திங்கள், 12 அக்டோபர், 2009

சில நேரங்களில்! சில ஊர்களில்!

பயணம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத(கூடாத) ஒன்று. நான்இன்றைய வரையில் நான் சென்று வந்த சில நகரங்களை (த்தோடா! இவரு கிராமத்துக்கு போவவே மாட்டாரு) பற்றிய சில பல சுவாரசியமான   (அத நாங்கசொல்லணும்) தகவல்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர் பதிவாகபோடலாமென்று இருக்கிறேன்(நாராயணா!இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா). உங்களிடம் இருந்து வரும் ஆதரவை பொறுத்து எழுதவதை பற்றிமுடிவு செய்ய வேண்டும்(இல்லனா மட்டும் இவரு விடர போறாரு).

அதற்க்கு முன் இத்தொடர் பற்றி சில:

  1. இத்தொடர் முழுதும் தமிழகத்தின் நகரங்கள்(நீ போய்ட்டு வந்த  நகரங்கள்னுசொல்லு)பற்றி மட்டுமே .
  2. நீ எதுக்கு அந்த ஊருக்கு போன என்பது போன்ற கேள்விகள் தடை செய்யபடுகின்றன.சொல்வதை படித்து கருத்து மட்டும் சொல்லும் என் போன்ற நல்ல உள்ளங்களை மிகவும் வரவேற்கிறேன்.(நா கோவமா கிளம்பறேன், என்ன பாத்து என்ன வார்த்தை சொல்றான்)
  3. அந்தந்த ஊர்களின் தன்மை, மக்கள், பொருளாதாரம்(மன்மோகன் சிங் உன்னத்தான் தேடுராரம்)போன்றவை பற்றி என்னால் முடிந்தவற்றைஎழுதுகிறேன்.(நைனா figure ங்களை வுட்டுடியே).
  4. தொடர் எழுதுவதால் மற்ற இடுகைகள் குறையும் என கனவு காண வேண்டாம், மற்ற சேவைகளும் தொடரும் ஏன்னா நமக்கு பிடுங்க வேண்டிய  ஆணிகள் மிக மிக குறைவு.
முதலில் எனது ஊரான கும்பகோணம் பற்றி தொடங்குகிறேன்.(அஸ்க்கு புஸ்க்குநாளைக்குதான்)..


பயணத்திற்கு தயாரா?
7 கருத்துகள்:

Dr.P.Kandaswamy சொன்னது…

தொடர்க!

rajan சொன்னது…

நன்றி Dr.P.Kandaswamy சார்!

தொடர்ந்து வாருங்கள்!

பின்னோக்கி சொன்னது…

தொடருங்க... ஒரு தேசாந்திரி மாதிரி கட்டுரை எதிர்பார்க்கிறேன்(றோம்). வாழ்த்துக்கள்.

பின்னோக்கி சொன்னது…

ஏங்க..சைக்கிள்ள போறது நீங்களா ? எந்த ஊருங்க அது ? கும்பகோணம்னு சொல்லிறாதிங்கோவ்வ்வ்

பின்னோக்கி சொன்னது…

ஐயா உங்களை தொடர முடியவில்லை..கொஞசம் பாலோயர்ஸ் இணையுங்கள்...

rajan சொன்னது…

கருத்துரைகளை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்ட பின்னோக்கி அவர்களே மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

நானும் blog ஆரம்பிச்ச நாளிலிருந்து தேடுகிறேன் follwers gadget மட்டும் இணைக்க முடியவில்லை. இது ஒரு சோதனை முயற்சி என்ற தகவல் மட்டுமே உள்ளது. என்ன செய்யலாம்?

rajan சொன்னது…

//ஏங்க..சைக்கிள்ள போறது நீங்களா ?//

என்னை போல் ஒருவன்