செவ்வாய், 13 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்! கும்பகோணம் - 1

முதலில் இத்தொடருக்காக ஓட்டு பதிவு அனைவருக்கும் நன்றி! வாங்க பயணத்தை ஆரம்"பிக்கலாம்"....

கும்பகோணம் 
                                 எனது சொந்த ஊர் கும்பகோணதிலிருந்து 3 km தொலைவில் (தம்பி 3km ங்கறது தொலைவு இல்ல, கிட்ட) உள்ள கொரநாட்டு கருப்பூர் (கோலங்கள் serial ல கூட ஒரு தடவை காமிச்சாங்க)  அப்டிங்கற நல்ல வளர்ச்சியடைந்த (என்ன 190 cm இருக்குமா?) எல்லா வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு அருமையான கிராமம். ஆனா நாம இங்க நகரங்களை பற்றி மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்திருப்பதாலும், கும்பகோணம் பற்றிய தகவல்கள் நிறைய இருப்பதாலும்...

வரலாறு 
                                 இப்ப எல்லாரும் கலி முத்திடுச்சு, கலி முத்திடுச்சு அப்படிங்கராங்களே அதே மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவோ ஒரு தடவை இப்படித்தான் கலி முத்திடுச்சாம், உடனே நம்ம சிவபெருமான் கோபம் வந்து நீர் முலமா இந்த உலகத்தை அழிசிட்டராம், அப்பறம் கோபமெல்லாம் குறைஞ்சு மறுபடி உலகத்தை உருவாக்குரத்துக்காக (அவருக்கும் பொழுது போகணுமில்ல) ஒரு கும்பத்தில (கலசம், இப்பயும் புரியலனா குடம்) தன்னோட உயிரணுக்களை வைத்து அந்த நீரில் மிதக்க விட்டராம், அப்புறம் அது சரியான இடத்திற்கு வந்ததும் ஒரு வில்லில் அம்பை வைத்து அந்த குடத்தை பார்த்து விட்டராம், உடனே அந்த குடம் உடைஞ்சு உள்ள இருக்குற உயிரணுக்கள் எல்லாம் நீரில கலந்து உயிரினங்கள்(அமீபா?) எல்லாம் மறுபடி தோன்ற ஆரம்பிச்சுச்சாம், அந்த குடத்தை சிவபெருமான் உடைத்து உயிர் உருவாக செய்த இடம்தான் இன்று குடந்தை எனப்படும் கும்பகோணம் (கும்பம் கோணலாக இருந்ததால் கும்பகோணம்)


 சிறப்பம்சங்கள்  
  (i)மகாமகம் 
                              கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது மகாமகம்  (மகாமக குளத்தின் அமைப்பே கலச குடத்தின் அமைப்பில்தான் இருக்கும்). 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இக்குளத்தில் குளித்தால் நாம்  செய்த பாவங்களெல்லாம் போய் விடும் என்பது ஐதிகம் (அதுக்கு பிறகு செய்ற பாவங்கள என்ன பண்றதுனெல்லாம் கேட்கக்கூடாது).இப்போதான் 2002 ல் வந்தது இனிமேல் 2014 ல் வரும். முடிந்தால் வாருங்கள். 

 மகாமக குளம் சில புகைப்படங்கள்  















(ii)கோவில்கள் 
               கும்பகோணம் என்பது temple சிட்டி (கோவில்களின் நகரம்)  என்ற அடைமொழியாலும் அழைக்கப்படுகிறது.அந்தளவுக்கு திரும்பிய இடமெல்லாம் சிறியது முதல் பெரியது வரையிலான கோவில்கள் நகரை அழகுப்படுதுகின்றன. கும்பகோண முக்கிய கோவில்களின் பட்டியல்.
  1. ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்
  2. சாரங்கபாணி பெருமாள் கோவில் 
  3. சக்கரபாணி திருக்கோவில்
  4. நாகேஸ்வரர் கோவில் 
  5. சோமேஸ்வரர் கோவில் 
  6. காளஹஸ்திஷ்வரர்  கோவில்
  7. ஐராவதிஸ்வரர் கோவில் 
  8. பட்டிச்வரம் துர்கை அம்மன் கோவில் 
இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்(இதுக்கே கண்ணை கட்டுதே)...
சில கோவில்களின் புகைபடங்கள் இதோ
1.ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில்

2.சாரங்கபாணி கோவில்  







  
இன்னும் நிறைய படங்கள் இருந்தாலும் இவையிரண்டும் முக்கியமானவை ,மற்ற கோவில்களை நீங்களே கூட தேடி பார்க்கலாம். பாலகுமாரனின் "பாகசாலை" என்ற புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
 (iii) மக்கள்
                     இங்கு எல்லாவகையான மக்களும் பரவி  இருந்தாலும், பிராமணர்கள் அதிகம். மக்களுக்குள் வேற்றுமை கிடையாது, அன்பானவர்கள்,அதிகம் பேசுபவர்கள் , அப்பாவிகள், பொழுது போக்கு விரும்பிகள், ஆனால் இங்கு கோவில்களையும், மகாமக குளத்தையும் தவிர  மக்கள் கூடுமளவுக்கு பெரிய இடங்கள் குறைவு. வணிகம் செய்வர்களும் உண்டு.
  (iv) பொருளாதாரம்    
                      பொருளாதராத்தை பொறுத்தவரையில் ஒன்றும் குறைவில்லை, பெரும்பான்மையான மக்கள் தன்னிறைவு அடைந்தவர்கள்தாம். சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயம் மூலம் தானியங்கள் எளிதில் கிடைப்பதால் no prpblem. காவேரி ஆறு ஓடுவதால்(????) தண்ணீர் பிரச்சினையும் கிடையாது. 
             

         நான் ஏதோ ஒரு பதிவில நம்ம ஊரை பற்றி சொல்லிவிடலாம்னு நினைத்திருந்தேன், எழுத, எழுத ஏதோ ஒன்றை விட்ட மாதிரியே இருக்கு, எனவே நாளைக்கும் கும்பகோணம்தான்.
           நாளைக்கி சில பல முக்கியமான
"அம்சங்கள்" (ஹி! ஹி!)  பற்றி பாக்கலாம். 
அதுக்கு முன்னாடி படிச்சோமா, போனோமான்னு இல்லாம தமிழிஷளையும், தமிழ்மனத்திளையும் மறக்காம வோட் போடுட்டு போங்கோ!

1 கருத்து:

புதுப்பாலம் சொன்னது…

தொடருங்கள்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com