திங்கள், 26 அக்டோபர், 2009

உனக்கென்ன?


என் கனவுகளில் நீ வருவதில்லை
நீயே எனக்கு கனவாகத்தான் 
இருக்கிறாய்!  


உன் பின்னால் வந்த ஆண்களை விடுத்து
மக்கள் தொகை கணக்கிடுவதற்கு
பத்து விரல்களே அதிகம்!


மின்னலை படம் பிடித்ததால் தான்
என் புகைப்பட கருவி கெட்டு விட்டதாய்
நண்பன் சொன்னான்!
நான் உன்னை பற்றி சொன்னேன்!
ஆமாம் நீ கூட ஒரு வகையில்
மின்னல்தானே!


செயற்கை மூளை பொருத்தப்பட்ட
உலகின் முதல் ரோபோ உன்னைத்தான்
தேடிகொண்டிருக்கிறதாம் காதலிக்க!
பாவம் அதற்க்கு தெரியாது
நீ இயற்கை மூளை படைக்கப்பட்ட
ஒரு எந்திரம் என்று!    


உனக்கென்ன நீ பெண்ணாக
பிறந்துவிட்டாய்!
ஆணாக பிறந்திருப்பது
நானல்லவா!
..........செ.சுந்தரராஜன்.......

5 கருத்துகள்:

ரோஸ்விக் சொன்னது…

//உன் பின்னால் வந்த ஆண்களை விடுத்து
மக்கள் தொகை கணக்கிடுவதற்கு
பத்து விரல்களே அதிகம்!//

அருமையான வரிகள் தல. கலக்குங்க வாழ்த்துக்கள்.


http://thisaikaati.blogspot.com

விக்னேஷ்வரி சொன்னது…

நல்லாருக்கு. நிறைய எழுதுங்க.

lenin சொன்னது…

ippadi eluthi eluthiye pillaikala thooki vitareenga.... pasangala pathi ethavathu eluthungappaaaaaaaaaaa.

r.selvakkumar சொன்னது…

உன் பின்னால் வந்த ஆண்களை விடுத்து
மக்கள் தொகை கணக்கிடுவதற்கு
பத்து விரல்களே அதிகம்!

சுவையான கற்பனை...

rajan சொன்னது…

நன்றி ரோஸ்விக்நன்றி விக்னேஷ்வரி

நன்றி லெனின்

அடுத்து உங்களை (நண்பர்களை) பற்றி ஒரு கவிதை தயார் செய்து கொண்டிருக்கிறேன், அதுவரை பொறுங்கள்!

நன்றி செல்வகுமார், தொடர்ந்து வாருங்கள்!