவு போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல், இப்படியொரு சான்றிதழை வாரி வழங்கவா போலீஸ் துறை செயல்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 2008, ஏப்., 5 நள்ளிரவில் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர், ஆறு கம்ப்யூட்டர், 1.5 கி.மீ., நீள மின் ஒயர், 50க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகளை திருடிச் சென்றனர்; இதன் மதிப்பு 2.50 லட்ச ரூபாய். இது குறித்து, அப்போதைய உதவி செயற்பொறியாளர் மணிவேலு, சரவணம்பட்டி குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித் தார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாரால், 16 மாதங்கள் கழிந்த நிலை யிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், நிர் வாக காரணங்களால் உதவி செயற்பொறியாளர் மணிவேலு, வேறு பணிக்கு மாற் றப்பட்டு, கதிர் வேல் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர், பொறுப்பேற்ற போது, அலுவலகத்தில் கம்ப் யூட்டர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண வசூல் பணிகள், கம்ப்யூட்டர்கள் இல்லாததால் பணிகள் முடங்கின.

கொள்ளை போன கம்ப் யூட்டர்களை மீட்டுத் தருமாறு சரவணம்பட்டி போலீசாரை தொடர்ந்து வற்புறுத்தினார். "கொள்ளையரை பிடிக்காவிடில் மின் வாரியம் விடாது போலிருக்கிறது' எனக் கருதிய போலீசார், வழக்கை மூடிவிட முடிவு செய்தனர். "உமது மின் வாரிய அலுவலகத்தில் திருட் டுப் போன சொத்துக்களை எங்களால் மீட்க முடியவில்லை' என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, உதவி செயற்பொறியாளரிடம் சர்ட்பிடிகேட் கொடுத்துவிட்டனர்; அவரும், அதை பெற்று அலுவலக கோப்பில் சேர்த்துவிட்டார். ரூ. 2.50 லட்சத்துக்கு நேர்ந்த கதி: திருட்டு நடந்தது அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகத்தில்; திருடப்பட்டவை மக்கள் வரிப்பணத்தில் வாங் கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற் றும் சொத்துக்கள்.

அரசு சொத்து களவு போனதற்கே இந்த நிலை என்றால், தனி நபர்களின் சொத்துக்கள் களவு போனால் என்னவாகும்? திருட்டு நடந் தால், குற்றவாளிகளை கைது செய்து, சொத் துக்களை மீட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே போலீசின் கடமை; பொறுப்பும் கூட. அதை விடுத்து, திருட்டு சொத்துக்களை மீட்க முடியவில்லை என வெள் ளைக் காகிதத்தில் சான்றளித்து, கையெழுத்திட போலீஸ் துறை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "மின்வாரிய கான்ட்ராக் டர் - வாரிய அதிகாரிகள் இடையேயான பண செட்டில்மென்ட் மோதல் காரணமாக, அலுவலக கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்கள் இரவில் களவாடப்பட்டன; இக்கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?' என கேள்வி எழுப்புகின்றனர்.

மின் வாரிய அலுவலக திருட்டு வழக்கில் மட்டுமின்றி, வாகனத் திருட்டு வழக் குகளிலும் போலீசார் முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வது கிடையாது. "வாகனத்தை மீட்க முடியவில்லை' என சான்று அளித்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்; இதனால், கிரிமினல்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.களவு போன சொத்துக்களை மீட்க முடியவில்லை, என சான்று அளிக்க போலீஸ் படை பலம் எதற்கு? புலன்விசாரணை எதற்கு? ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு ரைட்டர் மட்டும் போதாதா என்ற கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள் இல்லை: