வெள்ளி, 23 அக்டோபர், 2009

மஹாஜனங்களே!எனக்கொரு சந்தேகம்!

                       

   மஹா ஜனங்களே! நானும் ரொம்ப நாளா இத பத்தி பேசணுமுன்னு நினைத்து பின் மறந்து போய்டுவேன்.
                   
                                 அதாவது ஆணியவாதி!பெண்ணியவாதி! அப்டின்னு ரெண்டு group இருக்காங்கனு சொல்றீங்க.இந்த ஆணியம்னா என்ன? பெண்ணியம்னா என்ன? முதல்ல ஆண், பெண் அப்டின்னு ரெண்டு பிரிவு இருக்கா? இல்ல எல்லாம் ஒன்னுதானா? ஏன்னா  இவிங்க அடிச்சிகிரத பாக்கும்போது என்னமோ உலகத்துலேயே ஆண் இனம் மட்டும்தான் இருக்கறதாவும், பெண் அப்டிங்கரவங்கலாம் அந்த இனத்த விட்டு தள்ளி வச்ச மாதிரியும்,   பின் அந்த பதவிய பிடிகிரதுக்காக போராட்டம் பண்ற மாதிரியும் "உரிமைகளை பெறும் வரை ஓயமாட்டோம்!" அப்டினெல்லாம்  கோஷம் போடுறாங்க!
                   
                               முதல்ல இந்த பெண்ணியவாதி ஆளுங்ககிட்ட போவோம். நீங்க பெண் அப்டிங்கரத்தை ஒத்துகிறீங்களா? இல்ல மேல சொன்ன மாதிரி ஆண் அப்டிங்கறது ஒரு  பதவி, அதை  நோக்கி போராடத்தான் போறோம்னு சொல்லுவீங்களா?
  1. ஆண் உங்களை சித்ரவதை பண்றதா சொல்ற காரணங்கள்னு பாத்தா, வீட்டு வேலை செய்ய சொல்றது , அடக்கமா இருன்னு  சொல்றது போன்றவைதான் இருக்க முடியும். இது அடக்கு முறை அப்டின்னா நீங்க உங்க கணவரையோ! அப்பாவையோ வேலைக்கு போயோ, தொழில் செய்தோ வருமானம் கொண்டு வாங்கனு சொல்றது அவங்கள பொறுத்த வரையில் அடக்கு முறையா இருக்கலாம் இல்லையா? (நியாயம்தானே)
  2. பேருந்துகளில் போகும்போது பெண்கள் இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்ததை கண்டித்து ஒரு பெண் சண்டையிடும்போது மன்னிக்கவும் வாக்குவாதம் செயும்போதோ, உரிமைகளை கேட்டு பெறும்போதோ சப்போர்ட் க்கு வர மற்ற பெண்கள், அதே மாதிரி ஒரு ஆண் இருக்கையில் பெண் அமர்ந்தால் ஆண் வாக்குவாதம் செய்யாத பட்சத்தில், அந்த பெண்ணிடம் இருந்து ஆணுக்கு இருக்கையை பெற்று தருவதில்லை. போராளிகளுக்கு இது அழகா? (உண்மைதானே)
  3. ஆணுக்கு பெண் சமம்னும், எங்களுக்கும் எல்லாம் தெரியும்னு சொல்றீங்க! ஆனா ஏதானும் இக்கட்டான சூழ்நிலையில் ஆண்களிடம் சார் ladies தனியா இருக்கோம். help பண்ணுங்க அப்டின்னு கேட்பதேன்? நீங்களே கூட செய்து கொள்ளலாம் இல்லையா? (வாஸ்தவம்தானே)
  4. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு கீழானவர்கள் பெண்கள் என்று சொன்னதில்லை. தம்பதியருக்குள் ஏதானும் சண்டை வந்து பெண்களை அடிக்கும் போதோ, திட்டும்போதோ 'போயும் போயும் பொம்பளைகிட்ட போய் உன் வீரத்தை காட்டுறீயே?" அப்டின்னு கேட்டு உங்களை நீங்களே ஏன் தாழ்த்தி கொள்றிங்க. ஏன் வீரமான பெண்கள் இல்லவே இல்லையா? (இருக்கலாம்) 
  5. எங்கயாவது நிற்கும் போது  பெண்கள் queue வில்  உங்கள் ஆண் பிள்ளைகளை ( 12வயது வரை என்று கொள்க) உங்களுடன் சேர்த்து கொள்ள ஆர்வமாயிருக்கும் நீங்கள்  மற்ற பெண்களின் ஆண் பிள்ளைகளை சேர்த்து கொள்ள ஆச்சேட்பம் தெரிவிப்பது ஏன்? (என்ன கொடுமை சார்(மேடம்) இது?)  
  6. இந்த கருத்தை கூறுவதற்காக சகோதரிகள் யாரும் என்னை கோபிக்க வேண்டாம். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று பெரியர்வகள் கூறியது சிந்திக்க தக்க ஒன்றுதான்.இதை நீங்களே பல இடங்களில் கண் கூடாக பார்க்கலாம்  (யா!யா!).
  7. உங்களுக்கு பெண் என்று  தாழ்வு மனப்பான்மை அதிகமோ என்று யோசிக்கும்படித்தான்   இருக்கிறது உங்கள் போராட்டங்களுக்கான காரணங்கள் எல்லாம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது. நீங்கள் பெண்களாக இருக்கும் வரைதான் உங்களுக்கு இப்பெருமை.
இறுதியாக ஆண்களுக்கு "அண்ணனுங்களா! நமக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, விட்டு கொடுத்துவிட்டு போய்ட்டே  இருக்கலாம். ஏன்னா நமக்கு குயந்தை மனசு." (பெண்கள் யாரும் "ஏன் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டமா?" என்று சண்டைக்கி சாரி! சாரி! வாக்கு வாதத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறது)
......................கருத்து கந்தசாமி ...........
         
                        

கருத்துகள் இல்லை: