ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தேவதைகள் விற்பவன்!அன்றொரு நாள் 
தேவதைகள் விற்பவன் ஒருவன்
என் வீதி வழியே சென்றான்!


அவன் தேவதைகள் என்று 
காட்டிய கூட்டத்தில் நீ மட்டுமே 
என் கண்களுக்கு புலப்பட்டாய்!நான் உன்னை கேட்டேன்
அவன் 
100 காசுகளும்,அவற்றை எடுத்துச் 
செல்ல கூடையும் கேட்டான்!

நான் உன்னை பார்த்தபடியே 

"என்னிடமேது அவையிரண்டும்?"
என்று கேட்க,


"மீண்டுமொருமுறை தேவதைகள் 
மேல் ஆசை கொள்ளாதே" என்று 
கூறிவிட்டு கிளம்பினான்!

நான் அவனிடம் இருந்த 
உன்னையே பார்த்து கொண்டிருக்க 
அவனுடன் சிறிது தூரம் சென்ற நீ 
என்னை பார்த்து புன்னகையொன்றை 
உதிர்த்தாய்!

அன்று முதல் நீ 
இருந்து கொண்டுதான் இருக்கிறாய்
என்னிடம் உண்மையாகவும்
அவனிடம் பொம்மையாகவும்!   
-----செ. சுந்தரராஜன்

7 கருத்துகள்:

அருண். இரா சொன்னது…

kalakkals !!

அன்புடன் அருணா சொன்னது…

அழகான தேவதைக் கவிதை........

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] சொன்னது…

நன்று

அருண். இரா சொன்னது…

மச்சி ..!!! மழைக்!!காதலன் !! பக்கம் வந்ததுக்கு மிக்க நன்றி !! தபு சங்கர் விசிறி யா நீங்களும் !! பலே பலே ..தேவதை கவிதை லேய டவுட் வந்துச்சி. சூப்பர் !!

அப்படியே இங்க வந்துட்டு போங்க (http://machaanblog.blogspot.com/) .சிறப்ப இருக்கும்

rajan சொன்னது…

நன்றி அருண்
நன்றி அருணா
நன்றி [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]

rajan சொன்னது…

நிச்சயம் வருகிறேன் அருண்,
தேவதைகள் என்ற வார்த்தையே தபு சங்கரை படித்த பிறகுதான் ரசிக்க ஆரம்பித்தேன்.

பின்னோக்கி சொன்னது…

நல்லாயிருக்குங்க.. நீங்க பார்த்த பார்வையிலயே அந்த பொம்மையின் ஆன்மாவை எடுத்துக்கிட்டு வந்துட்டீங்க...அருமை